Kidny

Kidny

தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் ! அமைச்சர் ரிஷாதுடன் பள்ளிவாயல் நிருவாகம் கலந்துரையாடல் அப்டேட்


தம்புள்ளை பள்ளிவாயலுக்கு எதிராக எதிர்வரும் 19ம் திகதி ஆர்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்  அப்பள்ளிவாயளுக்கான நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று தம்புள்ளை பள்ளிவாயல் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுடனான சந்திப்பொன்று இன்று மாலை கண்டியில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த பள்ளிவாயலை தற்போது அமைந்திருக்கும் இடத்தில் இருந்து நூறு மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு இடத்துக்கு கொண்டு செல்ல தாங்கள் ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளபோதும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதற்கு உரிய  காணியை பெற்று தருவதில் தாமதம் காட்டுவதாக நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.

அவர்களின் பிணக்குகளை செவியுற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம்புள்ளை பள்ளிவாயல் நிர்வாக குழுவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடிதுடன் தம்புள்ளை பிரதேச பெரும்பான்மை அரசியல்வாதிகள்  மற்றும் அரச உயரதிகாரிகள்  உள்ளிட்டோரை தொடர்புகொண்டு இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினார்.

தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் தொடர்பில் நாளைய தினமே முஸ்லீம் விவகார அமைச்சர் சகிதம் பிரதமரை சந்தித்து  தம்புள்ளை பள்ளிவாயல் நிர்வாகம் எற்றுக்கொள்ளும் தீர்வை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சரின் கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்சதீன் மற்றும் பள்ளிவாயல் நிர்வாக குழு உறுப்பினர்களுக் கலந்துகொண்டனர்.

தகவல் 
ரியாஸ் இஸ்ஸதீன் 
அமைச்சரின் கண்டி மாவட்ட இணைப்பாளர்.

தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் ! அமைச்சர் ரிஷாதுடன் பள்ளிவாயல் நிருவாகம் கலந்துரையாடல் அப்டேட் தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் ! அமைச்சர் ரிஷாதுடன் பள்ளிவாயல் நிருவாகம் கலந்துரையாடல் அப்டேட் Reviewed by Madawala News on 11/14/2016 11:36:00 PM Rating: 5