Ad Space Available here

எங்­க­ளது பெண்கள் அர­சி­ய­லுக்கு வரு­வதை உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நாங்கள் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.


-பி. முஹாஜிரீன்-
முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்­பாக இன்று எழுந்­துள்ள சிக்­கல்­க­ளுக்கு பிர­தான காரணம் இதற்­கென்று நிய­மிக்­கப்பட்ட குழு கிட்­டத்­தட்ட ஏழெட்டு வரு­டங்­க­ளாக இவ்­வி­ட­யத்தை இழுத்­த­டித்­த­துதான்' என அமைச்சர் ரவூப் ஹக்கீம், தனியார் சட்டத் திருத்­தத்­திற்­காக முன்னர் நிய­மிக்­கப்­பட்ட குழுவை சாடி­யுள்ளார்

அத்­துடன், தான் நீதி அமைச்­ச­ராக இருந்தபோது பல தட­வைகள் குழு­வுக்குப் பொறுப்­பா­ன­வர்­களை, 'என்­னு­டைய காலப்­ப­கு­திக்குள் இதனை செய்து முடித்­து­வி­டுங்கள்' என்று கேட்டும் ஒரு சில விட­யங்­க­ளுக்­காக இது இழுத்­த­டிப்புச் செய்­யப்­பட்­டது.

ஆரா­யப்­பட்ட விட­யங்­க­ளை­யா­வது திருத்தம் செய்­தி­ருந்தால் தற்­போது சிக்கல் எழுந்­தி­ருக்­காது என்றும் அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.

இன்று இலங்­கை­யிலே திரு­மண வய­தெல்லை சாதா­ர­ண­மாக 18 ஆக இருக்­கின்­ற­போது, முஸ்லிம் தனியார் சட்ட செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­வதில் விவாகம் செய்­வ­தற்­கான வய­தெல்­லையை 16 வயது வரை­யா­வது கொண்டு வர வேண்­டு­மென்ற விச­யத்தில் சில முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் உடன்­பாடு காணப்­பட்­­டுள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார்.

கல்­முனை மஹ்மூத் பாலிகா பெண்கள் உயர் ­பா­ட­சா­லையின் முன்னாள் அதிபர் ஏ.ஆர்.ஏ. பசீரை பாராட்டிக் கௌர­விக்கும் நிகழ்வு நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்­றது. 

இதன்­போது  உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் ஹக்கீம்  இவ்­வாறு கூறினார்.
அமைச்சர் ஹக்கீம் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இதிலே சற்று நெகிழ்வுத் தன்­மை­யைப் பேண வேண்­டி­யுள்ளது. குறிப்­பாக மருத்­துவ ரீதி­யா­கவும் உட­லியல் ரீதி­யா­கவும் குறைந்த வயதுத் திரு­மணம் பாதிப்­புக்­களை கொண்­ட­மைந்­துள்ள நிலையில், குழந்தைப் பரா­ம­ரிப்பு, குழந்தை பெறு­வ­தற்­கான தயார்­நிலை என்­பன போன்ற விட­யங்­களில் உள்ள அடிப்­ப­டை­களை வைத்து இவற்றைக் கூறி­னாலும் பாரிய விப­ரீ­தங்­களை எதிர்­நோக்கிக் கொண்­டி­ருக்­கின்றோம்.

இதில் நெகிழ்வுத் தன்­மை­யுடன் அர­சி­யல்­வா­தி­களும் உல­மாக்­களும் சட்ட வல்­லு­னர்­க­ளு­மாகச் சேர்ந்து ஒரு இணக்கத் தீர்வை எட்டிக் கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்­தில்தான் இப்­பொ­ழுது நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற அமைச்­ச­ரவை உப குழுவை காட்டி, அதை ஜீ.எஸ்.பி. சலுகை பெறப்­போ­கின்றோம் என்று ஒரு அமைச்சர் சொன்­னதை வைத்து இன்று சில குழுக்கள் ஆர்ப்­பாட்­டங்­களை செய்யத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

