Ad Space Available here

கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களின் கல்வி அபி­வி­ருத்­தியில் பாட­சாலை அபி­வி­ருத்தி சங்­கத்தின் பங்­க­ளிப்பு குறித்­தான விசேட கருத்­த­ரங்கு...


-சகீப் நிஜாம் -
கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களின் கல்வி அபி­வி­ருத்­தியில் பாட­சாலை அபி­வி­ருத்தி சங்­கத்தின் பங்­க­ளிப்பு குறித்­தான  விசேட கருத்­த­ரங்­கொன்று அண்­மையில்  கொழும்பு 10, அல்­ஹி­தாயா மகா வித்­தி­யா­லய பஹார்தீன் கேட்போர் கூடத்தில்  இடம்­பெற்­றது. 


கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்தி மன்றம் Colombo District Development Foundation (CDDF)  ஏற்­பாடு செய்­தி­ருந்த, இக்­க­ருத்­த­ரங்கில் கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களின் அபி­வி­ருத்திச் சங்­கங்­களின் பிர­தி­நி­தி­கள் கலந்­து­கொண்­டனர். 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஏ.ஜே.எம்.பாயிஸ் மற்றும் அர்ஷாட் நிசா­முதீன் ஆகி­யோரின் இணை தலை­மையில் இடம்­பெற்ற இந்­நி­கழ்வில் மத்­திய கொழும்பு கோட்டக் கல்விப் பணிப்­பாளர் பிரபா மற்றும் அஷ்செய்க் யூ.கே.ரமீஸ் ஆகியோர் விரி­வு­ரை­யாற்­றினர்.

இந்­நி­கழ்வில் இடம்­பெற்ற உரை­களை இங்கு தொகுத்து தரு­கிறோம்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் 
கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்தி மன்­றத்தின் உரு­வாக்கம் பற்றி தெளிவு­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. 2007 ஆம் ஆண்டு நான் மாகாண சபைக்கு தெரி­வா­கி­யி­ருந்தேன். அதே­போன்று மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளாக அர்ஷாட் நிஸா­முதீன் மற்றும் ஏ.ஜே.எம்.பாயிஸ் ஆகி­யோரும் தெரி­வா­கி­யி­ருந்­தனர். நாம் வெவ்வேறு கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி மாகாண சபைக்கு தெரி­வா­கி­யி­ருந்த நிலையில் கல்­விக்­கு­ழு­விலும் அங்கம் வகித்தோம்.

இதன்­போது கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களின் கல்வி அபி­வி­ருத்தி குறித்து நாம் தொடர்ச்­சி­யாக போராடி வந்தோம். அப்­போது நான் எதிர்க்­கட்சி உறுப்­பினர் என்­பதால் எம்மால் போரா­டு­வ­தற்கு மாத்­தி­ரமே முடிந்­தது. எம்மால் செயற்­பாட்டு அர­சி­யலை முன்­னெ­டுப்­பதில் பெரும் சிக்கல் காணப்­பட்­டது. நாம் வெவ்வேறு கட்­சி­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­னாலும் எம்­மி­டையே கல்­விக்­கொள்கை ஒன்­றா­கவே காணப்­பட்­டது. 

தேர்தல் காலங்­களில் நாம் பிரிந்து வெவ்­வேறு கட்­சி­களில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்­றாலும் அபி­வி­ருத்தி திட்­டங்­களில் நாம் ஒற்­று­மை­யா­கவே வேலை­களை செய்து வந்தோம். பின்னர் 2014 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்­த­லிலும் வெற்­றி­பெற்று மீண்டும் மாகாண சபைக்கு தெரி­வாகி கல்விக் குழுவில் இடம்­பி­டித்தோம்.

இந்­நி­லையில் நான் பொதுத் தேர்­தலில் வெற்­றி­பெற்று பாரா­ளு­மன்றம் சென்றேன். இங்கு அதிக மாகாண சபை பாட­சா­லை­களே காணப்­ப­டு­கின்­றன. மாகாண சபை ஊடா­கவே பல வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யி­ருக்­கி­றது. எனவே கொழும்பு மாவட்ட முஸ்லிம் கல்வி மற்றும் ஏனைய அபி­விருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக நாம் மூவரும் ஒன்­றி­ணைந்தோம். இதற்கு எம்­முடன் பலரும் இணைந்­துள்­ளனர்.

கடந்த பாரா­ளு­மன்ற தேர்­தலை தொடர்ந்து உரு­வான இந்த அமைப்பின் ஊடாக நாம் பல கல்­விசார் அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கிறோம்.

