Free Space

தர்கா நகர் கல்வியற் கல்லூரி அபாய தடை நீக்கம் !


தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரியில் கட்டுறுப் பயிலுனர்கள் ( மூன்றாம் வருட ஆசிரிய மாணவிகள் ) பயிலுனர்கள் பாடசாலைகளில் பயிலுனராக பணிக்கு செல்லும் போது அவர்கள் கல்லூரி சீருடையான சாரி அணிந்தே செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இதற்கான அறிவுறுத்தலை கால்லூரி பீடாதிபதி பாடசாலைகளுக்கு அனுப்பியிருந்தார்.

மடவளை நியுஸ் இது தொடர்பான செய்தியை முன்னதாக பிரசுரம் செய்திருந்தோம்.

http://www.madawalanews.com/2016/11/blog-post_23.html?m=1

இன்று எமக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் படி மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீல் மற்றும் முன்னாள் பேருவளை நகர சபை எதிர்கட்சி தலைவர் பதியுதீன் அவர்களும் கல்லூரி பீடாதிபதியை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பில் நாம் பதியுதீன் ஹாஜியார் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது 
இந்த கலப்துரையாடல் வெற்றியளித்திள்ளதாகவும் முஸ்லீம் மாணவிகள் தங்கள் கலாசாரத்தை பிரதிபளிக்கும் உடையில் பாடசாலைகளுக்கு பயிற்சிக்கு செல்வதற்கு பீடாதிபதி உடன்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அதற்கான உத்தியோக பூர்வ சுற்று நிருபத்தை எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளாதாக மடவலை நியுஸுக்கு தெரிவித்தார்.

முன்னதாக குறித்த கல்லூரியில் பயிலுனர் பணிக்கு செல்லும் மூன்றாம் வருட ஆசிரிய மாணவிகள்  அபாயா அணிந்து அனுமதிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இந்த தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தர்கா நகர் கல்வியற் கல்லூரி அபாய தடை நீக்கம் ! தர்கா நகர் கல்வியற் கல்லூரி அபாய தடை நீக்கம் ! Reviewed by Madawala News on 11/16/2016 01:44:00 PM Rating: 5