Free Space

அமைச்சர் ஹக்கிம் விட்ட வரலாற்று தவறு : தம்புள்ளை நிர்வாக குழு உறுப்பினர் குற்றச்சாட்டு ...


நகர அபிவிருத்தி அமைச்சை எட்டு மாதங்களாக கையில் வைத்துகொண்டு தம்புள்ளை பள்ளி பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தராதது அமைச்சர் ஹக்கீம் செய்த வரலாற்று தவறு என தம்புள்ளை பள்ளிவாயல் நிருவாக குழு உறுப்பினர் சலீம்டீன் குறிப்பிட்டார்.

தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் அங்குள்ள நிலமை தொடர்பில் அவரிடம் வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்..

தம்புள்ளை பள்ளிவாயலுக்கு புதிய இடம் ஒன்றை பெற்றுக்கொண்டு செல்ல நாம் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் எமக்கு அதற்கான காணியை பெற்றுத்தருவதில் நகர அபிவிருத்தி அமைச்சு தாமதப்படுத்தி வந்தது.

100 நாள் அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சு அமைச்சர் ஹக்கீமுக்கு கிடைத்த போது தம்புள்ளை பள்ளி பிரச்சினையை தீர்க்க ஒரு முஸ்லீமுக்கு அந்த அமைச்சை உங்கள்அல்லாஹ் தான் தந்துள்ளான் என துவேசம் இல்லாத சில பெரும்பான்மை சகோதர்கள் கூட எம்மிடம் கூறினார்கள்.

நாமும் அமைச்சரை சந்தித்து பள்ளிக்கான காணியை பெற உதவுமாறு கூறினோம். அவரால் பள்ளிக்கான மாற்று காணியை அவரது பலத்த வேலைப்பழு காரணமாக பெற்றுத்தர முடியவில்லை.

ஒரு முஸ்லீமுக்கு இந்த அமைச்சு கிடைத்த போது அதற்கான தீர்வுகாணப்படாத நிலையில்  நாம் இன்று ஒரு பெரும்பான்மை அமைச்சரிடம் உதவி கேட்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர் ...

தம்புள்ளை பள்ளி விடயத்தில் அமைச்சர் ஹக்கீம்  வரலாற்று தவறை செய்துவிட்டார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர் ஹக்கிம் விட்ட வரலாற்று தவறு : தம்புள்ளை நிர்வாக குழு உறுப்பினர் குற்றச்சாட்டு ... அமைச்சர் ஹக்கிம் விட்ட வரலாற்று தவறு : தம்புள்ளை நிர்வாக குழு உறுப்பினர் குற்றச்சாட்டு ... Reviewed by Madawala News on 11/15/2016 12:38:00 AM Rating: 5