அத­ன­டிப்­ப­டையில், கொழும்பு குண­சிங்­க­பு­ரவில் உள்ள ஏ.ஈ. குண­சிங்க வித்­தி­யா­ல­யத்தை சிங்­கள மொழியில் ஒரு ஆரம்ப பாட­சா­லை­யாக தரம் உயர்த்தி மாற்றி வரு­கிறோம். இதற்­காக எமது தன­வந்­தர்கள் சுமார் ஒரு கோடி ரூபாயை செல­விட்­டுள்­ளனர். மத்­திய கொழும்பில் சிங்­கள மொழியில் கற்க விரும்பும் மாண­வர்­க­ளுக்கு இது ஒரு வரப்­பி­ர­சா­த­மாக அமை­ய­வி­ருக்­கி­றது.

மத்­திய கொழும்பு மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களில் மிக முக்­கி­ய­மா­னது கல்விப் பிரச்­சி­னை­யாகும். அது, அவர்­களின் பிள்­ளை­க­ளுக்கு கல்வி கற்­ப­தற்கு சிறந்த பாட­சா­லை­யொன்றை தெரிவு செய்­வதில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னை­யாகும். குறிப்­பாக தமது பெண் பிள்­ளை­க­ளுக்கு பெண்கள் பாட­சா­லை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பெற்றோர் இன்று பலத்த போராட்­டங்­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

மத்­திய கொழும்­பி­லுள்ள பாத்­திமா மற்றும் கைரியா பாட­சா­லை­க­ளுக்கு விண்­ணப்­பித்து நிரா­க­ரிக்­கப்­பட்ட பெற்றோர் நாளுக்கு நாள் என்­னிடம் உத­வி­தேடி வரு­கின்­றனர்.

இந்த இரண்டு பாட­சா­லை­க­ளுக்கும் பல­நூறு விண்­ணப்­பங்கள் வரு­கின்­றன. அவர்­களால் அனைத்து விண்­ணப்­பங்­க­ளையும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ளது. கொழும்பு நகரின் சனத்­தொகை அதி­க­ரிப்­பிற்கு ஏற்­ற­வாறு எமது பாட­சா­லைகள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டா­தது பெரும் குறை­யாகும். கடந்த 20 வருட காலத்தில் ஒழுங்­காக பாட­சா­லைகள் அபி­வி­ருத்திச் செய்­யப்­ப­டாத கார­ணத்­தினால் இன்று மக்கள் பெரும் கஷ்­டங்­களை எதிர் நோக்க வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றனர்.

எமது பெற்றோர் தமது பெண் பிள்­ளை­களை பெண்கள் பாட­சா­லைக்கு அனுப்­பு­வ­தற்கே அதிகம் விரும்­பு­கின்­றனர். இதனால் பெண்கள் பாட­சா­லை­க­ளுக்கு கேள்வி அதி­க­ரித்­துள்­ளது.

இந்த நெருக்­க­டியை குறைப்­ப­தற்கு நாம் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறோம். அதன் ஒரு நட­வ­டிக்­கை­யாக மத்­திய கொழும்பில் உள்ள கலவன் பாட­சா­லை­களை தனி­யான ஆண்கள் மற்றும் பெண்கள் பாட­சா­லை­யாக நாம் மாற்றி வரு­கிறோம்.

கொழும்பு அல் ஹிதாயா மகா வித்­தி­யா­ல­யத்தை பெண்கள் பாட­சா­லை­யா­கவும், மாளி­கா­வத்தை தாருஸ்­ஸலாம் மகா வித்­தி­யா­ல­யத்தை ஆண்கள் பாட­சா­லை­யா­கவும் நாம் மாற்றி இருக்­கிறோம். அதே­போன்று எமது மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான ஏ.ஜே.எம். பாயிஸ், அர்ஷாத் நிஸாம்தீன் போன்றோர் இந்தத் திட்­டங்­க­ளுக்கு உழைத்து வரு­கின்­றனர். கொழும்பு வடக்கு பாட­சா­லை­க­ளான ஹம்ஸா வித்­தி­யா­லயம் ஆண்­க­ளுக்­கான பாட­சா­லை­யா­கவும், சேர் ராஸிக் பரீத் வித்­தி­யா­லயம் பெண்­க­ளுக்­கான பாட­சா­லை­யா­கவும் மாற்­றப்­பட்டுள்­ளன.

எமது கலா­சாரம் ஏற்­றுக்­கொண்­டுள்ள பெண் பிள்­ளை­களும், ஆண் பிள்­ளை­களும் தனி­யாக கற்கும் இந்த வேலைத்­திட்டம் பல­ரதும் பாராட்டைப் பெற்று வரு­கி­றது. அது மட்­டு­மல்­லாமல், பெண்கள் பாட­சா­லைக்கு இருக்கும் கேள்­வி­யையும் நெருக்­க­டி­யையும் இந்தத் திட்டம்  எதிர்­கா­லத்தில் குறைக்கும் என்றும் நம்­பப்­ப­டு­கின்­றது.

