Kidny

Kidny

கொழும்பில் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு


பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கை ஒன்­றியம் ஏற்­பாடு செய்­துள்ள ஐக்­கிய நாடு­களின் பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்டு தின நிகழ்வு எதிர்­வரும் 29 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை மாலை 4.15 மணிக்கு கொழும்­பி­லுள்ள விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற உள்­ளது.

இவ் வைப­வத்தில் சுகா­தார அமைச்­சரும் இலங்கை , பலஸ்­தீன பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்­கத்தின் இலங்­கைக்­கான தலை­வ­ரு­மான டாக்டர் ராஜித சேனா­ரத்ன பிர­தம அதி­தி­யா­கவும் மேற்­படி சங்­கத்தின் இலங்­கைக்­கான செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிமல் ரத்­நா­யக்க கௌரவ அதி­தி­யா­கவும் கலந்து கொள்­கின்­றனர்.

சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளரும் சமூக நீதிக்­கான செயற்­பாட்­டா­ள­ரு­மான மஹிந்த ஹத்­தக விசேட உரை நிகழ்த்­துவார். இந்த வைப­வத்தில் புகைப்­படக் கண்­காட்சி ஒன்றும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.

 மாலை 4.15 முதல் 6. 00 மணி வரை நடை­பெறும் இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு பலஸ்தீன போராட்டத்திற்கான தமது ஆதரவை வழங்குமாறு பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை ஒன்றியம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

பலஸ்­தீன மக்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒரு­மைப்­பாட்டு தினம் என்றால் என்ன? 

1977ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்­சபை பலஸ்­தீன மக்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒரு­மைப்­பாட்டுத் தினத்தை ஆண்­டு­ தோறும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி அனுஷ்­டிக்­கு­மாறு அழைப்­பு­வி­டுத்­தது. 1947ஆம் ஆண்டு மேற்­கு­றிப்­பிட்ட அதே தினத்தில் பலஸ்­தீனின் பிரி­வி­னைக்­கான பிரே­ர­ணை­யையும் பொதுச்­சபை ஏற்­றங்­கீ­க­ரித்­தி­ருந்­தது.

பலஸ்­தீ­னிய மண்: அது என்­ன­வாக இருந்­தது? அங்கு யார் இருந்­தனர்? எவ்­வ­ளவு காலத்­திற்கு?

பலஸ்தீன் குறித்து அறிந்­து­கொள்ள வேண்­டு­மெனில் கி.மு. 3000 ஆண்­டுகள் பின்­னோக்கிச் செல்ல வேண்டும். 1900 ஆண்­டுகள் (கி.மு.3000-– 1100) கானா­னியர் என்­ற­ழைக்­கப்­பட்ட மக்­களின் பூமி­யாக அது திகழ்ந்­தது. அக்­கா­லப்­ப­குதி முழு­வதும், அதா­வது கி.மு. 1200 இல் பிலிஸ்டைன்ஸ் மக்கள் அதனைக் கைப்­பற்றும் வரை, எகிப்­தி­யர்கள் அங்கு நிலை­கொண்­டி­ருந்­தனர். பிலிஸ்டைன்ஸ் அதனைக் கைப்­பற்­றிய பின்னர் அவர்கள் இஸ்­ர­வே­லர்­க­ளாலும் (கி.மு.1000-– 923: 77 ஆண்­டுகள்), பீனீ­சி­யர்­க­ளாலும் (கி.மு.923-– 700), அசி­ரி­யர்­க­ளாலும் (கி.மு.700 –-612), பாபி­லோ­னி­யர்­க­ளாலும் (கி.மு.539 வரை), பார­சீ­கர்­க­ளாலும் (கி.மு.332 வரை), மசி­டோ­னி­யர்­க­ளாலும் (கி.மு.63 வரை), உரோ­மா­னி­யர்­க­ளாலும் (கி.பி.636 வரை), அரே­பி­யர்­க­ளாலும் (636 –-1200: 564 ஆண்­டுகள்), சிலுவைப் போரா­ளி­க­ளாலும் (1099-– 1291), அய்­யூ­பி­யர்­க­ளாலும் (1187-– 1253), மம்­லூக்­கி­ய­ராலும் (1253-– 1516), உஸ்­மா­னிய ஆட்­சி­யா­ளர்­க­ளாலும் (400 ஆண்­டுகள்) பின்­தொ­ட­ரப்­பட்­டனர். இவை 1917ஆம் ஆண்டு (பல்போர் பிர­க­டன ஆண்டு) வரை தொடர்ந்து இடம்­பெற்­றவை. பின்னர் அது 1919 இல் பிரித்­தா­னிய மேலா­திக்­கத்­தினால் கைப்­பற்­றப்­பட்டு, 1922 இல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வலு­வுக்கு வந்­தது. 