இந்தச் சமூகம் ஒரு ஆணா­திக்­க­வாத சமூ­க­மாக பார்க்­கப்­ப­டு­கின்ற அள­வுக்கு குறித்த ஆர்ப்­பாட்­டங்கள் அமைந்­தி­ருக்­கின்­றன., நபி (ஸல்) அவர்கள் எவ்­வ­ளவு தூரம் பெண் விடு­த­லைக்கும் உரி­மைக்கும் தியா­கங்கள் செய்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை மூடி மறைக்­கு­ம­ளவு இவர்­களின் செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

இல்­லாத பொல்­லாத விட­யங்­க­ளெல்லாம் இன்று சந்­திக்கு வந்து விவா­திக்­கப்­ப­டு­கின்ற ஒரு விட­ய­மாக மாறி­யி­ருப்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். 

பல வரு­டங்­க­ளாக இவ்­வி­வ­காரம் இழுத்­த­டிப்புச் செய்­யப்­பட்டு வரு­கின்ற நிலையில், காதி நீதி­மன்­றங்­களில் பெண்­க­ளுக்­கான இடம் வழங்­கு­வது சம்பந்­த­மா­கவும் பெரிய விவாதம் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றது. இதிலே கொஞ்சம் நெகிழ்வுத் தன்மை காட்­டப்­பட வேண்டும் என்­பதும் இதை பல்­லின மக்கள் வாழ்­கின்ற நாட்டில் இஸ்­லா­மிய விழு­மி­யங்­க­ளுக்கும் குர்­ஆ­னிய சட்­டங்­க­ளுக்கும் முரண்­பா­டுகள் இல்­லாமல் இந்த விட­யங்­களில் ஒரு இணக்கத் தீர்வைக் காண முடியும் என்­பதை புரி­யாமல் நீண்­ட­கா­ல­மாக இழுத்­த­டிப்புச் செய்­யப்பட்­டதன் விளை­வுதான் இன்று தேவை­யில்­லாத விட­யங்­க­ளுக்­கெல்லாம் முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கின்றோம்.

உடன்­பாடு கண்ட விட­யங்­க­ளைக்­கூட முடி­வுக்குக் கொண்டு வராமல் சின்னச் சின்ன விவ­கா­ரங்­க­ளுக்கு பிடி­வாதம் பிடிக்கும் நிலையை காண்­கிறோம். உதா­ர­ணத்­திற்கு 16 வயதை திரு­மண வய­தெல்­லை­யாக நாங்கள் ஏற்றுக் கொள்­ளலாம் என்று இணக்­கப்­பாடு வந்­த­பி­றகு அதற்குக் குறை­வா­கவும் வழங்­க­வேண்­டு­மென்று பிடி­வா­த­மாக இருப்­பதில் எனக்­குக்­கூட உடன்­பா­டில்லை.

இப்­ப­டி­யான விட­யங்­களில் பிடி­வாதத் தன்மை காட்­டு­வது முழு சமூ­கத்­தை­யுமே ஒரு ஆணா­திக்­க­வாத சமூ­க­மாக காண்­பிக்­கி­றது. இவ்­வா­றான செயற்­பா­டு­களால் பெண் அடக்கு முறை­யா­ளர்­க­ளாக எங்­களை பார்க்க வைக்­கின்ற துர்ப்­பாக்­கிய நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கிறோம் என்­பதை தெளி­வாகக் கூறிக்­கொள்­கின்றேன்.

எனவே இது குறித்து ஆராய்ந்து கொண்­டி­ருக்­கின்ற இக்­குழு இன்னும் தாம­திக்­காமல் இந்தத் திருத்­தங்­களை சிபார்சு செய்­ய­வேண்­டு­மென்று மிக அடக்­க­மாக வேண்­டிக்­கொள்ள விரும்­பு­கின்றேன்.

இங்­கி­ருக்­கின்ற உல­மாக்கள் என்­னோடு கோபித்துக் கொள்ள­மாட்­டார்கள். ஏனென்றால் இது தொடர்­பாக அவர்­க­ளுடன் பல தட­வைகள் பேசி­யி­ருக்­கின்றேன். 