சிங்­கள மொழி­மூல ஆரம்பப் பாட­சாலை ஒன்றை மத்­திய கொழும்பில் புன­ர­மைக்கும் பணியில் நான் ஈடு­பட்­டுள்ளேன். கொழும்பு 12. குண­சிங்­க­பு­ரவில் உள்ள ஏ.ஈ. குண­சிங்க வித்­தி­யா­ல­யத்தை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புன­ர­மைத்து வரு­கிறோம்.

முற்­றிலும் தன­வந்­தர்­களின் நிதி உத­வி­யினால் இந்த அபி­வி­ருத்தித் திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. சிங்­கள மொழி மூலம் கற்க விரும்பும் மாண­வர்­க­ளுக்கு இது ஒரு சிறந்த சந்­தர்ப்­ப­மாக அமை­ய­வி­ருக்­கி­றது.

இது ஓர் ஆரம்ப பாட­சா­லை­யாகும். தரம் ஒன்­றி­லி­ருந்து தரம் ஐந்து வரை கற்­ப­தற்கு இந்த பாட­சா­லையில் அனு­மதி வழங்­கப்­படும். ஆறாம் ஆண்­டி­லி­ருந்து இவர்கள் வேறு பாட­சா­லை­க­ளுக்கு மாற்றி கல்­வியை சிறந்த முறையில் தொடர்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளையும் நாம் செய்து வரு­கிறோம் என்றும் கூறினார்.

கோட்டக் கல்விப் பணிப்­பாளர் பிரபா
கொழும்பின் கல்வி வளர்ச்சி திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. உதா­ரணத்­திற்கு அண்­மையில் வெ ளியான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறு­பே­றின்­படி கொழும்பு கல்வி வல­யத்தில் தமிழ் மொழி மூல­மான பாட­சா­லை­களின் பெறு­பேறு மிகவும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இதனை வைத்­துக்­கொண்டு, சிங்­கள மொழியில் சிறந்த பெறு­பேற்றை பெற்­றுக்­கொள்ள முடியும் என்­கிற அர்த்­தத்தை நாம் எடுத்­துக்­கொள்ளக் கூடாது. பாட­சா­லை­களில் இவ்­வா­றான வீழ்ச்­சிப்­போக்­குக்கு காரணம் பாட­சா­லை­களில் கல்­வியை நோக்­கா­கக்­கொண்ட அபி­வி­ருத்­திகள் காணப்­ப­டா­மை­யாகும். 

இலங்கை சுகா­தார ரீதியில் முன்­னேற்றம் கண்­டுள்­ளது. இதனால் நமது நாட்டில் சுகப் பிர­சவம் அதி­க­மாகும். அந்­த­வ­கையில் பாட­சா­லைக்கு செல்லும் அனைத்து பிள்­ளை­களும் ஆரோக்­கி­ய­மா­கவே பிறக்­கின்­றனர். இவ்­வ­ாறான ஆரோக்­கி­ய­மான பிள்­ளை­களை நாம் அடிப்­படை தேர்ச்­சி­ய­டையச் செய்ய வேண்டும். இது பாட­சா­லையின் கல்வி அபி­வி­ருத்­தி­யி­லேயே தங்­கி­யி­ருக்­கி­றது. 

கொழும்பில் பாட­சா­லை­களின் கல்வி நிலை நாம் எதிர்ப்­பார்க்கும் நிலையில் இல்லை. தேசிய ரீதியல் கொழும்பு வலயம் மிகவும் பின்­தங்­கி­யி­ருக்­கி­றது. இது  20 வரு­டங்­க­ளுக்கு பின்னர் ஏற்­பட்­டுள்ள பாரிய பின்­ன­டை­வாகும். இதனால் கல்வித் துறையில் எதிர்க்­கா­லத்தில் பாரிய அச்­சு­றுத்­தல்கள் காணப்­ப­டலாம். 

பாட­சா­லைக்கும் சமூ­கத்­திற்­கு­மான உறவு வலுப்­பெற வேண்டும். இது எமது கல்­வித்­திட்­டத்­திலும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது.  இந்தப் பொறுப்பை பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கத்­தி­லுள்ள பெற்­றோர்கள் மேற்­கொள்ள வேண்டும்.  

பாட­சா­லையின் அபி­வி­ருத்திச் சங்­கத்தில் நிரந்தர உறுப்­பி­னர்கள் இருக்க முடி­யாது. ஒருவர் இரு தட­வைகள் அபி­வி­ருத்தி சங்க உறுப்­பி­ன­ராக இருந்து பாட­சா­லையில் அபி­வி­ருத்­திக்கு பங்­க­ளிப்பு செய்­யலாம். பின்னர் அவர்கள் அடுத்­த­ த­லை­மு­றை­யி­ன­ருக்கு இட­ம­ளிக்க வேண்டும். அவர்­க­ளுடன் இணைந்து பாட­சா­லையின் வளர்ச்­சிக்கு பங்­காற்­றலாம். 

