Free Space

முஸ்லிம் கைதிகளின் போலி என்கவுண்டர் ?


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் --அக்கரைப்பற்று

போபாலில் சிமி கைதிகள் 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இவர்கள், என்கவுன்ட்டர் வீடியோவைப் பார்க்கும்போது இது ‘போலி என்கவுன்ட்டர்’ என்பதாகவே தெரிகிறது என்று கூறியுள்ளனர்.

“32 அடி உயர சிறைத் தடுப்புச் சுவரை எந்த ஒரு காயமுமின்றி எப்படி இவர்கள் ஏறிக் கடந்தார்கள்? இவ்வளவு போலீஸார் இருந்தும் அவர்களை ஏன் உயிருடன் பிடிக்க முடியவில்லை?” என்று சூஃபி அகாடமியின் சையத் தாரிக் குவாத்ரி கேள்வி எழுப்பினார்.

நிச்சயம் சிறையிலிருந்து இவர்கள் தப்பியதாகக் கூறப்படுவது சிறை கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருக்க வேண்டும். ஏப்ரல் 2015-ல் தெலுங்கானாவில் கொல்லப்பட்ட விகாருதீன் என்பவர் உட்பட 5 பேரை என்கவுன்ட்டர் செய்ததன் தொடர்ச்சியே இந்த நடவடிக்கையும் என்றார் அவர்.

இதுகுறித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''இந்த மாதிரியான என்கவுன்ட்டர்கள், அரசியல் பழிவாங்கல்களின் பெயரிலேயே நடைபெறுகின்றன.
தப்பியோடிய 8 பேரும் ஒரே இடத்தில் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி என நாடு முழுவதும் கேள்வி எழுந்தது.
என்கவுன்ட்டர் என்று கூறப்படும் வாதத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் மனதில் எழுந்துள்ள ஏராளமான கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.

இவை அனைத்துக்கும் அரசியல் பழிவாங்கல்களே காரணம். இதுபோன்ற சம்பவங்கள் தேசிய ஒருமைப்பாடு குறித்தும், ஒற்றுமை குறித்தும் கவலையை எழுப்புகின்றன'' என்று கூறியுள்ளார்.
முஸ்லிம் கைதிகளின் போலி என்கவுண்டர் ? முஸ்லிம் கைதிகளின் போலி என்கவுண்டர் ?  Reviewed by Madawala News on 11/02/2016 07:29:00 PM Rating: 5