முஸ்லிம்களையும் பௌத்தர்களையும் மோதவைத்தாவது ஆட்சியை கைப்பற்ற மஹிந்த முயற்சி..


முஸ்லிம்களையும் பௌத்தர்களையும் மோதவைத்தாவது ஆட்சியை கைப்பற்ற மஹிந்த முயற்சி செய்வதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

இன்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டாவாஊ குறிப்பிட்டார்.

வடக்கில் தமிழர்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெறுவது போன்ற ஒரு தோற்றப்பட்டை உறுவாக்க முயற்சிக்கிறார்கள். தெற்கில் முஸ்லீங்களையும் பெளத்தர்களையும் மோதவிட முயற்சிக்கிறார்கள். நாமல் ராஜபக்‌ஷ்வின் நில்பலகாய அமைப்பை சேர்ந்த ஒரு வாலிபர் தற்போது முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான கோஷத்தை எழுப்ப துவங்கியுள்ளார்.

மறுபுறம் முஸ்லீம் அமைப்பு ஒன்று புத்தபெருமானை விமர்சித்து ஆர்பாட்டம் செய்கிறார்கள். இவர்கள் அனைவரினதும்  முழு நோக்கமும் இந்த நாட்டை தீவைத்தாவது ஆட்சியை பிடிப்பதாகும்.

இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருந்துதான் இயக்கப்படுகிறார்கள்.
ஒரு புறத்தில் சிங்கள இனவாதியையும் மறுபுறத்தில்  முஸ்லீம் இனவாதிகளையும் மோதவிட்டு இந்த நாட்டை தீவைக்க கூறுகிறார்கள் . பின்னர் இந்த நாட்டை இவர்களால் கொண்டு செல்லமுடியாது என கூறி கூறுவதே திட்டம் என அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களையும் பௌத்தர்களையும் மோதவைத்தாவது ஆட்சியை கைப்பற்ற மஹிந்த முயற்சி.. முஸ்லிம்களையும் பௌத்தர்களையும் மோதவைத்தாவது ஆட்சியை கைப்பற்ற மஹிந்த முயற்சி.. Reviewed by Madawala News on 11/09/2016 04:45:00 PM Rating: 5