Kidny

Kidny

இந்தியா மீது துல்லியமாக தாக்குதல் நடத்துவோம் : லச்கர் இ தொய்பா அறிவிப்பு ...



இந்தியா மீது தீவிரவாதிகள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள் என்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு தலைவன் ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளார். 

காஷ்மீரில் உள்ள மெர்பூரில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதனை செய்திருப்பதாக கூறினார். 

இப்போது காஷ்மீர் முஜாகிதீன் அமைப்பு திட்டமிட்ட தாக்குதல் நடத்துவதே முறை என்று குறிப்பிட்ட ஹபீஸ் சயீத், இந்த தாக்குதலை நீண்ட நாளைக்கு மறக்க முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

இது இந்தியா நடத்தும் தாக்குதல் போல இருக்காது என்று கூறியுள்ள அவர், 
உண்மையான துல்லிய தாக்குதல் என்ன என்று இந்தியாவிற்கு காட்டுவோம் என்று கூறியுள்ளார். 

கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர், மும்பைக்குள் புகுந்து தாக்குதலை அரங்கேற்றினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்தியா மீது துல்லியமாக தாக்குதல் நடத்துவோம் : லச்கர் இ தொய்பா அறிவிப்பு ... இந்தியா மீது துல்லியமாக தாக்குதல் நடத்துவோம் : லச்கர் இ தொய்பா அறிவிப்பு ... Reviewed by Madawala News on 11/08/2016 10:14:00 AM Rating: 5