பாட­சா­லைகள் எதிர்காலத் தலை­மை­களை உரு­வாக்கும் இட­மாகும். நாம் முதலாம் தரத்­திற்கு ஒரு மாண­வனை சேர்க்­கும்­போது 13 வரு­டங்­க­ளுக்­குப்­பின்னர் உலகம் எவ்­வாறு இருக்கும் என்­பதை அறிந்­தி­ருக்­கப்­போ­வ­தில்லை. ஆனால் அப்­போ­தைய நிலை­மைக்கு ஏற்­ற­வாறு பிள்­ளைகள் புடம்­போ­டப்­பட்­டி­ருக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே பாட­சா­லைக்கு பிள்­ளை­களை சேர்க்­கிறோம். 

இந்­நி­லையில் சிறந்­த பல தலை­மை­களை உரு­வாக்­கு­வ­தற்கு பங்­க­ளிப்பு செய்­ய­வேண்­டி­ய­வர்­க­ளாக சமூ­கத்­தி­லுள்­ள­வர்­களே இருக்­கின்­றனர். கொழும்பு மாவட்­டத்தின் தமிழ் மொழி­மூல பாட­சா­லையின் வளர்ச்சி குறை­வாக இருப்­ப­தாக நாம் குறிப்­பி­டு­கையில்,  பாட­சா­லையின் வளர்ச்­சிக்கு அபி­வி­ருத்­திக்­குழு எவ்­வாறு பங்­க­ளிக்­கலாம்?

அல்­லது எமது பாட­சா­லை­க­ளுக்கு பல­வி­த­மான தேவைகள் இருக்கும் நிலையில் நாம் எவ்­வாறு எமது காத்­தி­ர­மான உத­வி­களை வழங்­கலாம். பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கத்­தி­லுள்ள உறுப்­பி­னர்­களால் ஆசி­ரி­யர்­க­ளையோ அதி­ப­ரையோ மேற்­பார்வை செய்ய முடி­யாது. அதனை வல­யக்­கல்விக் காரி­யா­லயம் மற்றும் அதற்கு மேலுள்ள நிர்­வா­கங்­க­ளி­னா­லேயே மேற்­கொள்ள முடியும். 

பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கத்­தினர் பாட­சா­லைக்குள் நுழை­யும்­போ­தி­லி­ருந்து எமது ஒழுக்கக் கட்­டுப்­பா­டுகள் ஆரம்­பிக்­கி­றது. பாட­சாலை என்­பது சமூக கலா­சா­ரத்தை கற்­பிக்கும் இட­மாகும். எனவே, பாட­சா­லைக்குள் செல்­லும்­போது ஒழுக்­க­மான கலாசார ஆடை­க­ளுடன் பிர­வே­சிக்க வேண்டும்.

அத்­துடன் மாண­வர்­களின் கற்றல் நேரத்தை வீண­டிக்கும் வகையில் நாம் பாட­சா­லைக்கு பிர­வே­சிக்­க­லா­காது. மாண­வர்­களின் கல்வி வளர்ச்­சிக்கும் எமது செயற்­பா­டுகள் உறு­து­ணை­யாக இருக்க வேண்டும்.  எமது சமூ­கத்தின் வளர்ச்­சிக்­காக எம்­மி­டத்தில் தன்­ன­ல­மற்ற அர்ப்­ப­ணிப்பு அவ­சி­ய­மா­ன­தாகும். 

எமது நாடு அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடு அல்ல. எமக்கு பாரிய கடன் சுமைகள் இருக்­கின்­றன. இவ்­வா­றான நிலையில் பாட­சா­லை­களின் சகல தேவை­க­ளையும் அர­சாங்­கத்­தினால் செய்ய முடி­யாது. பாட­சா­லை­களின் குடிநீர், கழி­வ­கற்றல், வடிகான் முறைகள் மற்றும் மல­ச­ல­கூட வச­திகள் சீராக இருக்க வேண்டும். இவ்­வா­றான அபி­வி­ருத்­திப்­ப­ணி­க­ளுக்கு சமூ­கத்தின் பங்­க­ளிப்பு அவ­சி­ய­மா­ன­தாகும். அத்­துடன் இன்று பலர் பாட­சா­லை­க­ளுக்கும் கல்வி அபி­வி­ருத்­திக்கும் உத­வி­செய்ய முன்­வ­ரு­கின்­றனர். அவர்­க­ளை­கொண்டு பாட­சா­லையை அபி­வி­ருத்தி சங்­கத்­தினர் வளர்ச்­சிப்­பா­தையில் இட்­டுச்­செல்­லலாம். 

