Kidny

Kidny

முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் அலகும்! அதற்கான நியாயங்கள்!


ஓட்டமவடி அஹமட் இர்ஷாட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அமைச்சர்
மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களினால் எழுதப்பட்ட முன்மொழிவிலிருந்து சாட்டோ வை.எல்.மன்சூரினால் தொகுத்தெழுதப்பட்டது.

முஸ்லிம்கள் தமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக நாட்டுப் பிரிவினை கோரிக்கையோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளையோ நாடியிருக்கவில்லை. ஆனால் இலங்கையில் கல்வி வேலைவாய்ப்பு காணிப்பங்கீடு குடியேற்றம் ஆகியவை தொடர்பாக அரசினால் புறக்கணிக்கப்பட்ட சமூகம் முஸ்லிம்களே.

தமிழ் ஆயுதப் போராளிகளாலும் இந்திய அமைதிகாக்கும் படையினராலும் தமது பாரம்பரிய வசிப்பிடமான வடக்குஇ கிழக்கு மாகாணங்களிலே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டும்இ கொள்ளையிடப்பட்டும்இ கொடுமைப்படுத்தப்பட்டதும் முஸ்லிம் சமூகமே.

இலங்கை அரசு சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சனைகளுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது. தமிழர் தமது குறைகளைப்பற்றி முறையிடத் தமிழ் நாட்டுக்குச் சென்றனர்.

நாம் எமது குறைகளுக்கு செவிசாய்க்கக் கூடிய முஸ்லிம் அரபு நாடுகள் எம்மைச் சூழக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் முஸ்லிம்கள் இன்னும் அவ்வாறான நாடுகளுடன் எமது பிரச்சனைகளைப்பற்றி முறையிடவோ அது தொடர்பான பண உதவியோ அல்லது ஆயுதப் பயிற்சியோ கோரி எமது உயிர்களைப் பாதுகாக்கவும் எமது சட்டப்பூர்வமான உரிமைகளைத் தற்காப்புச் செய்யவும் முன்வரவில்லை.
இலங்கை வரலாற்றிலே இப்போது தான் முதல் தடவையாக சிறுபான்மையினங்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களாகிய நாம் அலட்சியப்படுத்தப்படுவதையோ எமது சட்டபூர்வமான உரிமைகள் மறுக்கப்படுவதையோ விரும்பவில்லை.

அதிகாரப்பகிர்வுக்கான ஒரு அமைப்பாக மாகாண சபையை எடுத்துக் கொண்டால் 74% சிங்களவர்களுக்கு ஏழு மாகாண சபையும் 
18ம% தமிழர்களுக்கு இரண்டு மாகாண சபையும்
8%முஸ்லிம்களுக்கு ஒரு மாகாண சபையையும் ஏற்படக் கூடிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதே நீதியானதும் நியாயமானதுமாகும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களதும் இலங்கை முஸ்லிம்களதும் பாரம்பரிய வசிப்பிடங்களே தவிர தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வசிப்பிடங்கள் அல்ல.

தமிழ் பேசும் மக்கள் என்ற சொற்றொடர் ஒரு இனக் குழுவை குறிப்பதல்ல. உண்மையிலேயே இலங்கைத் தமிழர் இலங்கை முஸ்லிம்கள்இ இந்தியத் தமிழர் ஆகிய மூன்று இனக் குழுவையுமே குறிக்கின்றது.

'தமிழ் பேசும் மக்களுடைய பாரம்பரிய வசிப்பிடம்'என்னும் போது பூகோள ரீதியாக தற்போதைய வடக்குஇ கிழக்கு மாகாணங்களையே குறிக்கின்றது. இந்தியத் தமிழர்கள் இம்மாகாணத்தில் பாரம்பரியமாக வாழ்ந்திராமையினால் 'தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வசிப்பிடம்' என்பது அவர்களுக்குப் பொருந்தாது. எனவேஇ வடக்குஇ கிழக்கு மாகாணங்கள் இலங்கைத் தமிழர்களதும்இ இலங்கை முஸ்லிம்களதும் பாரம்பரிய வசிப்பிடமாகும்.
முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் 33மூ (தற்போது 44 வீதம்) கொண்ட ஒரு பிரதானமான சிறுபான்மையினமாக உள்ளனர். கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைப்பது முஸ்லிம்கள் 18%வீதமாக மாறி எமது அரசியல் பலம் வீரியமற்றதாகி விடும்.

1976ஆம் ஆண்டின் எல்லை நிர்ணய ஆணைக்குழுஇ கிழக்கு மாகாணத்திற்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பாக இன ரீதியான 5 முஸ்லிம் தேர்தல் தொகுதிகளையும் 
5 தமிழர் தேர்தல் தொகுதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் கூட முஸ்லிம்களும் தமிழர்களும் சமமான தொகையான 17 பிரதிநிதிகளைக் கிழக்கு மாகாகணத்திலிருந்து தெரிவு செய்திருக்கின்றனர்.
முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக சமபலம் உடையவர்களாகவும் கல்வி பொருளாதார ரீதியாக தமிழர்களை விட மேம்பட்டவர்களாகவும் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர்.
வடக்குடன் கிழக்கை இணைப்பதென்பது முஸ்லிம்களின் அரசியல் பொருளாதாரத்திற்கு கல்வி தொடர்பான அபிலாஷைகளுக்கு எதிரான ஒரு செயலாகவே இருக்கின்றது. தமிழர்களைப் போலவே முஸ்லிம்களும் தமது பாரம்பரிய வசிப்பிடத்தை உள்ளடக்கிய வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அதிகாரப்பகிர்வுக்கான ஒரு தனியான சபையையே விரும்புகிறார்கள்.

