Ad Space Available here

எமது அரசியல் நிலைப்பாடே சரியானது ! புத்தியுள்ள‌ முஸ்லிம்க‌ள் பாராட்டுகிறார்க‌ள்...


இன்று ந‌ல்லாட்சியை கொண்டு வ‌ந்த‌ முஸ்லிம்க‌ள் ந‌ல்லாட்சியை திட்டித்தீர்ப்ப‌த‌ன் மூல‌ம் உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌ த‌ர‌ப்புட‌ன் நிற்கும் நிலைப்பாடு மிக‌ச்ச‌ரியான‌தே என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

க‌ட்சி காரியால‌ய‌த்தில் ந‌டைபெற்ற‌ ஆத‌ர‌வாள‌ர் ச‌ந்திப்பில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌ போது,

உல‌மா க‌ட்சி ஏன் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கு ஆத‌ர‌வாக‌ மீண்டும் செய‌ற்ப‌டுகிற‌து என‌ சில‌ர் எம்மை கேட்கிறார்க‌ள். எம‌க்கு ம‌ஹிந்த‌வோ மைத்ரியோ ர‌ணிலோ முக்கிய‌ம் அல்ல‌.

முஸ்லிம் ச‌மூக‌த்துக்கான‌ சுய‌ந‌ல‌ன‌ற்ற‌ அர‌சிய‌லை நாம் செய்வ‌தோடு ந‌ம‌து ச‌மூக‌த்துக்கான‌ உரிமை அர‌சிய‌லை எவ்வாறு செய்வ‌து என்ப‌த‌ற்கான‌ வ‌ழி காட்ட‌லை மிக‌ச்ச‌ரியாக‌ செய்கிறோம் என்ப‌தை ச‌ரியாக‌ எம‌து அர‌சிய‌லை ஆய்ந்து பார்க்கும் எவ‌ராலும் புரிந்து கொள்ள‌ முடியும்.

க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது அனைத்து முஸ்லிம்க‌ளும் முஸ்லிம்
 பிர‌ப‌ல‌ க‌ட்சிக‌ளும் ஒரு ப‌க்க‌ம் நின்ற‌ போது நாமும் கும்ப‌லோடு கும்ப‌லாக‌ நின்று ச‌மூக‌த்தின் கை த‌ட்ட‌லை பெற்றிருக்க‌லாம்.  அவ்வாறு ந‌ட‌ந்திருந்தால் இன்று முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் முஸ்லிம்க‌ளுக்காக‌ பேசும் எதிர்க்குர‌ல் இல்லாது போயிருக்கும். நாமும் அரச‌ங்க‌த்தை நோகாம‌ல் எதையாவ‌து பேசிவிட்டு இன்றைய‌ சில‌ முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் ச‌மூக‌த்தை ச‌மாளிப்ப‌து போன்று ச‌மாளித்து விட்டு ஏமாற்றிவிட்டு போக‌லாம்.  

ஆனாலும் ஜ‌னாதிப‌தி தேர்த‌லின் போது ஒரு விட‌ய‌த்தை நாம் தெளிவாக‌ சிந்தித்தோம். ந‌ம‌து நாட்டில் சியோனிச‌ம் கால் ப‌தித்து விளையாட‌ அனும‌திய‌ளிப்ப‌தா பொதுப‌ல‌சேனாவை இய‌க்கும்
 ஹெல‌ உறும‌ய‌ என்ற‌ தீவிர‌வாத‌ க‌ட்சி இருக்கும் ப‌க்க‌ம் போவ‌தா என்று முழுக்க முழுக்க‌ ச‌மூக‌ம் ப‌ற்றி ம‌ட்டுமே சிந்தித்தோம். தேர்த‌லில் எம‌து த‌ர‌ப்பு தோல்விய‌டைந்த‌தும் அர‌சுப்ப‌க்க‌ம்  தாவும் ச‌ராச‌ரி முஸ்லிம் அர‌சிய‌லை நாம் செய்ய‌வில்லை. அதே வேளை முஸ்லிம் ச‌மூக‌த்தின் அபிலாஷைக‌ளுக்கு குறுக்கே நிற்ககூடாது என்ப‌த‌ற்காக‌ தேசிய‌ அர‌சாங்க‌த்துட‌ன் இணையாது அத‌ற்கு ஆத‌ர‌வு தெரிவித்தோம்.

