Ad Space Available here

ரணிலின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் மாமனிதர் அஷ்ரஃப் சந்தேகம் கொண்டார்...


இன்று ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் வைத்து தலைவர் அஷ்ரஃப் பை பற்றி எதுவுமே அறியாதவர்கள் தலைவரை கண்டிராதவர்கள் அவரை பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று ரிசாட் யை நோக்கி சொல்வது உண்மை அதே போலதான் ஹக்கீம் அவர்களும் புஹார்தீன் ஹாஜியாரால் கட்சிக்குள் அழைத்து கொண்டு வரப்பட்டார்.

ஆனால் கட்சிக்காக சமுகத்துக்காக துப்பாக்கிகளுக்கு நெஞ்சை கொடுத்து மறைந்த தலைவருடன் பாடுபட்டவர்கள் நாங்கள் 
தலைவர் சொல்லாமல் சொன்னார் ரணிலுடன் நான் கூட்டு சேரமாட்டேன் என்றார் 
அவருக்கு இவருடைய சியோனிய யூத வெளிநாட்டு கொள்கை தொடர்பான சந்தேகம் இருந்தது 
இவ்வாறு நிஜம் நூல் வெளியீட்டு விழாவின் போது தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான எ.எல்.எம் அதாஉல்லாஹ் குறிப்பிட்டார் 
இவ்வைபவம் கிண்ணியா நூலக மண்டபத்தில் இடம் பெற்றது. 
மேலும் அவர் உரையாற்றுகையில்
இன்று யானையில் போட்டியிருகிறார் என்பதற்காக அம்பாரை மாவட்ட சுமார் இருபதாயிரம் முஸ்லிம்கள் தயாகமகே என்பவரை ஆதரித்தனர் 
இது எம் சமுகம் காலாகாலமாக செய்துவரும் பிழையான அனுகு முறையாகும் 

இன்று என்ன நடக்கிறது மறைந்த தலைவர் அஷ்ரப் தீர்வு கண்டு தீகவாபிக் காணிகளை அளந்து எல்லை போட்டு கொடுத்தார்
ஆனால் இன்று கல்முனை பொத்துவில் எல்லாம் திகாவாபி விகாரை உரியவை என தயாகமகே கூறுகின்ற போது எம்மவர்கள் வாய் மூடிக்கிடக்கின்றனர் 
மாணிக்கமடு தமிழ் பிரதேசம் ஆனால் சிலை வைக்கப்பட்டிருப்பது தொடர்பில் அவர்கள் யாரும் பேசவில்லை 

இன்று வடகிழக்கை இணைக்க கோருகின்ற அஜன்டாவில் இவர்களுக்கு அவசியமானது சிங்கள முஸ்லீம் இன முரண்பாடு என்பது தெளிவாகின்றது. 

உரிமைக்காக உருவான கட்சி கோடிக்காணக்கான டீல் களுடன் சம்பந்தப்படுகின்ற கட்சியாக இன்று பேசப்படுவதை காண்கிறோம்

ரணிலிடம் எம்மை என்று ஹக்கீம் அடகு வைக்க துவங்கினாரோ அன்றிலிருந்து கட்சியின் உண்மை போராளிகள் தூர விலத்தப்பட்டனர்.
இன்று இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு காலாகாலமாக வழங்கப்பட்ட தனியார் சட்டங்களில் கை வைக்கின்ற அண்ணலார் கண்மனி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய சுன்னத்தை பிழை காண்கின்ற ஐரோப்பிய சிந்தனைகள் உள்வாங்கப்படுகின்ற சூழலில்
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அதற்க்கு ஏற்றாப்போல் தலை அசைப்பது எவ்வளவு பாரிய முட்டாள்தனமாகும்.
இதை நாம் அவசியமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஞானசாரவை தேரரை கைது செய்ய வந்த நல்லாட்சி ராசிக்கை கைது செய்து இருக்கிறது.  என்றார்

ரணிலின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் மாமனிதர் அஷ்ரஃப் சந்தேகம் கொண்டார்... ரணிலின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் மாமனிதர் அஷ்ரஃப் சந்தேகம் கொண்டார்... Reviewed by Madawala News on 11/19/2016 09:37:00 PM Rating: 5