Accaddemy

ஹக்கீம் கூறிய விடயத்தை கோத்தாவுடன் முடிச்சு போட்ட ராஜித ..


(இப்றாஹிம் மன்சூர்,ஆசிரியர்,கிண்ணியா)

21-11-2016ம் திகதி திங்கள் கிழமை கட்டார் பனார் மண்டபத்தில் இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான நிகழ்ச்சியில் அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனா அமைப்பினரும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பினரும் ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா? என்ற உணர்வு தனக்கு ஏற்படுவதாக கூறியிருந்தார்.

இன்று 23-11-2016ம் திகதி புதன் கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் அமர்வில் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் றாசிகை கோத்தபாய ராஜபக்ஸவின் கண்காணிப்பின் கீழ் இருந்த தேசிய புலனாய்வு மையத்தின் தகவல் வழங்குனராக செயற்பட்டவர் எனக் கூறியுள்ளார்.

ஏலவே பொது பல சேனா அமைப்பானது கோத்தபாய ராஜபக்ஸவின் கீழ் இயங்கும் அமைப்பா என்ற சந்தேகம் பரவலாக காணப்படுகிறது.இந்த விடயங்களை வைத்து நோக்கும் போது பொது பல சேனாவும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் றாசிகும் கோத்தபாய ராஜபக்ஸ என்ற ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா என்ற அச்சம் எமக்கும் தோன்றுகிறது.

இவர்கள் இருவரும் ஒரு எஜமானின் கீழ் இயங்குகின்றார்களா என்ற விடயத்தை அமைச்சர் ஹக்கீமே முதன் முதலில் கூறியிருந்தார்.

இந்த கருத்து அமைச்சர் றாஜிதவிடம் சென்றதன் வெளிப்பாடாகவும் அவர் சகோதரர் றாசிக் தொடர்பில் கூறிய விடயத்தை பார்க்கத் தோன்றுகிறது.


நான் குறித்த நிகழ்வின் மூலம் தான் இவ்விடயம் அவர்களை சென்றடைந்திருக்கும் எனக் கூறவில்லை.அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பில் பல இடங்களில் கதைத்து அக் கதைகள் அவர்களை சென்றடைந்திருக்கலாம்.

இது உண்மையாக இருக்குமாக இருந்தால் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்திற்கு மிகப் பெரும் துரோகத்தை செய்துள்ளார்.
ஹக்கீம் கூறிய விடயத்தை கோத்தாவுடன் முடிச்சு போட்ட ராஜித .. ஹக்கீம் கூறிய விடயத்தை கோத்தாவுடன் முடிச்சு போட்ட ராஜித .. Reviewed by Madawala News on 11/23/2016 11:56:00 PM Rating: 5