1987 ஆம் ஆண்டின் 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 37(அ) ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டு யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை வடக்கு – கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைப்பது ஜனாதிபதி பிரகடனப்படுத்துவதை தடை செய்கின்றது.
ஆனால் முன்னைய ஜனாதிபதி ஜயவர்த்தனா அவர்கள் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி அவசரகால நிலையின் கீழ் தற்காலிக இணைப்பை பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிரகடனப்படுத்தி கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களை தமிழர்களின் நிரந்தர அரசியல் சமூக அடிமைகளாக மாற்றிவிட்டனர்.

காலஞ்சென்ற ஜீ.ஜீ. பொன்னம்பலம் 74 வீதம் ஆகவிருந்த சிங்களவர்களின் மத்தியில் 18 வீதம் தமிழர்கள் சிறுபான்மை இனமாக இருப்பதை விரும்பாது 50 – 50 சமநிலை பிரதிநிதித்துவத்தை கோரியிருந்தார்.

அதே அடிப்படையில் 8 வீதம் முஸ்லிம்களாகிய நாம் ஒன்றிணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களுள் 70 வீதம் தமிழர்களிடையே நிரந்தர சிறுபான்மையினமாக்கப்படுவதை விரும்பவில்லை.

70 வீதம் தமிழர் பெரும்பான்மை கொண்ட வடக்கு – கிழக்கு மாகாண சபைக்கு அரசியல் அதிகாரங்கள் கைமாற்றப்படும் போது அதே பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழரைப் போன்று சம உரிமை கொண்ட முஸ்லிம் சமூகத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்காமை கல்வி ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்தில் முன்னேற்றமடைந்திருக்கும் தமிழர் தமக்கு புதிதாக வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு சிறப்பான முறையில் முன்னனேற்றமடைய உதவுவதுமல்லாமல் முஸ்லிம்களை மிகவும் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்படவும் வழிவகுக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்காது.

சிங்களப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் சிங்களவரது அபிலாஷைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் அவர்களிடையே சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது போல் தமிழ் பேசும் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களில் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவு கொடுத்து அதன் மூலம் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் அபிலாஷை ஒரு தமிழீழத்தை அமைப்பது அல்லது இரண்டு மாகாணங்களையும் ஒன்றிணைத்த ஒரு மாகாண சபையை உருவாக்குவது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழ் பேசும் பிரதேசத்தில் உள்ள தமிழர்களோடு முஸ்லிம்களும் சேர்ந்து கொள்ளும் சமயத்தில் சிங்களவர்களும் சிங்களம் பேசும் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களும் எங்களைத் துரோகிகள் எனக் குறை கூறுவார்கள்.

மறுபுறம் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும்இ கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களிடமிருந்து முஸ்லிம்களைப் பிரிப்பதில் வெற்றி கண்டு சிங்களவர்களும் முஸ்லிம்களும் சேர்ந்த ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்துவார்களேயானால் தமிழர்கள் தமது மத்தியிலே வாழும் முஸ்லிம்களை உண்மையாகவே கழுத்தறுப்பு சமூகமாகக் கருதி தாம் கடந்த 45 (இது 1994 ஆம் ஆண்டு தற்போது 67 வருடங்கள்) வருட காலமாக நடாத்தி வந்த பெரும் தியாகத்தின் பயனாகப் பெற்ற வடக்கு – கிழக்கு மாகாண சபைக்கு உரித்தாக்கப்பட்ட அதிகாரத்தை அனுபவிக்கத் தடையாக இருக்கும் ஒரு சமூகமாகவே கருதுவர்.

தமிழர்கள் தமக்கு இறுதியாகக் கிடைத்த வாய்ப்பின் பயனாகப் பெற்றதும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருப்பதுமான இணைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாண சபையை எதிர்த்து கிழக்கு மாகாணத்திற்கு தனியான மாகாண சபையைக் கோர தமிழர்கள் அவ்வளவு மடையர்கள் அல்லர்.

