Ad Space Available here

பக்தர்கள் இல்லாத இடத்தில் புத்தருக்கு என்ன வேலை?

இறக்காமம் என்பது ஒரு புராதன ஊர். மன்னர்கள் இலங்கையை ஆண்டபோது இறை அறவிட்டு ஒன்று சேர்க்கும் பிரதான நகரமாக இருந்துள்ளது. மன்னர்களுக்கு யானை பிடித்து கொடுக்கும் பெரும் பணிக்கர்களும் இருந்துள்ளார்கள். அவர்களது சந்ததிகள் இன்றும் வாள்கிறார்கள். தனி முஸ்லிம் பிரதேச சபை உள்ள கிராமம்.

மாணிக்கமடு என்பது இறக்காமத்தின் நிர்வாகத்துள் இருக்கும் தமிழர்களும் வாழும் ஒரு சிறு ஊர். அதில் எந்த பௌத்தரும் இல்லை. ஆனால் திடீரென அங்குள்ள மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சியிலும் இப்படியான பொலாட்சியா? ஏதிரணி இல்லாத அருசுக்கு வாக்களித்த மக்கள் வாயில் விரல் வைக்கின்றார்கள். வாக்கைப் பெற்றவர்கள் வழமைபோல வாயை பிளக்கிறார்கள்.

அன்று 1972ல் புத்தளம் பள்ளி தாக்கப்பட்டபோது தந்தை செல்லா பாரழுமன்றில் பேசினார். சென்ற ஆட்சியில் பேருவளை, அழுத்கமை பிரச்சினையின் போது சம்பந்தந் ஜயா பேசினார். தற்போது சம்பந்தன் ஜயாவும், ஹக்கீமும் சம்பந்தம் பேசி, பொன்னாடை போர்த்தி சந்தோசம் கொண்டாடுகிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற நினைப்பாக்கும். ஆனால் இன்று இந்த நாடு ஜரோப்பிய, அமெரிக்க,சியோனிஸ ஆக்கிரமிப்புக்கள்ளாகி உள்ளது. 

1982ல் அண்ணன் வேல்முருகு அவர்களது பாண்டிருப்பு வீட்டில் தேசிய இஸ்லாமிய அணியின் சார்பாக மர்ஹூமகளான் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி, அல்ஹஜ் அமீர்மேசா, இஜாபத்துல்லா, பஸீர், ஆகியோருடன் நானும், றிப்போடர் சலீம், றபீக் ளெலவி போன்றோர் அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களுடன் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணி பா.உ.கள் சிலரையும் சந்தித்து தேசியப்பிச்சினை சம்பந்தமாக முஸ்லிம்களதும், தமிழர்களதும் நிலைப்பாடு வடகிழக்கு இணைப்பு, பிரிப்பு என்பன பற்றி எல்லாம் மிக விரிவாக பேசினோம். அதில் வீற்றிருந்த சம்பந்தன் ஜயா அவர்கள் 'திருமலை துறைமுகத்தில் வெளிநாட்டார் கண் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பாதுகாக்க வேண்டும'; என்று கூறினார். அச்செய்தி மறு நாள் தினபதி பத்திரிகையின் தலைப்பு செய்தியாக பிரசுரிக்கப்பட்டது.

இவ்வாறு அன்று அறிவுரை கூறிய சம்பந்தன் ஜயா இன்று வெளி நாட்டு சக்கிகளுக்கு பின்னால் இருப்பதன் மர்மம்தான் என்ன? மத்திய கிழக்கில் அமெரிகாகவினதும், ஜரோப்பாவினதும் பிடி தளர்கிறது. அந்த நாடுகளை ஒட்டு மொத்தமாக சுரண்டி திண்டாகிவிட்டது, அவர்களது எண்ணைப்பசிக்கு அங்கு இனி தீனிகிடையாது. 