பாட­சா­லையின் முத­லா­வது பாடத்தில் மாண­வர்கள் மிகவும் சோக­மாக இருக்­கின்­றனர். இதற்கு காரணம் முதல் நாள் வீட்டில் பெற்­றோ­ருக்­கி­டை­யிலோ அல்­லது வீட்டுச் சூழலில் ஏற்­பாட்ட பிரச்­சி­னை­களை யோசித்தோ மாண­வர்கள் சோர்­வா­கவே இருக்­கின்­றனர். இரண்­டா­வது பாட­மா­கின்­ற­நே­ரத்தில் அவர்­கள் களைத்­துப்­போ­கின்­றனர்.  மாண­வர்கள் காலை உணவை அருந்தி பாட­சா­லைக்கு வரா­மையே இதற்கு கார­ண­மாகும். இது மிகவும் கவ­லைக்­கி­ட­மான நிலை­மை­யாகும். எனவே ஒவ்­வொரு பெற்­றோரும் காலையில் எழுந்து பிள்­ளை­க­ளுக்கு சோறும் தேங்காய் சம்­ப­லுமா­வது செய்து கொடுக்க வேண்டும். இந்த வகையிலாவது குழந்­தை­களை ஆரோக்­கி­ய­மாக வைத்­துக்­கொள்ள வேண்டும். 

சீனாவில் இடம்­பெற்ற ஒலிம்பிக் போட்­டியில் சீனா அதி­க­மான பதக்­கங்­களை பெறு­வ­தற்கு பல வரு­டங்­க­ளுக்கு முன்­னரே அவர்கள் தயா­ராகின்றனர். குறிப்­பாக பிள்­ளைகள் பிறந்­த­து­முதல் அவர்­க­ளுக்கு ஆரோக்­கி­ய­மான உண­வு­களை வழங்கி ஒலிம்­பிக்­போட்­டிக்கு தயார்­ப­டுத்­தினர். இவ்­வாறே நாமும் ஆராக்­கி­ய­மான எதிர்­கால சந்­த­தியை தயார்­ப­டுத்த வேண்டும்.

அதற்­காக ஒவ்­வொரு பெற்­றோரும் தம் பிள்­ளை­க­ளுக்கு ஆரோக்­கி­ய­மான உணவை வழங்கி பாட­சா­லைக்கு அனுப்­ப­வேண்டும். அத்­து­டன் சிறந்த மன­நி­லை­யையும் அவர்­க­ளுக்கு வழங்க வேண்டும் . 

அத்­துடன் பிள்­ளை­களை குளிக்க வைத்து பாட­சா­லைக்கு அனுப்­பாத நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன. அண்­மையில் ஒரு பாட­சா­லையில் ஒரு பிள்­ளையின் அருகில் இருக்க முடி­யாது நாற்றம் அடிக்­கி­றது என ஏனைய பிள்­ளைகள் ஆசி­ரி­ய­ரிடம் முறை­யிட்­டி­ருக்­கின்­றனர். பின்னர் அந்த பிள்­ளையை பிறி­தொரு இடத்­துக்கு அழைத்­துச்­சென்று பர்­தாவை களைந்து பார்க்­கும்­போது அவள் குளித்து நீண்ட நாளா­கி­ருப்­பது தெரி­ய­வந்­தது. தலையில் பேன் மற்றும் ஊத்­தைகள் இருந்­தன. பின்னர் பாட­சா­லையின் சிற்­றூ­ழி­ய­ரை­க்கொண்டு அந்த பிள்­ளை குளிக்கச் செய்­யப்­பட்­டது. இதுவா பாட­சா­லையின் வேலை. இதனை பெற்­றோர்­கள்தான் செய்ய வேண்டும். 

அது மட்­டு­மல்ல தயவு செய்து மாலை 6 மணிக்கும் இரவு 8 மணிக்­கு­மி­டையில் வீட்டில் தொலைக்­காட்சி பெட்­டியை போட்டு வைக்க வேண்டாம். இந்த நேரந்தான் மாண­வர்­களின் கற்­ற­லுக்கு மிகவும் பொருத்­த­மான நேரம். இதுவே பிள்ளை நல்ல முறையில் கல்வி கற்கும் நேர­மாகும். இந்த நேரத்தை வீண­டிக்க வேண்டாம். பிள்­ளை­க­ளுக்கு பக்­கத்­தி­லி­ருந்து அவர்­களின் கற்­ற­லுக்கு உத­வுங்கள். 
இன்று பெற்­றோர்கள் தம்மு­டைய வேலை­களை செய்­வ­தில்லை. ஆனால் ஆசி­ரி­யர்கள் என்ன செய்­கி­றார்கள் என்­றுதான் பார்க்­கின்­றனர். இது தவ­றான செயற்­பா­டாகும். 

