இலங்கை முஸ்லீம்கள் தொடர்பில் விஜேதாச கூறிய கருத்துகளுக்கு எதிராக ஜனாதிபதி ஏன் இதுவரை வாய்திறக்கவில்லை ...


தொடர்ச்சியாக நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு அறிக்கை கூட விட முடியாதவர்களாகி போனது இந்த நாட்டு முஸ்லீம்களுக்கு அவர்கள் செய்த துரோகம் என பானதுறை முன்னாள் பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான்  குறிபிட்டார்.

இன்று பானதுறை பிரதேசத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட அவர் மேற்கண்டவாறு குறிபிட்டார் .

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ..


கடந்த வாரம் நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் முஸ்லீம்கள்
தொடர்பில் மிக மோசமான கருத்துக்களை முன்வைத்தார்.அதற்க்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அமைச்சர் ராஜித மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு ஒரு சில கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளார்.

இவ்வளவு கதை பேசிய ராஜித நீதி அமைச்சர் கூறிய கூற்று பிழை என கூறவில்லை அது அவரின் நிலைப்பாடு என்றே கூறி பொல்லுக்கும்  நோகாமல் பாம்புக்கும் வலிக்காமல் நைசாக நழுவிக்கொண்டார்.

இவர்கள் ஒவ்வொரு நேரங்களிலும் கூறும் கதைகளை நம்பி ஏமாந்து போக இந்த நாட்டு முஸ்லீம் சமூகம் எமாளிகள் அல்லர் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

நல்லாட்சி என்று தங்களை கூறிக்கொள்ளும் இந்த அரசு மீனுக்கு தாலையையும் பாம்புக்கு வாலையில் காட்டும் நடவடிக்கையை விட்டு விட்டுப் எதிர்வரும் நாட்களுக்குள் ஜனாதிபதி அல்லது பிரதமர் இந்த விடயத்தை ஒட்டுமொத்த மக்களுக்கும் தெளிபடுத்தி அறிக்கை வெளியிட வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார் .
இலங்கை முஸ்லீம்கள் தொடர்பில் விஜேதாச கூறிய கருத்துகளுக்கு எதிராக ஜனாதிபதி ஏன் இதுவரை வாய்திறக்கவில்லை ... இலங்கை முஸ்லீம்கள் தொடர்பில் விஜேதாச கூறிய கருத்துகளுக்கு எதிராக ஜனாதிபதி ஏன் இதுவரை வாய்திறக்கவில்லை ... Reviewed by Madawala News on 11/27/2016 07:39:00 AM Rating: 5