எமது ஆட்சியில் அனைத்தையும் அரசுடமையாக்குவோம் !


நல்லாட்சி அரசு வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு விற்றுவிட தீர்மானித்துள்ள நிறுவனங்களை கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ளவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இன்று பேருவளையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றும் போது ..

எனது காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களான ஹம்பந்தொட்ட  துறைமுகம் மத்தல விமான நிலையம் உள்ளிட்டவைகள் உற்பட அனைத்து நிறுவனங்களையும் கொள்வனவு செய்ய உத்தேசித்துள்ள இந்தியா சீனா என எந்த நாட்டு முதலீட்டார்களாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை எமது ஆட்சியில் அவை அனைத்தையும் அரசுக்கே எடுத்துக்கொள்வோம் என்ற விடயத்தை நான் கூறி வைக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஆட்சியில் அனைத்தையும் அரசுடமையாக்குவோம் ! எமது ஆட்சியில் அனைத்தையும் அரசுடமையாக்குவோம் ! Reviewed by Madawala News on 11/12/2016 10:12:00 PM Rating: 5