வங்காள விரிகுடாவிலும், வடக்கின் பேசாலையிலு;ம எண்ணை இருப்பது புலனாகிவிட்டது. அதை ஆட்கொள்ள வடக்கும் கிழக்கும் இணைந்த ஒரு ஆட்சி சர்வதேசத்துக்கு தேவைப்படுகின்றது. அதற்காக எத்தனை ஆயிரம் கோடி என்றாலும் முதலீடு செய்ய சர்வதேசம் தயாரகிவிட்டது. கிழக்கு தனித்தே தற்போது இருப்பதுபோல இருக்க வேண்டும் என்பதே சூடு சுறணை உள்ள ஒவ்வொரு முஸ்லிமினதும் பிரதிக்சினை. பணத்திற்கு சோரம் போகின்றவர்களைத்தவிர. 

வடக்கும் கிழக்கும் தற்போது இருப்பதுபோல இருப்பதில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சுpங்களவர்களுக்கு ஏழு முதலமைச்சர்கள், வடக்கில் தமிழருக்கு ஒரு முதலமைச்சர், கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு மதலமைச்சர். இதைவிட ஒரு நியாயம், நீதியான தீர்வு ஏதுமுள்ளதா? தற்போது வடக்கிலே வாழும் முஸ்லிம்களது மீழ் குடியேற்றம், அபிவிருத்தி என்பன வற்றிற்கு வடக்கு மாகாண சபை ஏதும் செய்யவில்லை என தமிழர்களே கூறுகிறார்கள். கிழக்கையும் இணைத்து அவர்களது கையில் கொடுத்தால் அரசன் பொண்டிலைப்பிடித்தால் யாரிடம் முறையிடுவது என்றாகிவீடம் முஸ்லிம்களது நிலை.

ஆனால் சர்வதேசத்தின் அஜந்தாவில் வடக்கையும் கிழக்கையும் இணைத்தே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அப்போதுதான் 1924ல் சவதியின் ஆட்சியை இப்னுசுஊத் எனும் பாலைவன கொண்ணைக்காரனின் கையில் கொடுத்டதுவிட்டு அங்குள்ள எண்ணையை எழுதிவாங்கியது போல வடக்கும் கிழக்கும் இணைந்த நிர்வாகத்தை அவர்களிடம் கொடுத்து எண்ணையை எழுதிவாங்க எடுக்கும் முயற்சிதான் இந்த கெடுபிடி. இந்த வலையில் ஹக்கீம் வீழ்நது விட்டார். சேதாரம் இல்லாமல்  தன்னை எப்படி வளப்படுத்துவது என அவர் துணிந்தவிட்டார். சேதாரத்தை அனுபவிப்பது வடகிழக்கு முஸ்லிம்கள்தான் அவரல்ல.

தான் சம்பந்தன் ஜயாபோன்று சர்வதேசத்திற்கு சம்மதம் தெரிவித்த வடகிழக்கு இணைப்பை எப்படியோ ஹக்கீம் சாதித்தாக வேண்டும். நமது நாட்டில் ஸியோனிசத்தின் ஆலோசனையில் சகல கைவரிசைகளும் நடந்தேறுகின்றது. அதில் ஒன்றுதான் பெண்கள் முகம் மூடுவது வாஜிபு என்ற றிஸ்வி முப்பதி அவர்களது குத்பா. ஹக்கீமின் மகளின் திருமணம் ஹிந்திப்படம் பார்ப்பதுபோல இருந்தது. அப்போது முப்தியின் வாய்க்கு முத்திரை இடப்பட்டுவிட்டது. 'அபுவுக்கு ஹிதுமத்' என்ற பெயரில் நடக்கும் அநியாயங்கள் பற்றிபேச எவருக்கும் துணிவில்லை. பல இனம் வாழும் நாட்டில் எது எதற்கு முன்னுருமை என்ற விடயம் நமக்கு புரியவேண்டும். இதை நாங்கள் பேச பௌத்த இனவாத சக்கிகள் பாதையில் இறங்க அதை நாம் எதிர்க்க அதில் பல உயிர்கள், உடமைகள் நாசமாக, சென்ற ஆட்சியில் ஆட்சி மாற்றத்திற்க களம் அமைத்தாற்போல் உணர்ச்சி வசப்படும் முஸ்லிம்களை உசுப்பிவிடும் சியோனிஸத்தின் சதிக்கு சேவகம் செய்யம் செயலாகாதா? இதனால் சிங்களவர்களுடன் ழாள்வதைவிட தமிழர்களுடன் வடகிழக்கில் இணைந்து வாழ்வது மேல் எனும் செயற்கையான சிந்தனைக்கு கிழக்கு முஸ்லிம்களை இழுத்துச்செல்லும் செயலாதகாதா?

