Yahya

நீதியமைச்சரின் நீதியற்ற பேச்சு..


நீதி என்பது ஒருவர் அல்லது ஒரு குழு அவர்களுடைய உரிமை மறுக்கப்படுவதாக உணர்ந்து அதனை இன்னுமொருவரிடம் அல்லது இன்னுமொரு குழுவிடம் முன் வைக்கும் போது அவர்கள் மதஇமொழிஇநிற மற்றும் பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் எதுவித சிறு சோரம் போகலுமின்றி அதிலுள்ள சரியையும் பிழையையும் நெஞ்சை நிமிர்த்தி கூறுவதாகும்.யார் எப்படித் தான் நீதியை கூறப்போனாலும் அவரின் உள்ளங்களில் ஆழப் பதிந்துள்ள சில விடயங்கள் மற்றும் நீதியை கூறுவதன் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிய சிந்தனைகள் அதில் தாக்கம் செலுத்தும்.இவை அனைத்திற்கும் அப்பால் தனது உள்ளத்தை கட்டுப்படுத்தி செயற்படக் கூடிய மிகவும் பக்குவப்பட்ட ஒருவரே நீதியை வழங்க மிகவும் பொருத்தமானவராகும்.இலங்கை நாட்டில் நீதியை நிலை நாட்ட பல கட்டமைப்புடைய நீதி மன்றங்கள் உள்ளதோடு நீதி தொடர்பான விடயங்களை கையாளவென்று ஒரு  அமைச்சும் உள்ளது.தற்போது இலங்கையின் நீதியமைச்சராக விஜயதாச ராஜ பக்ஸ உள்ளார்.
 
ஒரு சிலர் வகிக்கும் பதவி காரணமாக அவர்களுடைய சில செயற்பாடுகள் மக்களால் பெறுமதிமிக்கதாக நோக்கப்படும்.ஒரு நாட்டின் நீதியமைச்சரின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் பெறுமதியானவை.இவரது கூற்றுக்களும் செயற்பாடுகளும் நீதியானவையாகத் தான் இருக்க வேண்டும்.அவரது கூற்றுக்களும் செயற்பாடுகளும் நீதியானதாக இருக்கின்றதோ இல்லையோ நீதியாகத் தான் இருக்கும் என்றே பலரும் கணக்கு போடுவார்கள்.இலங்கை முஸ்லிம்கள் பேரின அமைப்புக்கள் சிலவற்றால் நொந்து போய் இலங்கை அரசின் நீதியை நோக்கி தங்களது முகத்தை திருப்பி ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மைக் காலமாக பேரினவாதிகளின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகமாக காணப்படுவதால் இலங்கை அரசின் நீதியை நோக்கிய முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவே காணப்பட்டன.இச் சந்தர்ப்பத்தில் கடந்த 17-11-2016ம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் போதான விவாதத்தில் நீதியமைச்சர் விஜய தாஸ ராஜபக்ஸ ஆற்றிய உரையின் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கு இலங்கை அரசிடமிருந்து நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை மறைந்து விட்டதாகவே உணர்கிறேன்.
 
இவர் தனதுரையை யார் இனவாதம் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற பாங்கில் அமைத்திருந்தாலும் முஸ்லிம்கள் மீது குறி வைத்திருக்கும் இனவாதிகளுக்கு தீனி போடக் கூடிய பல விடயங்களை கூறியிருந்தார்.சிறையில் உள்ள 19 ஹாமதுருக்களில் யாருமே மத வெறியர்கள் அல்ல.எல்லோரும் பாலியல்இசிறுவர் துஸ்பிரயோகங்கம்இகளவுஇகொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்கள்.பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை வைக்கவும் இங்கு அனுமதியில்லை.முஸ்லிம் தனியார் சட்ட மாற்ற விடயத்தில் நாங்கள் தலையிடப்போவதில்லை போன்ற விடயங்களை அவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவராக இருந்து கொண்டு கூறியமை பாராட்டுக்குரியது.மஹிந்த கூட்டு அணியினர் தற்போதைய அரசில் இடம்பெற்ற பௌத்த மதகுருக்களின் கைதுகளை வைத்து இனவாதத்தை கிளப்பி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர்.இறக்காமம்இகிளிநொச்சி போன்ற சிங்கள மக்கள் இல்லாத இடங்களில் புத்தர் சிலை வைப்பு சிறு பான்மை மக்களிடையே பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.இதற்கு இவ்வரசில் பலமிக்கவராகவுள்ள தயா கமகே போன்ற சில அமைச்சர்கள் நியாயம் கற்பித்தும் வருகின்றனர்.அண்மையில் கிளிநொச்சியில் வைக்கப்பட்டிருந்த சிலை உடைக்கப்பட்டமையால் அங்கு பட்ட நிலை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவைகள் நீதி அமைச்சரினால் தற்காலத்தில் இவ்வரசின் மீது சிலரால் முன் வைக்கப்படும் விமர்சனங்களுக்கான பதில்களாகும்.
 