அத்­துடன் தாய்க்கும் தந்­தைக்கும் தெரிந்த மொழியில் பிள்­ளை­களை படிக்க வையுங்கள். சில பாட­சா­லை­களின் மொழி விளங்­காது பிள்­ளைகள் மிகவும் கஷ்­டப்­ப­டு­கின்­றனர். மொழியை கற்­றுக்­கொள்­வ­தற்கே பிள்­ளைக்கு ஐந்­தாறு வரு­டங்கள் ஆகின்­றன. இதனால் பிள்ளை ஆரம்பக் கல்­வியை முழு­மை­யாக இழக்­கின்­றன. இது குறித்த விழிப்­பு­ணர்வு இன்று சமூக மட்­டத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. 

அத்­துடன் இன்றும் பாட­சா­லை­க­ளி­லி­ருந்து மாணவர் இடை வில­கல்கள் காணப்­ப­டு­கின்­றன. இத­னா­லேயே வீதி­யோரக் குழந்­தைகள் என்ற ஒரு நிலை கொழும்பில் காணப்­ப­டு­கின்­றது.  

இவ்­வா­றான நிலை­மைகள் ஆசி­ரி­ய­ருக்கும் அதி­ப­ருக்கும் பாட­சா­லைக்கும் எவ்­வ­ளவு ஒத்­தா­சை­யாக இருக்­கிறோம் என்­பது கேள்­விக்­குறி­யா­கி­யுள்­ளது. யாரையும் குறை சொல்ல முடி­யாது. ஆனாலும் நாம் செய்ய வேண்­டிய கட­மைகள் ஏராளம் இருக்­கின்­றன. 
சிலர் தமது சுய இலா­பத்­திற்­காக பாட­சா­லை­களை பயன்­ப­டுத்­து­கின்­றனர். சமூ­கத்­தி­லுள்­ள­வர்கள் அதி­பர்­களை தவ­றாக பயன்­ப­டுத்­தினால் அதனை அதி­கா­ரி­க­ளினால் தடுக்க முடி­யாது. இதனை பாட­சாலை அபி­வி­ருத்தி குழுவே தடுத்து நிறுத்த வேண்டும். 

எங்­க­ளுக்கு முன்னால் மிகப்­பெரும் சவால்கள் இருக்­கின்­றன. நாம் சவால்­மிக்க உலகில் வாழ்­கிறோம். வெளிப்­ப­டை­யாக கூற­மு­டி­யாத பல விட­யங்கள் எம்மைச் சூழ இடம்­பெ­று­கின்­றன. தீய சக்­திகள் எங்­களை சூழ இருக்­கின்­றன நாம் அவற்­றி­லி­ருந்து எம்மை காப்­பாற்­றிக்­கொள்ள வேண்டும். இதற்கு எமது பாட­சா­லைகளை காப்­பாற்றிக் கட்­டி­யெ­ழுப்­ப வேண்டும். இதற்கு கல்­வியே ஒரே தீர்­வாக இருக்­கி­றது. வேறு எந்தத் தீர்வும் எம்மை முன்­னோக்கி எடுத்துச் செல்­லப்­போ­ல­தில்லை. 

சவால்­க­ளி­லி­ருந்து பாட­சா­லை­களை மீட்க அரச திணைக்­க­ளங்­களால் மாத்­திரம் முடி­யாது.  கல்­வியை முன்­னேற்­றப்­பா­தையில் எடுத்­துச்­செல்ல பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கமும் பெற்­றோர்­களும் முயற்­சிக்க வேண்டும். உதவி புரி­வோர்­க­ளுக்கும் பாட­சா­லைக்கும் பால­மாக இருந்து கல்வி அபி­வி­ருத்­திக்கு உறு­து­ணை­யாக இருக்க வேண்டும். அதி­க­மான பணத்தை நாம் வீண­டிக்­கிறோம். அவற்றைப் பாட­சா­லை­களுக்கும் கல்வி வளர்ச்­சிக்­கா­கவும் செல­விட முடியும். 

கல்வி மீது தற்­போ­தைய பெற்­றோ­ருக்கு நம்­பிக்கை ஏற்­ப­டாமல் இருப்­பதும் வீதி­யோரச் சிறு­வர்கள் இன்னும் மத்­திய கொழும்பில் காணப்­ப­டு­வதும் எமது முன்­னோர்கள் செய்த பிழை­யாகும். அதே பிழையை நாமும் செய்தால் இன்னும் இரண்டு மூன்று தலை­மு­றை­யி­னர்கள் வீதியில் இருப்பர். அவர்கள் வீணாகி விடுவர். எனவே எங்­க­ளு­டைய இனம் மீதும் எமது பாட­சா­லையின் மீதும் எம்­மு­டைய மொழி மீதும் தன்­ன­ல­மற்ற ஈடு­பாடும் பற்றும் ஏற்­பட வேண்டும். 