இதே போன்ற ஒன்றுதான் பக்தர்கள் இல்லாத மணிக்கமடுவில் புத்தர் சிலை வைத்தது. முஸ்லிம்களது ஒட்டுமொத்தவாக்கால் தெரிவான நல்லாட்சி அரசு இதை ஏன் செய்கின்றது. தமிழர் பாரம்பரிய நிலங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதை மஹிந்த ஆட்சியில் உரத்து கண்டித்த சர்தேசம் ஏன் இதை பார்த்துக் கொண்டிருக்கிறது. 
இதை தற்போது செய்விப்பவர்கள் இலங்கையில் கால்பதித்துள்ள சியோனிஸவாதிகள்தான் என்பது எம்மில் எத்தனைபேருக்கு தெரியும்? நமது அரசில் வாதிகள் இதில் எதைத்தான் செய்யப்போகிறர்கள். இந்த நவீன தொடர்பு சாதனங்கள் உள்ளகாலத்தில் சம்பந்தனும்,ஹக்கீமும் சிலையை நேரில் சென்று பார்த்தார்களாம். இது அவர்கள் மீது சாட்டப்படும் எதிர்ப்பை சமாளிக்கும் உக்தியாகும். இதனால் சிங்களவர்கள் மீது கிழக்கு முஸ்லிம்களை சினம் கொள்ள வைத்து இந்த சிங்களவனுடன் வாழ்வதைவிட வடகிழக்கு இணைந்த தழிர்களுடன் வாள்வதுமேல் எனும் ஒரு செயற்கை சிந்தனை நிலைக்கு கிழக்கு முஸ்லிம்களை உசுப்பும் சியோனிச சதியாகும். 

அதுமட்டுமல்ல ஜீ.எஸ்.டி. வரிச்சலுகைக்கு இலங்கையின் சட்டத்தில் மாற்றம் தேவையாம்? இதில் முஸ்லிம்களது விவாக, விவாகரத்து சட்டம் கேள்விக் குறியாகாக்கப்பட உள்ளது? இந்தியாவின் மோடி போல் இலங்கையிலும் ஜாடி செய்கிறார்கள். இதுவும் முஸ்லிம்களை கொந்தளிக்கவைத்து இந்த சிஙகள அரசுடன் வாழ்வதைவிட கிழக்கை இணைப்பதே மேல் எனும் செயற்கை சிந்தனைக்கு முஸ்லிம்களை இழுத்து செல்லம் ஒரு செயலாகும்.

உருமை எடுத்துத்தர சென்ற முஸ்லிம் பா.உ.கள் தங்களது பதவிகளை விடத்தேவையில்லை, நல்லாட்சிக்கான ஆதரவை மீழ்பரிசீலனை செய்ய வேண்டிவரும் என்றாகுதல் ஒரு அதிர்வை ஏற்பதத்தலம் அல்லவா?

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கம் தெரியல்ல. 
அட அண்டங்காக்காக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்ல.

பக்தர்கள் இல்லாத இடத்தில் புத்தருக்கு என்ன வேலை? பக்தர்கள் இல்லாத இடத்தில் புத்தருக்கு என்ன வேலை? Reviewed by Madawala News on 11/02/2016 12:01:00 AM Rating: 5