Free Space

கடந்தகால மோசடிகளுடன் பார்க்கும் போது மத்திய வங்கி முறி விடயம் ஒரு சிறிய சம்பவமே !


அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்ள, மத்திய வங்கி விவகாரத்தை எதிர்த்தரப்பினர் பயன்படுத்துவதாக, பாராளுமன்ற உறுப்பினர், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

தற்போது இடம்பெற்றதாக கூறப்படும் மத்திய வங்கி பிணை முறி மோசடிகள், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி மோசடிகள் அனைத்துடனும் ஒப்பிடுகையில் சிறிய சம்பவமே எனவும் அவர் கூறியுள்ளார். 

களனி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சரத் பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். 

கடந்தகால மோசடிகளுடன் பார்க்கும் போது மத்திய வங்கி முறி விடயம் ஒரு சிறிய சம்பவமே ! கடந்தகால மோசடிகளுடன் பார்க்கும் போது மத்திய வங்கி முறி விடயம் ஒரு சிறிய சம்பவமே ! Reviewed by Madawala News on 11/02/2016 07:42:00 PM Rating: 5