நிரு­வாக ரீதி­யாக ஏற்­படும் சிக்­கல்­களை தீர்ப்­ப­தற்கு அரச திணைக்­க­ளங்­க­ளி­னூ­டாக தாரா­ள­மாக உதவி செய்ய முடியும். 

அஷ்ஷெய்க் யூ.கே. றமீஸ்
கொழும்பில் வாழும் முஸ்­லிம்கள் நாட்டில் தலை நிமிர்ந்து சாதனை புரியும் சமூ­க­மாக வாழ கல்வி முன்­னேற்­றமே அடிப்­ப­டை­யாகும். 
நமக்கு வய­தா­கி­விட்­ட­தென்று சமூ­கத்­திற்­காக உழைக்­காமல் இருக்க முடி­யாது. கல்­வியின் அபி­வி­ருத்­திக்­காக நாம் ஒத்­துழைக்க் வேண்டும். சமூக அபி­வி­ருத்­திக்கு பங்­க­ளிப்பு செய்ய வரும் இளை­ஞர்கள் மட்டம் தட்­டப்­ப­டு­கின்­றனர். இது முஸ்லிம் சமூ­கத்தின் வளர்ச்­சியை தடுக்­கின்­றது. எனவே அவர்­களை ஊக்­கு­வித்து நாமும் இணைந்து சேவை­யாற்ற முன்­வர வேண்டும். 

பாட­சாலை வளர்ச்­சியில் நாம் எவ்­வாறு ஒத்­து­ழைக்க வேண்டும், மாண­வர்­களை எவ்­வாறு ஊக்­கு­விக்­கலாம், அர­சியல் தலை­மை­களின் ஒத்­து­ழைப்பை எவ்வாறு பெறலாம் என்­பது குறித்து நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. 

கட்­டி­ளமை பருவம் என்­பது பிள்­ளைகள் மிகவும் துடிப்­புடன் இருக்கும் காலம். இந்த கால கட்­டத்தில் அவர்­களைத் சரி­யான பாதையை காட்­டா­விட்டால் எமது பிள்­ளைகள் தடம்­பு­ரள்­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­கி­றது. இப்­ப­ரு­வத்­தில்தான் அவர்­க­ளது திற­மை­களைக் கண்டு அவர்­க­ளுக்கு தட்­டிக்­கொ­டுக்க வேண்டும். பிள்­ளை­க­ளுடன் இணைந்து அவர்­களின் இலக்­கு­களை அறிந்து அவர்­களை ஊக்­கு­விக்க வேண்டும். 
இன்று எமது சமூ­கத்தில் நடந்­தி­ருப்­பது வேறு வித­மாக இருக்­கி­றது. பெற்­றோர்கள் எப்­போ­துமே ஆசி­ரி­யர்­களை குற்றம் சொல்­லிக்­கொள்ளும் தரப்­பா­கவே இருக்­கின்­றனர்.

ஆசி­ரி­யர்­களும் பெற்­றோர்­களை குறை­பி­டிப்­பதில் இருக்­கின்­றனர். எதிர்­கால சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப பெற்­றோர்கள், ஆசி­ரி­யர்கள், கல்வி அதி­காரிகள் என்­கிற வித்­தி­யா­ச­மான தரப்­புகள் சம்­பந்­தப்­ப­டு­கின்­றனர்.  இவர்கள் அனை­வரும் இணைந்து செயற்­பட்­டால்தான் நல்ல மாணவர் சமூ­கத்தை உரு­வாக்க முடியும். எதிர்­கா­லத்தில் நல்­ல­தொரு முன்­னேற்­றத்தை காணக் கூடி­ய­தாக இருக்கும். நல்­ல­தொரு மாற்­றமும் அடைவும் எமக்கு கிடைக்கும். 

மாண­வர்­களின் கற்­ற­லுக்கு போது­மான வச­திகள் பாட­சா­லை­களில் முழு­மை­யாக இல்லை. வச­தி­யுள்ள பாட­சா­லை­க­ளாக எமது கல்விக் கூடங்­களை மாற்­றி­ய­மைக்க நாம் பாடு­பட வேண்டும். 