அர‌சாங்க‌த்தின் நூறு நாள் திட்ட‌த்தில் முஸ்லிம்க‌ளின் உரிமைக‌ள் எதுவும் கிடைக்காத‌ போது நாம் க‌ட்டாய‌ம் பேச‌த்தான் வேண்டும் என்ப‌தை உண‌ர்ந்து செய‌ற்ப‌ட்டோம். முஸ்லிம் க‌ட்சிக‌ளில் ஒன்று அதுவும் உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ க‌ட்சி ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுட‌ன் நிற்ப‌த‌னால் முஸ்லிம்  ச‌மூக‌த்தின் உரிமைக‌ளை கொடுக்க‌ வேண்டும் என‌ அர‌சாங்க‌ம் புரிந்து கொள்ளும் என்று எதிர் பார்த்தோம். 

அத்துட‌ன் அர‌சில் இருப்போர் எம‌து எதிர்க்குர‌லை அர‌சிட‌ம் காட்டி முஸ்லிம்க‌ளுக்கான‌ தேவைக‌ளையும் உரிமைக‌ளையும் பெற‌ வ‌ழி வ‌குக்கும் என‌ நினைத்தோம். ஆனால் அத‌ற்குப்ப‌திலாக‌ அர‌சாங்க‌ம் பேரின‌வாதிக‌ளை க‌வ‌னிப்ப‌திலும் முஸ்லிம்க‌ளை ஓர‌ம் க‌ட்டுவ‌திலும்தான் முணைப்புக்காட்டிய‌து. 

இந்த‌ நிலையில் அர‌ச த‌ர‌ப்பின் அழைப்பை ஏற்று நாம் அர‌சுட‌ன் பேச்சுவார்த்தையும் ந‌ட‌த்தினோம். நாம் சிறிய‌ க‌ட்சி என்ப‌தால் எம‌க்கு ஏதும் கிடைத்தால் போதும் என்று நினைத்திருந்தால் ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தியிருக்க‌லாம். ஆனால் நாம் சிறிய‌ க‌ட்சியாக‌ இருந்தாலும் உல‌மாக்க‌ள் எனும் ந‌பிமார்க‌ளின் வாரிசுக‌ள் என்ற‌ முறையில் ச‌மூக‌ பொறுப்பை த‌லையில் சும‌ந்த‌வ‌ர்க‌ள் என்ப‌தில்  எம்மை சிற‌ந்த‌வ‌ர்க‌ளாக‌ நாம் க‌ண்ட‌தால் ச‌மூக‌ம் சார்ந்த‌ சில‌ நிப‌ந்த‌னைக‌ளை அர‌சிட‌ம் முன் வைத்தோம்.

முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ள் பெற்ற‌ க‌ட்சிக‌ளே எந்த‌ ஒப்ப‌ந்த‌மும் இன்றி இருக்கும் போது எம‌து ஒப்ப‌ந்த‌ம் ப‌ற்றி இழுத்த‌டிப்பு செய்ய‌ப்ப‌ட்ட‌து.  நாமும் தொட‌ர்ந்தும் எதிர்க்க‌ட்சிக்கூட்ட‌ணியில் செய‌ற்ப‌ட்டோம்.

