Accaddemy

பிரித்தானியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக அமாரி விரேவர்தன ( பிரதமரின் மாமி) நியமனம்

பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்திற்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அமாரி மந்திக விஜயவர்தன தனது நியமன சான்றிதழை 2வது எலிசபெத் மகாராணியிடம் கையளித்தார்.

இது தொடர்பான நிகழ்வு பக்கிங்ஹாம் மாகாராணியின் மாளிகையில் இடம்பெற்றது.

உயர்ஸ்தானிகர் விஜயவர்தன பக்கிங்ஹாம் மாளிகைக்கு 4 இலங்கை இராஜதந்திரிகளுடன் சம்பிரதாய பூர்வமாக அழைத்துச்செல்லப்பட்டதுடன் 2வது எலிசபெத் மகாராணிக்கும் விஜயவர்தனவிற்கும் இடையில் நட்புறவு ரீதியிலான கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்துக்களை 2வது எலிசபெத் மகாராணிக்கு உயர்ஸ்தானிகர் தெரிவித்துக்கொண்டார்.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவினை மேம்படுத்துவது தொடர்ப்பிலும் விரிவான கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

உயர்ஸ்தானிகர் அமாரி விஜேயவர்த்தன 36 வருட நிர்வாக மற்றும் கைத்தொழில் உற்பத்தித்துறையிலும் சந்தைப்படுத்தல் ஏற்றுமதி துறையிலும் அனுபவம்மிக்கவராவார்.

லூஸியஸ் விரேவர்தனவின் மகளான அமாரி விஜேவர்தன Associated Newspapers of Ceylon Limited நிறுவனத்தின் உரிமையாளர் டி ஆர் விஜேவர்த்ஜனவின் மிக நெருக்கமான உறவினராவார்.

மேலும் இலங்கை பிரதமர் மற்றும் பாதூகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோரின் மாமி முறை உறவினராவார்.
 

பிரித்தானியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக அமாரி விரேவர்தன ( பிரதமரின் மாமி) நியமனம் பிரித்தானியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக அமாரி விரேவர்தன ( பிரதமரின் மாமி) நியமனம் Reviewed by Madawala News on 11/17/2016 08:12:00 PM Rating: 5