அத்­துடன் மாண­வர்கள் சமூ­கத்­தி­லி­ருந்தே கற்­றுக்­கொள்­கின்­றனர். அவர்கள் கேள்வி ஞானத்தில் கற்­பதை விட, நேர­டி­யாக பார்த்து தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர். ஆகையால் சமூக மாற்­றத்­தி­லேயே மாண­வர்­களின் நடத்தை மாற்­றமும் தங்­கி­யி­ருக்­கி­றது. 
எமது பாட­சா­லை­களின் கல்வி அபி­வி­ருத்தி முன்­னேற்­றத்­திற்­காக பல திட்­ட­மி­டல்­களை முன்­னெ­டுக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது. 

எமது பாட­சாலை அபி­வி­ருத்­தியில் பாரிய சவால்கள் இருப்­பதை நாம் உணர்­கிறோம். அவை சவால்­களே அல்ல. உள­வியல் ரீதி­யி­லான அணுகு­மு­றையால் அவற்றை முறி­ய­டிக்­கலாம். இதனை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக நாம் ஒன்­று­பட வேண்டும். பாட­சா­லை­யுடன் தொடர்­பு­டைய தரப்­பி­னரின் பரஸ்­பர ஒத்­து­ழைப்பும் அவ­சி­ய­மா­கி­றது. 

இன்று எமது சமூ­கத்தில் தீய செயல்­களை மேற்­கொள்­வ­தற்கு ஒத்­து­ழைப்­புகள் தாரா­ள­மாக காணப்­ப­டு­கின்­றன. ஆனால் நற்­க­ரு­மங்கள் மேற்­கொள்­ளு­மி­டங்­களில் வெட்டும் கொத்­தும்தான் காணப்­ப­டு­கின்­றன. எம்மால் ஒத்துழைக்கு முடிந்தால் ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். 

 'கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, கல்விக்கு உதவி செய்பவனாக இரு, நான்காம் நபராக இருந்துவிடாதே' என நபியவர்கள் கூறினார்கள். எமது சமூகத்தில் கற்பவர்களும் குறைந்துள்ளனர். கற்பிப்பவர்கள் அதைவிடவும் குறைவாகவே இருக்கின்றனர். கல்விக்கு உதவுவோரும் மிகக் குறைவாகவே உள்ளனர். கல்விக்கு தடையாக நிறையபேர் இருக்கின்றனர். இப்படியானதொரு நிலையில் எப்படி நாம் கல்வி வீழ்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்? 

கல்விக்கு ஆதரவளிப்பவர்களின் முயற்சி மிகக் குறைவாக இருப்பின் இன்னும் 100 வருடங்களுக்கு எமது நிலை இன்னும் கீழ் மட்டத்திற்கு சென்றுவிடும். எனவே அவசரமாக கல்விக்கான ஒத்துழைப்பை மேற்கொள்ளவேண்டிய தேவை எமது சமூகத்தின் முன் இருக்கிறது. 

எனவே நாம் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும். முடியும் என்கிற எண்ணத்தை உறுவாக்கிக்கொள்ள வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் மாற்றமொன்றை கொண்டுவரலாம் என்கிற எண்ணத்தை விதைப்போம். நாம் அனைவரும் இணைந்து கொழும்பு மாவட்ட கல்வியை முன்னேற்றப் பாடுபட வேண்டும்.

இதற்கு அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாத் நிசாமுதீன், ஜே.எம்.பாயிஸ் ஆகியோர் வழங்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள் என எதிர்ப்பார்க்கலாம். 

கொழும்பு மாவட்ட பிரச்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டும். அவற்றிலிருந்து பின்னிற்க முடியாது என்றார். 
இதன்போது, நிகழ்வில் கலந்துகொண்ட கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி சங்கத்தில் அங்கம் வகிக்கும் பெற்றோர்களும் கருத்து வெளியிட்டனர். 

இவ்வாறான விளிப்புணர்வு கருத்தங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்படவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததுடன், கொழும்பு மாவட்ட பாடசாலைகளின் அபிவருத்திக்கு கொழும்பிலுள்ள தலைமைகள் அரசியல் பகைமைகளை மறந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். 

இந்தக் கருத்தரங்கில் சட்டத்தரணி யூ. ஏ. நஜீப், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு தலைவர் இஸ்மத்,  மேல்மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாத் நிஸாம்தீன், ஏ.ஜே.எம். பாயிஸ் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்

கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களின் கல்வி அபி­வி­ருத்­தியில் பாட­சாலை அபி­வி­ருத்தி சங்­கத்தின் பங்­க­ளிப்பு குறித்­தான விசேட கருத்­த­ரங்கு... கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாட­சா­லை­களின் கல்வி அபி­வி­ருத்­தியில் பாட­சாலை அபி­வி­ருத்தி சங்­கத்தின் பங்­க­ளிப்பு குறித்­தான  விசேட கருத்­த­ரங்கு... Reviewed by Madawala News on 11/02/2016 07:41:00 PM Rating: 5