மேலுள்ளவைகளை கூறிய நீதி அமைச்சர் அண்மைக் காலமாக பொது பல சேனா அமைப்பினர் முஸ்லிம்கள் மீது முன் வைத்து வரும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை அவரும் ஆதாரம் எதுவுமின்று கூறி வலுவாக்கியிருந்தார்.இதில் இலங்கையில் நான்கு குடும்பங்களை சேர்ந்த 32பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் உள்ளனர்இஉல்லாச பிரயாண விசாவில் வந்து சர்வதேச பாடசாலைகளில் அடிப்படை வாதங்கள் போதிக்கப்படுகின்றனஇஒரு பணக்கார முஸ்லிம் மாத்தளையில் பதின்மூன்று வயதுடைய சிங்கள சிறுமியை திருமணம் செய்துள்ளார்இஇலங்கை முஸ்லிம்களிடையே தௌஹீத்இதப்லீக்இஜமாத்தே இஸ்லாமிஇசுன்னத் வல்ஜமஅத் ஆகிய அமைப்புக்கள் இயங்குகின்றனஇஇந்த குழுக்களுக்கிடையே மோதல்கள் இடம்பெறுகின்றன ஆகியவை முஸ்லிம்களை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்த அவரது பேச்சுக்களாக குறிப்பிடலாம்.
 
அவர் நான்கு குடும்பங்களை சேர்ந்த 32 இலங்கையர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் உள்ளதாக கூறிய விடயமானது ஆதாரமற்றதும் இரு வருடங்களுக்கு முந்திய பழைய தகவல் ஒன்றை அடிப்படையாக கொண்டதுமாகும்.அதில் 32பேர் இருப்பதாகவும் கூறப்படவில்லை.இவ்வாறான இலங்கை நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான விடயங்களை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடையவர்கள் கூறுவதே மிகவும் பொருத்தமானது.அது நீதி அமைச்சருக்கு பூரணமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அப்படித் தான் வைத்துக்கொண்டாலும் ஒரு சமூகத்தில் ஒரு சிலர் தவறான பாதையில் பயணிப்பதற்கு ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றவாளிகளாக கூற முடியாது.எந்த சமூகமாக இருந்தாலும் ஒரு சமூகத்தில் தவறான பாதையில் செல்லக் கூடிய குறித்த சிலர் இருப்பார்கள்.அது தவிர்க்க முடியாதவொன்று.அவர்களை குறித்த சமூகம் ஆதரிப்பதே தவறு.ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் இலங்கைக்கான ஊடுருவலுக்கு இலங்கையை சேர்ந்த யாராவது அல்லது ஏதாவது அமைப்புக்கள் துணை போனால் அவர்களை இலங்கை அரசு தாராளமாக கைது செய்யலாம்.அதற்கு இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் தடையாக இருக்க மாட்டார்கள்.
 
சில விடயங்களை சந்தர்ப்பங்களை பார்த்து கூற வேண்டும்.இன்னும் சில விடயங்களை சந்தர்ப்பங்களை பார்த்து மறைக்க வேண்டும்.இன்று பேரினவாத அமைப்புக்கள் முஸ்லிம்களின் மீது இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்தே இலங்கை நாட்டு பேரின மக்களை தங்கள் பக்கம் ஈர்த்து முஸ்லிம்களை நசுக்க முயற்சிக்கின்றனர்.இச் சந்தர்ப்பத்தில் இவரின் கூற்று அவர்களின் நாசகார செயல்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.இவ்விடயம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கூட இலங்கை முஸ்லிம்களின் நலனை கருத்தில் கொண்டு அதனை பகிரங்கமாக கூறாது இரகசியமான வழியில் கட்டுப்படுத்த சிந்திப்பதே பொருத்தமான வழி முறையாகும்.இறுதியாக இவ்விடயம் குறித்து கருத்து வெளியிட்ட விஜயதாச ராஜ பக்ஸ முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் உள்ளதாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படியான விடயங்களை வெளிப்படையாக கதைத்தாக கூறி நழுவ முயற்சிக்கின்றார்.சில விடயங்களை வெளிப்படையாக கதைக்கும் போது பிரச்சினைகள் தீரும்.அந்த வகையான பிரச்சினைகளுக்குள் இந்த விடயம் அடங்காது.சமகாலத்தில் முஸ்லிம்களிடையே ஞானசார தேரரை கைது செய்ய வேண்டுமென்ற விடயம் ஓங்கிக் காணப்படுகிறது.இதன் போது இவருடைய கருத்துக்களானது நீங்களும் என்ன சும்மா ஆக்களா? என்ற பாணியில் முஸ்லிம்களை அடக்குவதற்கு கூறியதாகவே கருதுகிறேன்.
 
