Accaddemy

அகில இலங்கை ஜம்மியாவிற்க்கு பொதுபல சேனா நான்கு பக்க கடிதம் ...



அல் குர்ஆனில் உள்ள சில வசனங்கள்  தொடர்பில் விளக்கம் கோரி பொதுபல சேனா அமைப்பு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

பிற மதங்களை நிந்திப்பது இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று என குற்றம் சுமத்தி சில அல் குர்ஆன் வசனங்களை சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்பு.சில அல்குரான் வசனங்களை சுட்டிக்காட்டி அதற்கான தெளிவுகளை கோரியுள்ளதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வட்டார செய்திகள் தெரிவித்தன.

நான்கு பக்கங்களை கொண்ட குறித்த கடிதத்தை பெற்றுக்கொண்டதாக பதில் அளிக்க உள்ளதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில்  நாம் வினவிய போது  மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிட்ட பொதுபல சேனா முக்கியஸ்தர் ஒருவர் இந்த கடிதம் தொடர்பில் உறுதிப்படுத்தினார்.



 

 

 

 

 


 


அகில இலங்கை ஜம்மியாவிற்க்கு பொதுபல சேனா நான்கு பக்க கடிதம் ... அகில இலங்கை ஜம்மியாவிற்க்கு பொதுபல சேனா நான்கு பக்க கடிதம் ... Reviewed by Madawala News on 11/28/2016 10:46:00 AM Rating: 5