Free Space

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் பரீட்சை இரத்து..


கடந்த 22.10.2016 ம் திகதி கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் வெற்றிடங்களை ஏற்ப நியமிப்பதற்காக கிழக்கு மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவினால் போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு குறித்த பரீட்சை வினாத்தாள் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரினால் அவசர பிரேரணை முன் வைக்கப்பட்டு இரத்துச் செய்யும்படி வேண்டியதை தொடர்ந்து கெளரவ கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நசீர் அஹம்மத் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ,சபை தவிசாளர் கெளரவ கலப்பதி அவர்களால் கிழக்கு மாகாண முதல்வர் எதிர் கட்சி தலைவர் உதுமான் லெப்பை,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம் உட்பட்ட ஐவர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக 11.11.2106 குறித்த குழுவினால் ஆராயப்பட்டு குறித்த பரீட்சை தொடர்பாக இரத்துச் செய்து மீண்டும் பரீட்சை நடாத்தும்படி கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஊடாக சபை செயலாளரினூடாக பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்க குறித்த குழுவினால் கையெழுத்திட்ட பரிந்துரை அனுப்பி வைக்கபட்டுள்ளது எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் பரீட்சை இரத்து.. கிழக்கு மாகாண பட்டதாரிகளின் பரீட்சை இரத்து.. Reviewed by Madawala News on 11/11/2016 06:19:00 PM Rating: 5