இன்று 23-11-2016ம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அமர்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலங்கையில் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் யாருமே இல்லையெனவும் நாட்டிலிருந்து வெளியேறி 32 பேர் அதில் இணைந்ததாக கூறப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லையென்றும் கூறியிருந்ததோடு இதனை ஜனாதிபதியும் புலனாய்வு அறிக்கைகளும் உறுதிப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான ஏதாவது பிரச்சினை எழும் போது அமைச்சர் ராஜித போன்ற ஒரு சிலர் முஸ்லிம்களுக்கு சார்பாக கதைப்பது மனதுக்கு ஆறுதலான விடயம்.இருந்தாலும் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் இல்லையென்று ஜனாதிபதி அறிவாராக இருந்தால் அதனை அவர் கூறாமல் ஓணான் விட்டு வெற்றிலை பறிப்பதனும் பாராளுமன்றத்தில் மௌனியாக இருந்ததனும் நோக்கமென்ன? பாராளுமன்றத்தில் முன் வைக்கப்படும் கருத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் பதில் அளிப்பது தானே பொருத்தமானது.இவ்விடயத்தில் கோத்தபாய ராஜ பக்ஸ முண்டியடித்துக்கொண்டு வந்து இலங்கை முஸ்லிம்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கும் இடையில் எந்த வித தொடர்புமில்லையென கூறியிருந்ததோடு தானே இது தொடர்பில் முதன் முதலில் கூறியவராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.இவர் கூறிய சம்பவமானது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் என்பதால் அக் காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகயிருந்த கோத்தபாய ராஜ பக்ஸவின் கருத்து மிகவும் பெறுமதியானவை.தற்போது அவருடைய கருத்தை மஹிந்த கூட்டு அணியினர் ஒருவரின் கூற்றாக நோக்குவதானாலேயே பெறுமதி குன்றியதாக காணப்படுகிறது.ராஜ பக்ஸ குடுபத்தினர் முஸ்லிம்களின் விரோதிகளாக முஸ்லிம்களிடையே உள்ள எண்ணப்பாடுகளை மாற்றியமைக்க இவ்வாறான சந்தர்ப்பங்களை அவர்கள் பயன்படுத்த முனைவதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.மஹிந்த ராஜ பக்ஸ காலத்தில் பொது பல சேனா அமைப்பினர் இவ்வாறான கதைகளை பரப்பிய போது கோதபாய ராஜ பக்ஸ பதில் அளித்திருந்தமை மறுக்க முடியாத உண்மை.அந் நேரத்தில் இவ்வாறன கதைகளை பொது பல சேனா அமைப்பினரே முன் நின்று கூறினார்.இவ்வாட்சியில் நீதியமைச்சர் கூறும் நிலை.
 
இன்றைய உலகில் முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களுக்கு தீவிரவாத கிரீடம் அணிவித்து அழகு பார்ப்பதில் அலாதிப் பிரியத்துடன் செயற்படுகின்றனர்.அந்த வகையில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போன்று தான் பலரும் நோக்குகின்றனர்.இதன் முழுப் பொறுப்பும் மேக்கத்தையோர்களையே சாரும்.இஸ்லாம் சமாதானத்தை போதிக்கின்ற ஒரு மார்க்கம்.ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமை சந்திக்கின்ற போது கூறும் முகமன் சமாதானத்தையே பிரதான கருவாக கொண்டுள்ளது.அதற்காக முஸ்லிம்கள் கோழைகள் போன்று குட்ட குட்ட குனிந்து செல்பவர்களாகவும் கணக்கு போட்டுவிடக் கூடாது.இன்று உலகில் தீவிரவாதிகளாக குறிப்பிடப்படும் சில முஸ்லிம் அமைப்புக்கள் தீவிரவாத அமைப்புக்களல்ல.அவர்கள் தங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர்.முஸ்லிம் நாடுகளுக்குள் இந்த அமெரிக்கா போன்ற சில நாடுகளுக்கு என்ன வேலை என்று சிந்தித்தாலே அதற்கான விடையை பெற்றுக்கொள்ளலாம்.ஒரு முஸ்லிம் ஒரு விடயத்திற்கு எதிராக போராட வேண்டுமாக இருந்தால் எப்போது? எதற்காக? எப்படி? போராட வேண்டுமென்ற வழி முறைகள் இஸ்லாத்தில் உள்ளன.இன்றைய முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற அமைப்பின் செயற்பாடுகளை ஒரு முஸ்லிம் தங்கள் மார்க்க வரையறைக்குள்ளான போராட்டமாக ஒரு போதும் நோக்கவில்லை.இவ்வமைப்பின் பின்னணியில் அமெரிக்க சதி உள்ளதாகவே பெரிதும் நம்பப்படுகிறது.இவ்வமைப்பு பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞ்சர்களின் கண்டனத்தையும் பெற்றுள்ளது.மற்ற இடங்களில் எப்படியோ இந்தியாஇஇலங்கை நாட்டை சேர்ந்த முஸ்லிம்கள் இவ்வமைப்பின் மீது தப்பபிப்பிராயங்களையே கொண்டுள்ளனர்.
 
இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து ஜமாத் எனும் பெயரில் மார்க்கத்தை பரப்பும் நோக்கில் சில மார்க்க பற்றாளர்களும் அண்மைக் காலமாக இஸ்லாமிய மத்ரஸாக்களுக்கு சில வெளிநாட்டு விரிவுரையாளர்கள் கல்வி கற்றுக் கொடுக்கவும் வருகின்றமை உண்மை.அவர்கள் ஒரு போதும் அடிப்படை வாதத்தை பரப்பும் நோக்கில் வருபவர்களல்ல.இவர்கள் எதனை வைத்து இப்படியான குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றார்களோ தெரியவில்லை.இப்படியானவர்களை இலங்கை நாட்டிற்குள் வராமல் தடுப்பதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் சிறிதும் பாதிப்படையப்போவதில்லை.இத்தோடு இனவாதிகள் தங்களது ஆட்டங்களை முடித்துக் கொள்வார்கள் என்றால் இதில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுப்புக்களை மேற்கோள்வது பற்றி சிந்திக்கலாம்.இதில் முஸ்லிம்கள் விட்டுக்கொடுப்பை மேற்கொள்ளும் போது இதில் வென்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் தங்களது அடுத்த இலக்கை திடகாத்திரமாக வைக்கும் நிலையிலேயே இலங்கை இனவாதிகள் உள்ளனர்.இன்று இந்த இனவாதிகள் வெளிநாட்டைச் சேர்ந்த முஸ்லிம்கள் இலங்கைக்குள்வரக் கூடாது என்பார்கள் நாளை இலங்கை முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாதென்பார்கள்.இதற்கேல்லாம் இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் உடன்பட முடியாது.நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ கூறியது போன்று குறித்த நபர்கள் அடிப்படை வாதத்தை போதிப்பவர்களாக இருந்தால் அதனை கண்காணிக்க இலங்கை அரசு ஏதாவது திட்டங்களை வகுக்கலாம்.அதற்கு முஸ்லிம்கள் உடண்படாது போனால் முஸ்லிம்களை குற்றம் சாட்டுவதில் நியாயமிருப்பதாக கூறலாம்.அண்மையில் பொது பல சேனா அமைப்பினர் உட்பட பல அமைப்பினர் இணைந்து கண்டியில் நடாத்திய ஆர்ப்பாட்ட பேரணியின் பின் 22 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மல்வத்த பீட மகாநாயக்க தேரரிடம் சம்ர்பித்திருந்தன.இதில் மத்ரஸாக்களில் அடிப்படை வாதம் போதிக்கப்படுவதால் அதனை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் உள்ளது.தற்போது அக் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காது போனால் நாட்டுக்குள் அசம்பாவிதங்கள் ஏற்படும் பாணியில் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நீதி அமைச்சரின் உரை மூலம் இவர்களுக்கு தெம்பு கிடைத்துள்ளதோடு அவர்களது கருத்துக்களுக்கான பெறுமதியும் அதிகரித்துள்ளது.
 