பலஸ்­தீ­னிய மண்ணில் குடி­ய­மர்ந்த பல இராச்­சி­யங்­களுள் ஒன்­றுதான் யூத இராச்­சியம் என்­பது மேற்­படி கால­வ­ரி­சை­யி­லி­ருந்து புல­னா­கின்­றது. 7ஆம் நூற்­றாண்டின் இறு­தி­யில்தான் அந்­நாடு மிகப் பிர­தா­ன­மாக ஓர் அரபு (மற்றும் இஸ்­லா­மிய) நாடாக உரு­வா­கி­யது. அரபு (முஸ்லிம் மற்றும் கிறிஸ்­தவ) மற்றும் யூத கலா­சா­ரங்­களின் மிகை­யா­ன­தொரு கலப்­புடன் அது 1516இல் உஸ்­மா­னியப் பேர­ரசின் ஒரு மாகா­ண­மாக உரு­வெ­டுத்­தது. பலஸ்தீன் என்­ற­ழைக்­கப்­பட்ட பூமி தமக்கே உரித்­தா­ன­தென இந்த மக்கள் தம்­ம­ளவில் நம்­பினர். 

இறு­தியில் பேர­ர­சுகள் காணா­மற்­போன போது, இறை­மை­யா­னது அந்த மண்ணைச் சேர்ந்த பழங்­குடி மக்­களின் இயற்­கை­யான குறிக்­கோ­ளாக உரு­மா­றி­யது. விட்­டுச்­செல்­வ­தற்குக் கால­னித்­துவம் மறுத்த இடங்­க­ளி­லெல்லாம், சுதந்­திரம் அடை­யப்­பெறும் வரை, உள்­நாட்டு விடு­தலைப் போர்கள் நடந்­தே­றின. ஆக்­கி­ர­மித்­துக்­கொண்ட சமூ­கத்­தினர் பிர­யோ­கித்த முரட்­டுத்­த­ன­மான பலப்­பி­ர­யோ­கத்­தி­னூ­டாக மக்கள் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்ட அல்­லது இனச்­சுத்­தி­க­ரிப்புச் செய்­யப்­பட்ட இடங்­களில், அவ்­விதம் ஆக்­கி­ர­மித்த சமூ­கங்கள் புதிய தேச அர­சு­க­ளாக உரு­வா­கின 

முதலாம் உல­கப்­போரின் பின்னர் வெற்­றி­யீட்­டிய நேச நாடுகள் மத்­திய கிழக்கில் 1916ஆம் ஆண்டு கைச்­சாத்­திட்ட துரோ­கத்­த­ன­மான சைக்ஸ்-­பிகொட் (Sykes-Picot) உடன்­ப­டிக்­கைக்­க­மைய, பிரான்ஸ் மற்றும் பிரித்­தா­னி­யா­வுக்கு இடைப்­பட்ட பிராந்­தி­யத்தைப் பிரித்­துக்­கொண்­டன. நாடு­களின் ஒன்­றி­யத்தின் கீழ்  (League of Nations) செயற்­பட்ட பணிப்­பாணை கொண்ட இந்த அர­சுகள் தமது பணிப்­பாணைக் காலப்­ப­குதி முடி­வுக்கு வந்­ததும், ஈற்றில் தேசி­யம்சார் அர­சு­க­ளாக பரி­ணாமம் அடைந்­தன. நிச்­ச­ய­மாக பலஸ்­தீனைத் தவிர. 

பலஸ்தீன ­பி­ரச்­சினை குறித்து இந்தத் தலை­வர்கள் என்ன கூறு­கின்­றனர்? 

இந்­திய சுதந்­திர இயக்­கத்தின் தலைவர் மகாத்மா காந்தி: “எவ்­வாறு ஆங்­கி­லே­யர்­க­ளுக்கு இங்­கி­லாந்து உரித்­தாக உள்­ளதோ அல்­லது பிரான்­ஸி­யர்­க­ளுக்கு பிரான்ஸ் உரித்­தாக உள்­ளதோ, அவ்­வாறே அரே­பி­யர்­க­ளுக்கு உரித்­தா­னது பலஸ்தீன். அரே­பி­யர்கள் மீது யூதர்­களைத் திணிப்­பது பிழை­யா­னதும் மனி­தா­பி­மா­ன­மற்­ற­து­மான செயற்­பா­டாகும். நிச்­ச­ய­மாக அது புக­ழுடன் திகழும் அரே­பி­யர்­களைக் குறைப்­ப­தற்­காக இழைக்­கப்­படும் மனுக்­கு­லத்­துக்கு எதி­ரான குற்­ற­மொன்­றா­கவே அமையும். அதன் கார­ண­மாக, தமது தேச­மாக இருக்­கின்றபடி­யினால் யூதர்­க­ளி­ட­மி­ருந்து பகு­தி­ய­ள­விலோ அல்­லது முழு­மை­யா­கவோ பலஸ்தீன் மீட்­கப்­பட முடியும்”. 

