என்னையும் ஜெமீலையும் பிரிக்க சதி – கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..



சாய்ந்தமருதில் மு.காவின் தலைவர் அமைச்சர் ஹக்கீமை பேச விடாமல் கூப்பாடு போட்ட சம்பவம் அங்குள்ள மக்களின் எழுச்சியையே காட்டி நிற்பதாகவும் பதினாறு வருடங்கள் இந்த மக்களை ஏமாற்றியதன் விளைவே இந்த சம்பவத்தின் பின்னணி என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரும் லங்கா அசோக் லே லன்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீரா சாஹிப் தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது
 
மு.கா சாய்ந்தமருதில் மூக்குடைபட்டதனால் அதனை சமாளிப்பதற்காக அந்த கட்சியின் ஆதரவாளர்களால் நடாத்தப்படும் முக நூல்களும் இணைய தளங்களும் திரிவு படுத்தப்பட்ட பொய்யான செய்திகளை பரப்பி மக்களின் கவனத்தை வேறு திசையில் திருப்பும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அங்கம்  வகிக்கும் எனக்கும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் எங்கள் கட்சியின் பிரதித் தலைவருமான ஜெமீலுக்கும் இடையில் விரிசலை உருவாக்கி அதில் குளிர் காயலாமென நினைக்கின்றனர்.
 
தற்போது சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட எங்கள் இருவருக்கும் இடையில் எந்தவொரு பிரச்சினையுமில்லை.எங்கள் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீனின் சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் அவரது வழி காட்டலில் நாங்கள் கட்சியை முன்னோக்கி சிறப்பாக நகர்த்தி வருகின்றோம்.
 
மு.கா தொடர்ச்சியாக செல்வாக்கு இழந்து வருவதனாலும் சாய்ந்தமருதில் தனது இருப்பை பேய்க் காட்டி தக்க வைத்து கொள்ள முடியும் என்ற அக் கட்சியின் எண்ணம் தவிடு பொடியானதாலுமே அதனை மூடி மறைக்க பொய்யான செய்திகளை பரப்பி மக்கள் காங்கிரசிற்குள் பிரச்சினைகள் இருப்பதாக தவறான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.எனவேஇஜெமீல் தொடர்பாக நான் கூறியதாக மு.காவின் ஆதரவு இணைய தளத்தில் வெளியான செய்தி அப்பட்டமான பொய்யெனவும் சாய்ந்தமருது மக்களின் உள்ளக் குமுறலின் வெளிப்பாடே மு.கா கூட்டத்தை கூச்சலிட்டு குழப்பிய சம்பவமாகும் என்பதை உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.சாய்ந்தமருது மக்கள் துண்டு பிரசுரங்கள்இகறுப்பு கொடிகள் மற்றும் டயர்கள் போட்டு எரித்தமை மூலமும் தமது எதிர்ப்பை காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
 
எனவேஇஎனது பெயரை பயன்படுத்தி ஜெமீல் தொடர்பில் மு.கா சார்பு இணைய தளத்தில் வெளிவந்த செய்தி அப்பட்டமான பொய் என்றும் ஊடக தர்மத்தை பேணி அரசியல் நடத்துமாறும் நான் அன்பாய் வேண்டுகிறேன்.
என்னையும் ஜெமீலையும் பிரிக்க சதி – கலாநிதி சிராஸ் மீராசாஹிப்.. என்னையும் ஜெமீலையும் பிரிக்க சதி – கலாநிதி சிராஸ் மீராசாஹிப்.. Reviewed by Madawala News on 11/15/2016 06:11:00 PM Rating: 5