Accaddemy

ஆங்கிலேயர் கால முஸ்லிம்கள் புறக்கணித்த நவீன கல்வி முறை...



Muja Ashraff

ஆங்கிலேயர் காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் அறபுமொழிக் கல்வியிலும், சமயக்கல்வியிலும் ஈடுபாடு காட்டினார்களே ஒழிய நவீன கல்வி முறையில் ஈடுபாடு காட்ட முன்வரவில்லை.இதன் விளைவே பிற்பட்ட காலங்களில் சமயச்சூழலில் நவீன கல்வி எனும் கோட்பாடு தோற்றம் பெற ஆரம்பித்தமையாகும்.

பொதுவான அடிப்படையில் இவ்விடயங்களை நோக்கும் போது பின்வரும் நிறுவனங்கள், கல்வித்தாபனங்கள் மட்டுமே சமூகத்திற்கான கல்வியினை வழங்கிக் கொண்டிருந்தன.

1• குர்ஆன் பள்ளிக்கூடங்கள்
2• அறபு மத்ரஸாக்கள்
3• குர்ஆன் தமிழ் பள்ளிக்கூடங்கள்
4• அறபு தமிழ் பள்ளிக்கூடங்கள்
5• சமயச்சூழலில் கல்வித்தாபனங்கள்

1• குர்ஆன் பள்ளிக்கூடங்கள்
இப்பாடசாலைகள் மக்தப்,
குர்ஆன் மத்ரஸாக்கள் என்று அழைக்கப்பட்டன பொதுவாக இது பள்ளிவாசல், வீட்டுத்திண்ணை கூடங்களாகவே காணப்பட்டது.

2• அறபு மத்ரஸாக்கள்
அல்குர்ஆனின் மொழி அறபு என்பதால் அதனை விளங்கவும் இஸ்லாமிய சட்ட விதிகளை அறியவும் அறபு மொழி அவசியப்பட்டதால் முஸ்லிம்கள் அறபு மொழியை கற்க முயற்சித்தனர் இதனால் எஹிப்து, இந்தியா போண்ற நாடுகளுக்கு பெருந்தொகை பணத்தை செழவழித்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் அறபுமொழியையும் இஸ்லாமிய கலைகளையும் கற்றனர். அவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்வது ஒரு சிலருக்கே சாத்தியப்பட்டதால் ஏணைய மாணவர்களும் அறபு மொழியையும் இஸ்லாத்தையும் போதிப்பதற்கான
அவசியத்தை உணர்ந்த தனவந்தர்களும் சிந்தனையாளர்களும் அறபு மத்றஸாக்களை உருவாக்கி இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் சமய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தனர் அதற்கேற்ப பின்வரும் மத்றஸாக்கள் தோற்றம்பெற்றன.

கி பி 1884- அல் மத்றஸதுல் மக்கியா-காலி, மத்தறஸதுல் பாரி-வெலிகம
கி பி 1892- பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா-காலி
கி பி 1899- ஸய்யதியா அரபுக் கல்லூரி-கிண்ணியா
கி பி 1931- கபூரிய்யா அரபுக் கல்லூரி-மஹரகம

அறபு மொழி சமய மொழி என்பதால் முஸ்லிம்கள்  அதை கற்பதிலும், கற்பிப்பதிலும் தீவிர ஆர்வம் காட்டியதன் விளைவாகவே  நவீன கல்விச்சீர்திருத்தத்தை ஏற்படுத்த முனைந்த சித்திலெப்பை போண்ற அறிஞ்ஞர்களும் அறபு மொழிக்கே முன்னுரிமை வழங்கினர். அம்முயற்சியின் பிரதிபலனாக அரசாங்க பாடத்திட்டத்திலும் அறபு மொழி உள்ளடக்கப்பட்டதோடு அறபு மொழி மௌலவி ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது.

3• சமயச்சூழலில் நவீன கல்விக்கூடங்கள்

இலங்கையில் அறிஞர் சித்திலப்பையே சமய சூழலில் நவீன கல்வி எனும் கொள்கையை வலியுறுத்தியவராவார் அக்கால முஸ்லிம் சமூகம் ஆங்கில மொழியை கற்பது மதமாற்றத்திற்கு
வழிவகுக்கும் என்பதால் நவீன மற்றும் ஆங்கில கல்வியை கற்க மறுப்புத்தெரிவித்தனர்.
அச்சிந்தினையை மாற்றும் நோக்கில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக சமய சூழலிலான நவீன பாடத்திட்டத்தை உள்ளடக்கிய பாடசாலைகளை உருவாக்க சித்திலப்பை, வாப்பிச்சி மறைக்கார் போன்ற அறிஞர்கள் முயற்சித்தனர் அதன் விளைவாக பின்வரும் பாடசாலைகள் தோற்றம் பெற்றன.