தென்­னா­பி­ரிக்­காவில் நிற­வெ­றிக்­கெ­தி­ராகப் போரா­டிய கதா­நா­யகன் நெல்சன் மண்­டேலா:  “பலஸ்­தீன மக்­க­ளுக்­கான சர்­வ­தேச ஒரு­மைப்­பாட்டுத் தினத்தை அங்­கு­ரார்ப்­பணம் செய்­வ­தற்­கான பிரே­ர­ணையை 1977ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் சபை நிறை­வேற்­றிய போது, பலஸ்­தீனில் அநீ­தியும் தொகை­யான மனித உரிமை மீறல்­களும் நிகழ்ந்­தேறி வந்­தன எனும் அங்­கீ­கா­ரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அது அமைந்­தது. அதே காலப்­ப­கு­தியில் நிற­வெ­றிக்கு எதி­ராக வலு­வான நிலைப்­பா­டொன்றை ஐக்­கிய நாடுகள் சபை எடுத்­தி­ருந்­த­தோடு, இந்த அநீ­திசார் முறை­மையை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு உத­வக்­கூ­டிய சர்­வ­தேச ரீதி­யி­லா­னதோர் ஒரு­மித்த உணர்வு பல வரு­டங்­க­ளாகக் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது. என்­றாலும், பலஸ்­தீன மக்­க­ளுக்­கான சுதந்­திரம் இல்­லாத நிலை­யிலும், கிழக்குத் தீமோர், சூடான் மற்றும் உலகின் ஏனைய பாகங்­களில் காணப்­படும் முரண்­பா­டுகள் தீர்க்­கப்­ப­டாத நிலை­யிலும் எமக்குக் கிடைத்த சுதந்­திரம் முழு­மை­யான ஒன்­றல்ல என்­ப­தையும் நாம் நன்­க­றிவோம்”. 

ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன்: “இன்று 136 நாடுகள் பலஸ்­தீன அரசை அங்­கீ­க­ரித்­துள்­ள­தோடு ஐக்­கிய நாடுகள் சபையில் அந்த உறுப்பு நாடு­களின் கொடி­க­ளுக்குப் பக்­கத்தில் பலஸ்தீன் அரசின் கொடியும் பறக்­கின்­றது. எவ்­வா­றா­யினும், இந்த முன்­னேற்­றங்கள் காஸா­வி­லுள்ள குழந்­தை­க­ளி­னாலோ அல்­லது நப்லுஸ், ஹெப்ரோன் மற்றும் கிழக்கு ஜெரூ­சலம் போன்ற பகு­தி­களில் வசிக்கும் மக்­க­ளி­னாலோ உண­ரப்­ப­டு­வ­தில்லை. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் மக்­க­ளுக்கு உகந்­த­தாகக் கரு­தப்­படும் நீதி­யான சமா­தா­னத்தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான எமது அர்ப்­ப­ணிப்பை நாம் மீளவும் ஒரு­முறை  உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­கின்றோம்”. 

அல்-­நக்பா அல்­லது பேர­ழிவு 

1800களின் பிற்­ப­கு­தியில் “அர­சியல் சியோ­னிஸம்” என்­ற­ழைக்­கப்­பட்ட, கொள்கை வெறி­பி­டித்த சிறு இயக்­க­மொன்று ஐரோப்­பாவில் உரு­வா­னது. உலகின் ஏதோ­வொரு பகு­தியில் யூத அர­சொன்றை நிறு­வு­வதே அதன் குறிக்­கோ­ளாக இருந்­தது. புரா­த­ன­மா­னதும் நீண்­ட ­கா­ல­மாகக் குடி­யி­ருக்­கப்­பட்டு வந்­த­து­மான பலஸ்­தீன மண்ணே இவ்­வாறு நிறு­வப்­ப­டு­கின்ற அரசின் அமை­வி­ட­மாக இருக்க வேண்­டு­மென அதன் தலை­வர்கள் தீர்­மா­னத்­திற்கு வந்­தனர்.

