Accaddemy

முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜம்மியதுல் உலமா இடையே முக்கிய சந்திப்பு ...


இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அவசர கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்புவிடுத்துள்ளது.

இன்று இரவு இஷா தொழுகையின் பின்னர் இடம்பெற உள்ள இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டில் சுற்றுப்பயனத்தில் உள்ள இருவரை தவிர இதர உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என ஜம்மியதுல் உலமா முக்கியஸ்தர் ஒருவர் மடவளை நியுஸுக்கு நம்பிக்கை வெளியிட்டார்.

அதே நேரம் நேற்று இலங்கையில் உள்ள முக்கியமான தஹ்வா அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகள் 23 இன் முக்கியஸ்தர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்மியா உடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முஸ்லீம் தரப்பு பிரதமர் ரனில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்தரப்பை அவசரமாக சந்திக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய சந்திப்பில் முஸ்லீம் கவுன்சில் , ஆர் ஆர் டி , கொழும்பு மஸ்ஜித் பெடரேஷன், ஜமாதே இஸ்லாமி உள்ளிட்ட பல அமைப்புகள் கலந்துகொண்டுள்ளன.

 
முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜம்மியதுல் உலமா இடையே முக்கிய சந்திப்பு ... முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜம்மியதுல் உலமா இடையே முக்கிய சந்திப்பு ... Reviewed by Madawala News on 11/21/2016 01:03:00 PM Rating: 5