ஆனால், இது தொடர்­பாக நாங்கள் பெரும் சங்­க­டங்­களை எதிர்­கொள்­கின்றோம். ஏன் இதனைச் செய்ய முடி­யாது என மாற்­று­மத முக்­கி­யஸ்­தர்கள் நாளாந்தம் கேட்­கின்­ற­போது பதி­ல­ளிப்­பது கஸ்­ட­மான விட­ய­மாக இருக்­கின்­றது. 

காதி நீதி­மன்ற செயல்­பாடு­க­ளிலும் பெண்­க­ளுக்­கான பங்கு என்ற விட­யத்தில் மிகுந்த தாராளத் தன்­மை­யோடு உல­மாக்கள் விட்­டுக்­கொ­டுப்­புடன்  செயற்பட முன்­வர வேண்டும்.

அதிலே பாரிய பாதிப்­புக்கள் இருப்­ப­தாக நான் காண­வில்லை. ஏனைய முஸ்லிம் நாடு­களில் வழ­மையில் இருக்­கின்ற நிலை­யி­லேயே அவ்­வா­றான விட­யங்­க­ளைக்­கூட இலங்­கையில் செய்­வ­தற்கு தயங்­கு­வது ஏன் என்­பது சிக்­க­லுக்­கு­ரிய விட­ய­மாக இருக்­கின்­றது.

அழுத்­தங்­க­ளிலே சில நியா­யப்­பா­டுகள் இருப்­பதைக் காணு­கின்­ற­போது, பல வரு­டங்­க­ளாக இது தேவை­யில்­லாமல் இழுத்­த­டிப்புச் செய்­யப்­ப­டு­கின்­றது, என்­கின்­ற­போது இவ்­வி­ட­யங்கள் பூதா­கர­மா­வ­தற்கு நாங்­களே வழி­யெ­டுத்துக் கொடுத்­து­விட்டோம் என்­றா­கி­விட்­டது. 
சில இயக்­கங்கள் குழுக்கள் எடுத்­த­தற்­கெல்லாம் ஆர்ப்­பாட்­டங்கள் மேற்­கொள்­கின்­றார்கள்.

வீதி­யிலே பேசு­கின்ற வார்த்­தை­களும் மற்­ற­வர்கள் எங்­களை அவ­ம­திப்­பதும் இழி­வு­ப­டுத்­துவது­மாக இருக்­கின்ற நிலை­யாக மாறி­யி­ருக்­கின்­றது. நபி (ஸல்) அவர்கள் உச்­ச­கட்ட பொறுமை காத்து, விட்டுக் கொடுத்து அவ­ம­திப்­புக்­க­ளையும் அவ­தூ­று­க­ளையும் தாங்கிக் கொண்­டி­ரா­விட்டால் இஸ்லாம் உலகில் வளர்ந்­தி­ருக்­காது. 

ஆனால், இன்று பொறு­மை­யி­ழந்து தடி­யெ­டுத்­த­வர்­க­ளெல்லாம் வேட்­டைக்­கா­ரர்­க­ளாகி எல்லா விவ­கா­ரங்­க­ளுக்கும் ஆர்ப்­பாட்­டங்கள் செய்து மற்ற சமூ­கங்­களை அவ­ம­திக்­கின்ற பாங்­கிலே பேசு­கின்ற குழுக்­களை நாம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர வேண்டும். 

எங்­க­ளது பெண்கள் அர­சி­ய­லுக்கு வரு­வதை உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நாங்கள் உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களிலே 25 சதவீத பெண் உறுப்புரிமையை வழங்கி அவர்களை அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும். முஸ்லிம் நாடுகளிலே பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று இருக்கின்ற நிலையில், ஆற்றலும் ஆளுமையும் உள்ள பெண்களை அரசியலுக்கும் தயார்படுத்த வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகின்றேன் என்றார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஏ.றஸ்ஸாக்(ஜவாட்), ஆரிப் சம்சுதீன், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜலீல் உட்பட உயரதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்
எங்­க­ளது பெண்கள் அர­சி­ய­லுக்கு வரு­வதை உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நாங்கள் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. எங்­க­ளது பெண்கள் அர­சி­ய­லுக்கு வரு­வதை  உலமாக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  அதை நாங்கள் உருவாக்க வேண்டிய  அவசியம் உள்ளது. Reviewed by Madawala News on 11/15/2016 04:55:00 PM Rating: 5