சியோ­னி­ஸத்தின் தந்தை எனக் கரு­தப்­படும் தியாடோர் ஹெர்­ஸலின்  (Theodor Herzel) தலை­மைத்­து­வத்தின் கீழ் 1897இல் சுவிட்­ஸர்­லாந்தின் பேசெல் நகரில் முத­லா­வது சியோ­னிச காங்­கிரஸ் கூட்­டப்­பட்­டது. பலஸ்­தீன மண்ணில் யூத மக்­க­ளுக்­கான இல்­ல­மொன்றை உரு­வாக்­கு­வதே அதன் நோக்­க­மாக அமைந்­தது. இக்­கா­ல­கட்­டத்தில் பலஸ்­தீன சனத்­தொ­கையில் சுமார் 96 சத­வீ­தத்­தினர் யூதர்­க­ளல்­லா­தோ­ராகக் காணப்­பட்­டனர் (அடிப்­ப­டையில் முஸ்­லிம்­க­ளா­கவும் கிறிஸ்­த­வர்­க­ளா­கவும் இருந்­தனர்). 

அடுத்­த­டுத்து வந்த தசாப்­தங்­களில் சியோ­னிசத் தலை­வர்கள் பலஸ்­தீ­னத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான தமது குறிக்­கோளை நிறை­வேற்­றிக்­கொள்ளும் வகையில் பல்­வே­று­பட்ட தந்­தி­ரோ­பா­யங்­களைப் பிர­யோ­கித்­தனர். 

“மக்­க­ளில்­லாத நிலம், நில­மில்­லாத மக்­க­ளுக்­காக” எனும் ஏமாற்றுக் கோஷங்­களைப் புனைந்­ததன் ஊடாக, பலஸ்தீன் நோக்­கிய யூதர்­களின் குடி­வ­ர­வு­களைப் பகு­தி­ய­ளவில் ஊக்­கு­வித்து வந்­தனர். இருந்­த­போ­திலும், குறிப்­பிட்ட அந்த மண்ணில் ஏலவே குடி­யி­ருப்­புக்கள் அமை­யப்­பெற்­றி­ருந்­த­தோடு, அது உஸ்­மா­னிய ஆட்­சியின் கீழும் இருந்­துள்­ளது. 

இச்­செ­யன்­மு­றையை ஆத­ரிப்­ப­தற்­கென பெரிய சக்­தி­களை நம்­ப­வைத்தல்: மேலும் தங்­க­ளு­டைய கார­ணங்­க­ளுக்­காக உஸ்­மா­னி­யர்கள், பிரித்­தா­னி­யர்கள் மற்றும் அமெ­ரிக்­கர்கள் ஆகி­யோரை சியோ­னி­ச­வா­திகள் அணு­கினர். உஸ்­மா­னி­யர்கள் அவர்­களை நிரா­க­ரித்­து­விட்ட போதிலும், அமெ­ரிக்­கர்­களும் பிரித்­தா­னி­யர்­களும் அவர்­களை அங்­கீ­க­ரித்­தனர். 

அப்­பாவி பலஸ்தீன் விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து காணி­களைக் கொள்­வ­னவு செய்தல்: இச்­செ­யன்­மு­றை­யா­னது “நிலத்தை மீட்­டெ­டுத்தல்” என அழைக்­கப்­பட்­ட­தோடு, றொத்சைல்ட்ஸ் (Rothschilds)போன்ற செல்­வந்த யூதக் குடும்­பங்­க­ளினால் அதற்­கான நிதி­ய­ளிப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 

பூர்­வீக பலஸ்தீன் மக்­க­ளுக்­கெ­தி­ராக வளர்ச்­சி­ய­டைந்­து­வந்த வன்­மு­றைகள் இஸ்­ரேலை உரு­வாக்­கு­வதை மைய­மா­கக்­கொண்டு 1947-– 49 இல் மேற்­கொள்­ளப்­பட்ட இஸ்­ரேலின் கொடூர பிர­சா­ரத்தின் போது உச்­சக்­கட்­டத்தை அடைந்­தன. ஹகானா, ஏர்கான், லெஹி மற்றும் பல்மக் போன்ற ஐரோப்­பிய யூத பயங்­க­ர­வாதக் குழுக்­களால் பலஸ்­தீ­னிய கிரா­மங்­களில் 500 இற்கு மேற்­பட்ட திடீர் சோத­னைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதன்­போது நிகழ்ந்­தே­றிய எண்­ணற்ற படு­கொ­லை­களில் ஆயி­ரக்­க­ணக்­கான பலஸ்­தீ­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர். 1947ஆம் ஆண்டில் ஐக்­கிய நாடு­களின் பிரி­வினைத் திட்­டத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் ஒரு சுதந்­திர நாடாகப் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. அத­னை­யொட்டி 1948ஆம் ஆண்டில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறு­வர்கள் என ஆகக்­கு­றைந்­தது 750,000 பலஸ்­தீ­னர்கள் தங்­க­ளு­டைய வாழி­டங்­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர். இந்தப் பாரிய மனிதப் பேர­வ­லமே பேர­ழிவு அல்­லது அர­பியில் அல்-­நக்பா என அறி­யப்­ப­டு­கின்­றது. 