1884- Al madrasathul kairiya islamiya ஹமீதியா ஆங்கிலப்பாடசாலையாக பெயர்மாற்றப்பட்டது
1891- முஸ்லிம் பெண்கள் பாடசாலைகள் கண்டி,குருநாகல்,கம்பளை,மாத்தறை போன்ற பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டமை
1891-சித்திலப்பை ஒறாபிபாஷா வாப்பிச்சி மறைக்கார் ILM அப்துல் அஸீச் போண்றோர் முஸ்லிம் கல்விச்சங்கத்தை உருவாக்கினர்
1892- மருதானை முஹம்மதியா ஆண்கள் பாடசாலை அதன் பின்னர் அது ஸாஹிரா கல்லூரியாக மாற்றப்பட்டது.

சேர் றாசிக் பரீத் அவர்களின் கல்விப் பணிகள்

1937 ல் அரசாங்க சபையின் கல்வி, நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்டபோது முஸ்லிம்களின் கல்வியினை முன்னேற்றுவதற்காக பாடசாலைகளை கிழக்கு மாகாணத்திலும் கிராமப்புறங்களிலும் ஆரம்பிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதையும் 1944ல்  முஸ்லிம் பாடசாலைகளின் கல்விக்குறைபாடுகளை ஆராய விஷேட குழுவொன்றை நியமிக்குமாறு வேண்டியதையும் குறிப்பிடலாம். அதன்பலனாக இக்கோரிக்கையினை ஏற்ற அரசாங்கம் 1944.08.31ம் திகதி வரவு செலவு திட்டத்தில் இலங்கை முழுவதிலும் 5 முஸ்லிம் மத்திய கல்லூரி அமைக்கப்படவேண்டுமன பரிந்துரைத்தது. அதனடிப்படையில் அவற்றில் 4 தெற்கு,வடக்கு,கிழக்கு, மத்திய மாகாணங்களிலும் மற்றயது பெண்களுக்காக மருதமுனை அல்லது சம்மாந்துறையில் கட்டப்படவேண்டும் என்றார் அதேபோண்று 1947ல் விவசாயக் கல்லூரி ஒன்று அக்கறைப்பற்றில் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்தார்.

கலாநிதி பதியுதீன் மஹ்மூத்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
உயர்கல்வி ஆங்கிலமொழி மூலம் மாத்திரமே போதிக்கப்பட்டதால் முஸ்லிம் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்பட்டிருந்தது அதனால் முஸ்லிம் பாடசாலைகளை மகாவித்தியாலயங்களாக தரமுயரத்தி க.பொ.த உயர்த்தர கலை, வர்த்தக, விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பிக்க நடவெடிக்கை எடுத்தார் 1956-1965 குமிடையில் 85 முஸ்லிம் பாடசாலைகளை மகா வித்தியாலங்களாக மாற்றி அவற்றுக்தேவையான விஞ்ஞான ஆய்வு கூடங்களையும் நிறுவினார் மஹரகம, பலாலி ஆகிய பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சி பெறுவதற்காக அதிகளவில் முஸ்லிம் பயிற்சியாளர்களை உள்வாங்கச் செய்ததன் மூலம் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறையினை நீக்கினார்.

T.B ஜாயா
^^^^^^^^^^^
சுயமொழிப்பாடசாலைகளை உருவாக்குமாறு போராடி முஸ்லிம் பிரதேசங்களில் அதிகளவான சுய மொழிப்பாடசாலைகளை நிறுவினார்.அரபுக்கலாசாலைகளையும் அவற்றின் தராதரப் பத்திரங்களையும் கல்வித்திணைக்களத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்காக சிபாரிசு செய்தார். 1942ல் அலுத்கமையிலும்,கம்பளையிலும் 1944ல் மாத்தளையிலும் 1945ல் புத்தகத்திலும், கொம்பனித்தெருவிலும் ஸாஹிரா கல்லூரிகளை ஆரம்பித்தார். அகில  இலங்கை ஆசிரிய சங்கம், கல்வித்திணைக்கள மறுசீரமைப்பு குழு, கல்வி ஆலோசனை குழு போண்றவற்றில் அங்கம் வகித்து முஸ்லிம்களின் கல்வித்துறைக்கு பாரிய பங்களிப்பு செய்தார்.
தொடரும்...

ஆங்கிலேயர் கால முஸ்லிம்கள் புறக்கணித்த நவீன கல்வி முறை... ஆங்கிலேயர் கால முஸ்லிம்கள் புறக்கணித்த நவீன கல்வி முறை... Reviewed by Madawala News on 11/27/2016 10:08:00 AM Rating: 5