குருணாகல் தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் ...


குருணாகல் தெலியாகொன்ன கண்டி வீதியில் அமைந்துள்ள தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் மீது சில விஷமிகளால்  2016. 11. 04ம் இரவு சுமார் 11. 30 அளவில் கல்வீச்சு தாக்குதலொன்று நடாத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வீச்சு தாக்குதல் இடம்பெறும் போது பள்ளிவாசலில் மௌலவிகள் இருவர் மட்டும் இருந்தாலும் தாக்குதல் நடாத்தியவர்கள் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால்  பள்ளிவாசல் கண்ணாடிகள் சிலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இது சம்பந்தமாக  குருணாகல் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டி வீதியில் அமைந்துள்ள CCTV கமராக்களில் பொலேரோ கெப் வாகனத்தில் சிலர் இந்த தாக்குதலுக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குருணாகல் தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் ... குருணாகல் தெலியாகொன்ன ஜும்ஆப் பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் ... Reviewed by Madawala News on 11/05/2016 07:08:00 AM Rating: 5