இன்­றைய நிலை

30 சத­வீத யூத மக்­க­ளுக்கு 55 சத­வீத நிலத்­தையும், 70 சத­வீத மக்­க­ளுக்கு 45 சத­வீத நிலத்­தையும் வழங்கி ஐக்­கிய நாடு­களின் தலை­யீட்டுப் பிரி­வொன்­றினால் இஸ்ரேல் உரு­வ­மைக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து, பலஸ்­தீன மண்ணை இஸ்ரேல் அப­க­ரித்­துக்­கொண்டும் சூறை­யா­டிக்­கொண்­டுமே இருக்­கின்­றது. இஸ்­ரே­லுக்கும் அதன் அண்­டைய அரபு நாடு­க­ளுக்கும் இடையே 1948, 1967 மற்றும் 1973 ஆகிய ஆண்­டு­களில் நடை­பெற்ற ஒவ்­வொரு பாரிய யுத்­தத்தின் போதும், அதன் பின்­னரும், பலஸ்­தீன மண்ணின் பெரிய பகு­திக்­கூ­று­களை இஸ்ரேல் ஆக்­கி­ர­மித்து தன்­னுடன் இணைத்­துக்­கொண்டு வந்துள்ளது. 

சர்வதேசத்தின் கருத்தை வெளிப்படையாக மீறியும், சர்வதேச சட்டத்தை மீறியும், தான் ஆக்கிரமித்துக்கொண்ட பலஸ்தீன நிலப்பரப்பினுள் யூதக் குடியேற்றங்களையும், இராணுவ எல்லைக் காவலரண்களையும் இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பி வருகின்றது. 

அதேவேளை, (எகிப்திலுள்ள) நைல் நதிக்கரையிலிருந்து (ஈராக்கிலுள்ள) யூப்ரடீஸ் நதிக்கரை வரை பெரிய இஸ்ரேலை விரிவுபடுத்தும் தனது கனவை அடைந்துகொள்ளும் வரை இஸ்ரேல் உலகின் மிகப்பெரும் திறந்தவெளிச் சிறைக்கூடமான காஸாக் கரையிலும் மேற்குக் கரையிலும் பலஸ்தீன மக்களை அடக்கியொடுக்கும் பொருட்டு தொடர்ச்சியான யுத்தக் குற்றங்களை இழைத்து வருகின்றது. தான் ஜோர்தானுக்கு அருகாமையில் ஆக்கிரமித்துக்கொண்ட மேற்குக் கரையிலுள்ள பெரியதொரு செழிப்பான நிலப்பகுதியை தன்னால் உரிமை கொண்டாடக்கூடியதாக உள்ளதென இஸ்ரேல் அண்மையில் தெரிவித்திருந்தது. 

இடைவிடாத பிரச்சினைகளும் இஸ்ரேலுடைய விட்டுக்கொடுக்காத பண்பும் 
குடியேற்றங்களை நிறுவுதல்: ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளினுள் குடியேற்றங்களை நிறுவிவருகின்றமையை நிறுத்துவதற்கான உளக்கருத்து தனக்கில்லை என்பதை இஸ்ரேல் மீண்டும் மீண்டும் பல தடவைகள் நிரூபணம் செய்துள்ளது. 
அகதிகளைத் திருப்பியனுப்புதல்: தமது கிராமங்களிலிருந்து ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மில்லியன் கணக்கான பலஸ்தீனியர்களை வரவேற்று அடைக்கலம் கொடுப்பதற்கு இஸ்ரேல் மறுத்து வருகின்றது. 

ஜெரூசலத்தின் அந்தஸ்து: எதிர்காலத்தில் அமையவுள்ள பலஸ்தீன் அரசின் தலைநகராக கிழக்கு ஜெரூசலம் அமையவேண்டுமென பலஸ்தீனியர்களும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றமை ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த ஜெரூசலத்தையும் இஸ்ரேல் வேண்டிநிற்கின்றது. 

கொழும்பில் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு கொழும்பில் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு Reviewed by Madawala News on 11/26/2016 07:03:00 PM Rating: 5