Accaddemy

வந்தோரை வாழ வைக்கும் புத்தளத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி




இப்னு பதூதா கண்ட முஸ்லிம்களின் வரலாற்று சிறப்பு மிக்க நகரமான, வந்தோரை வாழ வைக்கும் புத்தளத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி கடந்த வெள்ளி முதல் ஆரம்பம்....

முஸ்லிம் சமூகத்தத்தை வழி காட்டுவதாக, கொண்ட ஒரு கட்சியின் தலைவர் என்று வினாடிக்கு வினாடி மார்தட்டிக் கொள்ளுவது மட்டுமல்லாது ஒரு குத்பா பிரசங்கம் ஆரம்பிப்பது போல் ஹம்து ஸலவாத்து ஓதி பேச ஆரம்பிக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் , தெருக் கூத்தாடிகளான தமிழ் சினிமா கூத்தாடிகளை உதாரணம் காட்டி பேசியது மட்டுமல்லாது, இலங்கை முஸ்லிம்களின் மதிப்பிற்குரிய ஒரு மரணித்த சகோதரரை பற்றி தரக் குறைவாக கதைத்த இவருடைய தகுதி பற்றி மக்கள் அறிந்து கொண்டார்கள்? 

தனது சுய நல அரசியலுக்கு கண்டி, அம்பாறை முஸ்லிலிம்களை பிரதேச ரீதியாகவும், பசப்பு வார்த்தைகளை பிரயோகித்து பல மாகாண சபை உறுப்பினர், அமைப்பாளர், உயர் பதவிகள் போன்ற வார்த்தைகளை கொண்டு ஆசைப்படுத்தி பல கூறுகளாவும், பல பிரிவுகளாகவும் பிரித்து அரசியல் செய்தது போல் புத்தளம் மண்ணிலும் அமைச்சர ஹக்கீம் தனது அரசியல் திரு விளையாடலை காட்ட எத்தனிக்கின்றார். 

புத்தளம் மண்ணுக்கு நீண்ட கால குறையாக காணப்படட பாராளு மன்ற உறுப்பினரை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது கட்சியிக்கு கிடைத்த ஒரு தேசிய பட்டியல் அங்கத்துவத்தை புத்தளம் மண்ணுக்கு வழங்கி கெளரவித்ததை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். 

வடக்கு கிழக்கு இணைவு,புத்தளம் கழிவு பிரசினை, இறக்காமம் மாணிக்கமடுவில் புத்தர் சிலை,முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் திருத்தம், குருணாகல், நிக்கவரட்டிய பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல், தெலியாகொன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல். வடக்கு, கிழக்கில் 100 விகாரைகளை புனரமைக்க அமைச்சரவை அனுமதி, கிண்ணியாவில் புத்தர் சிலை வைக்க முயற்சி இன்னும் இதை போல் பல பிரசினைகள் எமது சமூகத்தில் எதிர் கொண்டுள்ள இந்த கால கட்டத்தில் இவற்றைப் பற்றி எதையும் பேசக் கூட விரும்பாமல் தன் நிலை மறந்து செயல் படும் ஒருவராகத்தான் அமைச்சர் ஹக்கீம் அவர்கள் காணப்படுகிறார். 

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மக்கள் சேவையால் கவரப்பட்டு அவருக்கும் அவர் கட்சிக்கும் செல்வாக்கு அதிகரித்து வரும் பகுதிகளுக்கு சென்று இவ்வாறு உளறுவதற்காகவா எமது சமூகம் உங்களை எம் பி யாக்கியுள்ளது? 

1994 ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதி தான் கொடுத்த ஒரு வாக்குறுதிக்கு மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப் தனது பாராளுமன்ற பதவியே கூட இராஜினாமா செய்த கட்சியில் தோன்றிய இன்றைய தலைவர் பதவிக்காக கட்டியுள்ள வேட்டியேயும் கழட்டி விட்டு ஆடுவதற்கு கூட தயங்க மாட்டார் .

#இஸ்ஸத்_ரஹ்மான் (புத்தளம்)
தலைவர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், 
பிரான்ஸ் கிளை.

வந்தோரை வாழ வைக்கும் புத்தளத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி வந்தோரை வாழ வைக்கும் புத்தளத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் சதி Reviewed by Madawala News on 11/16/2016 07:54:00 AM Rating: 5