Free Space

மாவடிப்பள்ளி நூலகத்தை திறக்க எதிர்ப்பு..


மாவடிப்பள்ளி புதிய நூலக கட்டிடமானது கட்டப்பட்டு இரு வருடங்கள் கடந்த போதும் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமையால் திறக்க முடியாத நிலையில் இருந்தது.அமைச்சர் றிஷாத் அந்த பொருட்களை தனது சொந்த பணத்தில் வாங்கி கொடுக்க உடன்பட்டிருந்தார்.அமைச்சர் றிஷாத் அதனை கையளிக்க 01-09-2016ம் திகதி வியாழக் கிழமை அங்கு சென்ற போது அதனை பூட்டி வைத்து அமைச்சர் றிஷாத் தனது பொருட்களை கையளிக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தியிருந்தனர்.

இதன் போது உணர்ச்சிவசப்பட்ட அ.இ.ம.காவினர் சிலர் அந் நூலகத்தின் கண்ணாடிகளை  உடைத்து சேதப்படுத்தியிருந்தனர்.

நாளை மாவடிப்பள்ளி நூலகத்தை முதலமைச்சர் நசீர் ஹாபிஸ் திறப்பதற்கான ஏற்பாடுகள் மிகவும் இரகசியமாகவும் அவசரமாகவும் இடம்பெறுகின்றன. ஏற்கனவே அங்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் அங்கு குழப்பம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் முதலமைச்சர் நஸீர் ஹாபிஸ் இவ்விடயத்தை சாதாரணமாக நடாத்த ஏற்பாடு செய்வதாகவே பலரும் கருதுகின்றனர்.மு.காவின் கட்சிக் கொடிகளை கட்ட பிரதேச சபை ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அவ்வாறு கட்டப்பட்ட கொடிகள் சற்று முன்னர் மாவடிப்பள்ளி மக்களால் கிழித்து வீசப்பட்டுள்ளது.இங்குள்ள நீர் வசதிகள் உட்பட பல விடயங்கள் மு.காவினருக்கு அப்பால் வேறு அரசியல் வாதிகளால் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
மாவடிப்பள்ளி நூலகத்தை திறக்க எதிர்ப்பு.. மாவடிப்பள்ளி நூலகத்தை திறக்க எதிர்ப்பு.. Reviewed by Madawala News on 11/18/2016 10:50:00 PM Rating: 5