முஸ்லிம் தனியார் சட்ட மாற்றம் என்பது முஸ்லிம்களுடைய விடயம் அதில் நாங்கள் தலையிட மாட்டோம்.ஒரு பணக்கார முஸ்லிம் மாத்தளையில் பதின்மூன்று வயதுடைய சிங்கள சிறுமியை திருமணம் செய்துள்ளார்.இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என குறித்த நாளன்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ கூறியிருந்தார்.இங்கு கூறப்பட்டுள்ள சிறுமி சிங்கள இனத்தை சேர்ந்தவராக இருந்தால் இலங்கை நாட்டின் சட்டப்படி பதின்மூன்று வயதில் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம்.ஒரு முஸ்லிம் ஒரு மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை மணம் முடிக்க இஸ்லாத்தில் அனுமதியுமில்லை.ஒரு பெண் திருமணம் செய்யும் போது அவர் திருமணம் செய்யும் ஆணின் மதத்தை சேர்ந்தவராக கணிக்கப்படுவார் என்ற சட்டம் எங்குமில்லை.குறித்த பெண் இஸ்லாத்திற்கு மாறியிருந்தால் அதன் பின் அந்த பெண்ணை ஒரு சிங்கள பெண்ணாக பார்க்க முடியாது.இலங்கையில் வாழ்கின்றவர்களுக்கு தான் விரும்பும் மதத்தை பின் பற்றும் சுதந்திரம் இலங்கை அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளது.எது எப்படி இருந்தாலும் முஸ்லிம் தனியார் சட்ட மாற்றம் முஸ்லிம்களுடைய பிரச்சினை அதில் நாங்கள் தலையிட மட்டோமெனக் கூறிய விடயம் பாராட்டுக்குரியது.தற்காலத்தில் முஸ்லிம்கள் இதய சுத்தியுடன் செயற்பட்டால் சில வேளை முஸ்லிம் தனியார் சட்டத்தை இஸ்லாமிய ஷரியாவின் அடிப்படையின் இன்னும் வாடிவமைத்துக்கொள்ளக் கூடிய சாதகமான நிலையுள்ளது.
 
இலங்கை முஸ்லிம்களிடையே தௌஹீத்இதப்லீக்இஜமாத்தே இஸ்லாமிஇசுன்னத் வல்ஜமாத் ஆகிய அமைப்புக்கள் இயங்குகின்றனஇஇந்த குழுக்களுக்கிடையே மோதல்கள் இடம்பெறுகின்றனஇசில கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.பதினைந்து பாரிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன என பாராளுமன்றத்தில் கூறுமளவு நீதியமைச்சருக்கு என்ன தேவை எழுந்துள்ளது.முஸ்லிம்களிடையே சில குழுக்கள் உள்ளமை உண்மை தான்.அவை நாட்டின் தேசியத்திற்கு அச்சுறுத்தலான வகையில் தங்களது செயற்பாடுகளை அமைக்கவில்லை.அவைகள் தங்களுக்குள் இஸ்லாமிய கொள்கையளவில் தான் முரண்படுகின்றன.இருப்பினும் முஸ்லிம்கள் தங்களுக்குள் முரண்படுவதும் அவ்வளவு நல்லதல்ல.இதற்கு பிறகாவது முஸ்லிம்கள் இனவாதிகளுக்கு இவ்வாறான தீனிகளை போடக் கூடாது.இதனை வார்த்தைகளோடு நிறுத்தி விடாது இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இதற்கான காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
விஜயதாஸ பக்ஸ குறித்த தினம் பாராளுமன்றத்தில் வைத்து கூறிய கூற்றானது இலங்கை முஸ்லிம்களும் சும்மா ஆட்களில்லை என்ற செய்தியை கூறியிருந்தது.தற்போது அவர் இவ்விடயத்தில் நழுவும் போக்கிற்கு வந்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன இனவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுங்கள் என நீதி அமைச்சரை நோக்கி உத்தரவிட்ட மறு நாளே இவர் இவ்வாறு கூறி இனவாதிகளுக்கு தீனி போட்டுள்ளார்.முஸ்லிம் அமைப்புக்கள் சிலவற்றின் பெயர் குறிப்பிட்டு விமர்சிக்க முடிந்த நீதி அமைச்சரால் பொது பல சேனாவின் பெயரை உச்சரிக்க முடியவில்லை.இவைகளை வைத்து நோக்கும் போது இவரின் பின்னால் வேறு நிகழ்ச்சி நிரல்கள் உள்ளதா என்ற அச்சமும் எழுகிறது.இதற்கு பிறகு இவரிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை முஸ்லிம்கள் இழந்ததோடு அவர் அவ் அமைச்சுக்கு தகுதியானவருமல்ல.இது விடயத்தில் இது தொடர்பான மறுப்புக்கள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.இதுவே எதிர்கால முஸ்லிம் சமூகத்திற்கு பாதுகாப்பானது.
 
குறிப்பு: இக் கட்டுரை இன்று 28-11-2016ம் திகதி திங்கள் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 71 கட்டுரையாகும்.
 
 

நீதியமைச்சரின் நீதியற்ற பேச்சு.. நீதியமைச்சரின் நீதியற்ற பேச்சு.. Reviewed by Madawala News on 11/28/2016 07:41:00 PM Rating: 5