இவ்வாறு இருக்கையில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ந‌ல்லாட்சியினால் மீண்டும் இன‌வாத‌ தாக்குத‌ல்க‌ளுக்கு முக‌ம் கொடுக்க‌ வேண்டி வ‌ந்த‌து. இந்த‌ நாட்டை பொறுத்த‌ வ‌ரை  முஸ்லிம்க‌ளின் க‌ட்சிக‌ளில் சில‌ எதிர்க்க‌ட்சி அர‌சிய‌லும் செய்ய‌ வேண்டும் என்ப‌து எம‌து அர‌சிய‌ல் கொள்கையாகும். நாடு இன்றுள்ள‌ நிலையில் ர‌ணில், மைத்ரி ஒரு ப‌க்க‌ம் உள்ள‌ நிலையில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வே எதிர்த்த‌ர‌ப்பின் ப‌ல‌மிக்க‌ த‌லைவ‌ராக‌ உள்ள‌த‌ன் கார‌ண‌மாக‌ நாமும் அவ‌ர் ப‌க்க‌ம் நிற்கிறோம். 

எம‌து நோக்க‌ம் ம‌ஹிந்த‌வை ஆட்சிக்கு கொண்டு வ‌ருவ‌த‌ல்ல‌. அது இறைவ‌னின் நாட்ட‌த்தை பொறுத்த‌ விட‌ய‌ம்.  நாம் எம‌து ம‌க்க‌ளின் சுத‌ந்திர‌மான‌ எதிர்க்குர‌லை ஒலிக்க‌ச்செய்ய‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே சில‌ வேளை எதிர‌ணியின‌ருட‌ன் இணைந்து செய‌ற்ப‌டுகின்றோம். அதேவேளை அர‌சு முஸ்லிம்க‌ளை க‌வுர‌விக்குமானால் அர‌சை பாராட்ட‌ நாம் த‌ய‌ங்க‌ மாட்டோம்.

நாம் ம‌ஹிந்த‌வுட‌ன் நிற்கும்
எம‌து இந்த‌ நிலைப்பாடு பிழை என்ப‌வ‌ர்க‌ள் அர‌சாங்க‌த்தோடு இருக்கும் உங்க‌ள் நிலைப்பாட்டின் மூல‌ம் ச‌மூக‌த்துக்கு பெற்றுக்கொடுத்த‌ ந‌ன்மை என்ன‌   உரிமைக‌ள் என்ன‌ என‌ கேட்கின்றோம். 

இன்று ந‌ல்லாட்சியை கொண்டுவ‌ர‌ முய‌ன்ற‌ முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் ப‌கிர‌ங்க‌மாக‌ ந‌ல்லாட்சியை திட்டித்தீர்ப்ப‌த‌ன் மூல‌ம் அன்று நாம் ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் எடுத்த‌ முடிவு ச‌ரிதான் என்ப‌தை இறைவ‌ன் எம‌க்கு இன்று காட்டுகிறான். புத்தியுள்ள‌ முஸ்லிம்க‌ள் எம்மை பாராட்டுகிறார்க‌ள்.
 
இந்த‌ நாட்டை பொறுத்த‌வ‌ரை ஒன்றில் ஐ தே க‌ அல்ல‌து ம‌ஹிந்த‌ ஆத‌ர‌வு அணியே ஆட்சியைப்பிடிக்கும் என்ப‌தே  அர‌சிய‌ல் களநிலவர‌மாகும். அத‌னை புரிந்து இல‌ங்கை முஸ்லிம்க‌ள் இந்த‌ இருத‌ர‌ப்பாருட‌னும் இருப்ப‌தே ந‌ம‌து ச‌மூக‌த்தின் எதிர் கால‌த்துக்கு சிற‌ந்த‌தாகும். 
எமது அரசியல் நிலைப்பாடே சரியானது ! புத்தியுள்ள‌ முஸ்லிம்க‌ள் பாராட்டுகிறார்க‌ள்... எமது அரசியல் நிலைப்பாடே சரியானது ! புத்தியுள்ள‌ முஸ்லிம்க‌ள் பாராட்டுகிறார்க‌ள்... Reviewed by Madawala News on 11/27/2016 04:41:00 PM Rating: 5