Kidny

Kidny

ரணிலின் ஆட்சி மீது தலைவர் அஷ்ரஃப் சந்தேகம் கொண்டார்


-அஸ்மி அப்துல் கபூர்-

ரணிலின் ஆட்சி மீது அஷ்ரஃப் சந்தேகம் கொண்டார், சர்வதேசம் விருப்பம் கொண்டது.அதுவே தலைவரின் இறுதி தருணங்கள் உணர்த்தின.

தற்போது முஸ்லீம்கள் உருவாக்கிய நல்லாட்சியில் கிடைக்கின்ற பிரதிபலன்கள் தொடர்பில் பேச வேண்டியிருப்பதற்க்கு முன்னர் மறைந்த தலைவர் மிக முக்கியமான ஒசியத்தாக சொன்ன விடயமும் ரணில் தலைவராக இருக்கும் வரை அந்த கட்சியில் நான் இணைய மாட்டேன் 
எதற்க்காக சொன்னார்?

அவரை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த துடிக்கின்ற சக்திகள் அவற்றின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் குறித்து அறிந்தமையினாலேயே. .....

அதன் பின் தலைவர் அஷ்ரஃப் படு கொலை செய்யப்படுகிறார் அவர்களுக்கேற்றாப் போல் தலைவராக ஹக்கீம் நியமிக்கப்படுகின்றார்.

2002 ரணிலின் பிரதமர் ஆட்சி ரவூப் ஹக்கீம் முட்டுக் கொடுக்கிறார் முஸ்லீம் கள் குழு என்றும் வீதிகளில் மக்களை எரித்தும் சதிமானம் நடக்கிறது.

அதாஉல்லாஹ் உள்ளிட்ட பலர் கட்சியை விட்டு வெளியேறுகின்றனர்
தலைவர் அஷ்ரஃப் பின் மரணத்தின் சூத்திரதாரி யார்?

உடந்தையாக இருந்தவர்கள் யார்? 

16 வருடங்களின் பின் பசீர் சேகு தாவூத் மீண்டும் அது தொடர்பில் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து யாரை பயமுறுத்துவதற்க்கு?

அது விடயத்தில் ரகசியங்கள் மண்டிக் கிடக்கின்றது. புத்தியுள்ளவர்களுக்கு செவ்வரத்தை பூ நஞ்சில்லை.

இன்று மீண்டும் ரணிலின் ஆட்சி இதன் பெயர் நல்லாட்சி அதே அதிகார சக்திகளை ஞானசார தேரவை கையிலே வைத்துக் கொண்டு கடந்த ஆட்சியை மாசு படுத்தி நல்லாட்சியை கொண்டு வந்தனர்

என்ன நடக்கிறது?

கடந்த ஆட்சியில் பேருவளை சம்பவத்தின் சூத்திரதாரி ஞான சார தேரருக்கெதிராக
எதாவது ஒரு நடவடிக்கை எடுத்தார்களா?

இந்த ஆட்சியில் 43 பள்ளிகள் உடைததார்களே எதாவது ஒரு நடவடிக்கை 
முஸ்லிம் விரோத சக்திகளின் துணை கொண்டு முஸ்லிம் சிங்கள இனவாதம் தூண்டப்படுகின்ற நிலையில் .

இன்று தயா கமகே எனும் இனவாத அரசியல்வாதியின் துணையோடு சிங்கள நாத்தமே இல்லாத இடத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது 
இதற்கான காரணம் என்ன?

தயாகமே கல்முனையிலிருந்து பொததுவில் வரை தீகவாபிக்கு சொந்தம் என்று கூறுகிறான் எதிர்த்து பேச ஆட்களில்லை  பாராளுமன்ற உறுப்பினர்கள் வாயை சப்புகின்றார்கள்.தயா கமகே மீது எந்த தவறுமில்லை சுமார் 20000 வாக்குகளை பணத்துக்காக வழங்க துணை நின்ற தரகர்களின் தவறுதான் இது தரகர்களாக வன்னியிலிருந்து ஒருவரை அழைத்து வந்து அவரிடம் பட்டம் பதவிகளை பெறுவர்கள் பெற்றனர்.

அம்பாரை தயாகமே வந்து பணத்தை கொடுத்து தரகர்களை வாங்கினார்.இதனால் எதை இழந்தோம் வெறும் அம்பாரை மாவட்ட 40000 வாக்குகளை வைத்து முழு கிழக்குக்கும் சேவை புரிந்த கம்பீரமான தலைமை பாரபாரளுமன்றத்தில் அமரச் செய்வதை தவற விட்டோம்ழ்

இது உணர்ந்து கொள்வதற்கான தருணம் சிங்கள முஸ்லிம் இனவாதத்தின் தூப நிலையில் வடக்கு கிழக்கை சர்வதேசமும் டயஸ்போராவும் இணைத்து தீர்வு ஒன்றை பெற்று முஸ்லிம் களை நடுத்தெருவில் நிறுத்தும் வரை இந்த முஸ்லீம் சிங்கள இன மோதல் தொடரும் யாரும் கண்டு கொள்ள போவதில்லை இதற்கு தரகர்களாக எம் தலைவர்களும் இணைந்து கொள்வார்கள்.

ரணிலின் ஆட்சி மீது தலைவர் அஷ்ரஃப் சந்தேகம் கொண்டார் ரணிலின் ஆட்சி மீது தலைவர் அஷ்ரஃப் சந்தேகம் கொண்டார் Reviewed by Madawala News on 11/09/2016 10:51:00 PM Rating: 5