Kidny

Kidny

மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம்: நாளை விசேட கூட்டம் - படையினர் பாதுகாப்பு கடமையில்


MC.Najimudeen
அம்­பாறை மாவட்டம் இறக்­காமம் பிர­தேச செயலாளர் பிரி­வுக்­குட்­பட்ட மாணிக்­க­ம­டு­வி­லுள்ள மாயக்­கல்லி மலை உச்­சியில் கடந்த சனிக்­கி­ழமை திடீ­ரென புத்தர் சிலை வைக்­கப்­பட்ட விவ­கா­ரத்தைத் தொடர்ந்து அப்­பி­ர­தேச மக்கள் மத்­தியில் அச்ச நிலை ஏற்­பட்­டுள்­ளது.


இதே­வேளை சிலை­வைக்­கப்­பட்­டுள்ள மலைப் பிர­தே­சத்தில் பாது­காப்பு பிரி­வினர் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். 

எனவே அவ்­வி­டயம் தொடர்பில் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் நாளை விசேட கூட்டம் ஒன்று நடை­பெ­ற­வுள்­ள­தாக அம்­பாறை மாவட்ட செய­லாளர் துஷித பி. வண­சிங்க தெரி­வித்தார்.  
 
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட இறக்­காமம் 07 கிரா­ம­சே­வகர் பிரிவில் மாணிக்­க­மடு, நல்­ல­தண்­ணி­மலை, குடுவில் போன்ற கிரா­மங்கள் உள்­ளன.

குறித்த பிர­தே­சத்தில் தமிழ் முஸ்லிம் மக்­களே வாழ்ந்து வரு­கின்­றனர். மேலும் மாணிக்­க­மடு கிரா­மத்தில்  சுமார் 150 குடும்­பங்கள் வசிக்­கின்­றனர்.

அக்­கி­ரா­மத்தின் பிர­தான வீதியை அண்­மித்த பகு­தியில் மாயக்­கல்லி என்­கின்ற மலை ஒன்­றுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. இருந்­த­போ­திலும் குறித்த பிர­தே­சத்தில் சிங்­களக் குடி­யேற்­றங்கள் எதுவும் இல்லை.

கடந்த சனிக்­கி­ழமை காலை 9 மணி­ய­ளவில் அக்­கி­ர­ாமத்­திற்கு தேரர்கள் உட்­பட 150இற்கும் மேற்­பட்­ட­வர்கள்  திடீ­ரென வருகை தந்து  மாயக்­கல்லி மலை உச்­சியில் புத்தர் சிலை­யொன்றை வைத்­துள்­ள­துடன் பெளத்த  கொடி­க­ளையும் பறக்­க­விட்­டுள்­ளனர். அக்­கு­ழு­வி­ன­ருடன் பொலி­ஸாரும் வரு­கை­தந்­துள்­ளனர்.

சம்­ப­வத்தை கேள்­வி­யுற்று அங்கு விரைந்த பிர­தே­ச­வா­சி­க­ளிடம் அக்­கு­ழு­வினர்  " இந்த மலைப்­பி­ர­தேசம் பெளத்­தர்­க­ளுக்குச் சொந்­த­மா­னது. ஆன­போ­திலும் குறித்த சிலையை இங்கு வைப்­ப­தற்கு தாம் உரிய அனு­மதி பெற்­றுக்­கொண்­டுள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்­ளனர். அத்­துடன் தமக்கு அமைச்சர்  ஒருவர் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளனர்.

எனினும் குறித்த சிலை விவ­கா­ரத்­தினால் அப்­பி­ர­தேச மக்கள் மத்தில் அச்ச நிலை ஏற்­பட்­டுள்­ளது.  இவ்­வி­வகாரம் தொடர்பில் அம்­பாறை மாவட்ட செய­லா­ள­ரிடம் வின­வி­ய­போது,  மாயக்­கல்லி மலைப்­பி­ர­தேசம் பெளத்த சரித்­தி­ரத்­துடன் தொடர்­பு­டைய பிர­தேசம் எனக் குறிப்­பிட்டு அங்கு புத்தர் சிலை வைப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு சிலர் கோரிக்கை விடுத்­தனர்.

அது தொடர்பில் உரிய ஆய்­வுகள் மேற்­கொண்ட பின்­னரே முடி­வுக்கு வர­வேண்­டி­யுள்­ளது. சட்ட ஏற்­பா­டு­களின் பிர­கா­ரமே தாம் தீர்­மா­னங்­களை எடுக்க முடியும் எனக் குறிப்­பிட்டேன். 

ஆகவே அம்­ம­லையில் புத்தர் சிலை வைப்­ப­தற்­கான அனு­மதி இது­வ­ரையில் வழங்­கப்­ப­ட­வில்லை. இருந்­த­போ­திலும் கடந்த சனிக்­கி­ழமை குழு­வொன்று அங்கு சென்று புத்தர் சிலை­யொன்றை வைத்­துள்­ளது.

மேலும் அக்­கு­ழு­வினர் புத்தர் சிலையை அங்கு வைப்­ப­தற்­கான அனு­மதி உட­ன­டி­யாக வழங்­கப்­ப­டா­தை­யிட்டு என்­னையும் தூஷித்­துள்­ளனர்.

இருந்தபோதிலும் குறித்த விவகாரத்தை சுமுகமாக தீர்ப்பதற்கு நாளை அம்பாறை மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கூட்டத்தில் அவ்விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம்: நாளை விசேட கூட்டம் - படையினர் பாதுகாப்பு கடமையில் மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம்: நாளை விசேட கூட்டம் - படையினர் பாதுகாப்பு கடமையில் Reviewed by Madawala News on 11/02/2016 12:28:00 AM Rating: 5