Accaddemy

ரோஹிங்யா முஸ்லீம் கிராமங்கள் மீது மியன்மார் ராணுவம் வான் தாக்குதல் !


மியன்மாரில் கடந்த ஒக்டோபர் 8 ம் திகதி முதல் ரோஹிங்யா முஸ்லீமகளுக்கு எதிராக அந்த நாட்டு அரச அனுசரனையுடன் அரச ராணுவ வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக மியன்மார் ஊடகவியளாலர் அன்வர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் மடவளை நியுஸுக்கு வழங்கிய செவ்வியில் ஐ நா நிபுணர்கள் மியன்மார் வந்துசென்ற பின்னர் ரானுவத்தின் அராஜகம் மேலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்த அவர் ஐ நா நிபுணர்களிடன் முறையிட்டவர்களையும் மியன்மார் ராணுவத்துக்கு எதிராக பதாகைகளை தூக்கியவர்களையும் அந்த நாட்டு ராணுவம் தேடி தேடி கொன்றுகுவித்து வருவதாக இன்று 12.11.16 குறிப்பிட்டார்.

இதுவரை இடம்பெற்ற வன்முறைகளுக்கு நூற்றுக்கனக்கானவர்கள் பலியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர் இது தவிர மியன்மாரின் அரகான் மாநிலத்தின் பல பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் வான் தாக்குதல்களையும் இன்று நடத்தியுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் கடும் அச்சத்தில் அகதிகளாக வாழ்வதாகவும் மியன்மார் ஊடகவியளாலர் அன்வர் மேலும் குறிப்பிட்டார்.

உலக நாடுகளில் உள்ள அனைவரும் மியன்மார் அரசுக்கு இந்த வன்முறைகளை நிறுத்த கோரி அழுத்தம் வழங்குமாறு அவர் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார்.
ரோஹிங்யா முஸ்லீம் கிராமங்கள் மீது மியன்மார் ராணுவம் வான் தாக்குதல் ! ரோஹிங்யா முஸ்லீம் கிராமங்கள் மீது மியன்மார் ராணுவம் வான் தாக்குதல் ! Reviewed by Madawala News on 11/12/2016 10:47:00 PM Rating: 5