நாம் எவ்விதத்திலும் தமிழர்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்க விரும்பாத அதே நேரம் நெருக்கடியான இக்காலகட்டத்தில் சிங்களவர்களுக்கு துரோகம் செய்யவும் விரும்பவில்லை. அதன் பயனாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தற்போதுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்திற்கான ஒரு தனித்த சபைக்கு ஆதரவு வழங்காது ஒன்றிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள முஸ்லிம்களின்பாரம்பரிய வசிப்பிடங்களை உள்ளடக்கிய ஒரு பிரத்தியேக முஸ்லிம் பெரும்பாண்மை மாகாண சபையைக் கோரி ஏகமனதாக பிரேரணையை பகிரங்கமாக முன்வந்திருக்கிறோம்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களதும் முஸ்லிம்களதும் தாயகமாகும். சுதந்திரமான ஒரு இனக் குழுவான முஸ்லிம்களுக்கு அதிகாரப்பகிர்வின் போது சமமான வாய்ப்புக்கள் அளிக்கப்படல் வேண்டும். அதிகாரப் பகிர்வு கொண்ட பிரத்தியேகமான சபையொன்றை எமது தாயகத்துள் நாம் கொண்டிருப்பது எமது சட்டபூர்வமான உரிமையாகும்.
அவ்வாறு அதிகாரப்பகிர்வினைக் கொண்ட பிரத்தியேகமான சபையொன்று உருவாக்கப்படாவிட்டால் தமிழரைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களின் சபைக்கு விரிவான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் போது சட்டம்இ ஒழுங்குஇ காணிக்குடியேற்றம் என்பன தொடர்பாக முஸ்லிம்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுவர்.
ஒன்றிணைக்கப்பட்ட மாகாணசபையில் அமையவிருக்கும் பொலிஸ்படை முற்றுமுழுதாக தமிழர்களைக் கொண்டு மட்டும் அமைதல் கூடாது. முஸ்லிம்கள் வடக்குஇ கிழக்கு மாகாணங்களிலுள்ள தமது பாரம்பரிய வசிப்பிடங்களில் தமிழ் ஆயுதப் போராளிகளால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுவதை விரும்பவில்லை. ஒன்றிணைக்கப்பட்ட மாகாணங்களிலுள்ள பாரிய அபிவிருத்தித் திட்டங்களைத் தவிர ஏனைய காணிக் குடியேற்றங்கள் 70 வீதம் தமிழர் பெரும்பாண்மை மாகாணசபையின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வருகின்றது.
ஒன்றிணைந்த மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் பாரம்பரிய வசிப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டு எதிர்காலத்தில் தமிழர்களால் குடியேற்றப்படாது பாதுகாக்கப்படல் வேண்டும். 1987ஆம் ஆண்டின் பிரதேசசபைச் சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி சபைகளை வரையறை செய்யும் போதும் காணி ஒதுக்கீடு அபிவிருத்திக்கான இயற்கை வளம் என்பனவற்றை பங்கீடு செய்யும் போதும் முஸ்லிம்களுக்குப் பெரிதும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவிருந்த அம்பாறை மாவட்டம் கல்லோயாத்திட்டத்தின் கீழும் கரும்புப்பயிர்ச் செய்கையின் மூலமும் சிங்களவரைக் கொண்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று அது முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமாக இல்லை. இதனால் ஐ.தே.க. அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் முஸ்லிம்களுக்கு பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

காலத்திற்கு காலம் ஆறுதல் வார்த்தைகளும்இ வாக்குறுதிகளும் அரசியல் தலைவர்களால் வழங்கப்படுகின்ற போதும் உண்மையான அதிகாரப் பிரயோகத்திற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் முஸ்லிம்களின் இன உரிமைகளையும் தனித்துவத்தையும் அழித்து ஒழிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் போலத் தோன்றுகின்றன. தற்போதைய நிலைமையில் அக்கறையுடன் அவதானித்து பொருத்தமான முறையில் முஸ்லிம்களின் இனரீதியானதும் சட்டபூர்வமானதுமான உரிமைகளை பெற்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஆகவே இது தொடர்பாக முஸ்லிம் சமூகம் பின்வரும் பிரேரணைகளை சமர்ப்பிக்க விரும்புகின்றது.

கீழே தரப்பட்டுள்ளவாறு வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள இலங்கை முஸ்லிம்களின் வதிவிடங்கள் உள்ளடக்கப்பட்ட ஒரு சுதந்திரமான முஸ்லிம் பெரும்பான்மை மாகாணசபை அல்லது தனியான அரசியல் அமைப்பு உருவாக்கப்பட உடனடி நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

1. பிரத்தியோகமான முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டம் ஒன்று தற்போதைய அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப்படல் வேண்டும். 
இது பாணமைப்பற்று அக்கறைப்பற்று சம்மாந்துறைப்பற்று கரவாகு ஃ நிந்தவூர்பற்று ஆகிய இறைவரி உத்தியோகத்தர் பிரிவுகளையும் வேகம்பற்று தெற்குஇ உதவியரசாங்க அதிபர் பிரிவையும்(பிரதேச செயலகப் பிரிவு) உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

2. மேற்படி புதிய நிருவாக மட்டத்திலுள்ள ஒவ்வொரு சமூகத்தினதும் குடிசன விகிதாசாரப்படி பாரம்பரிய வசிப்பிடங்கள் விவசாயக்காணிகள் இயற்கை வளங்கள் உள்ளடக்கப்பட்ட இனரீதியான பிரதேசசபைகள் ஃ உதவியரசாங்க அதிபர் பிரிவுகள்(பிரதேச செயலகப் பிரிவுகள்) உருவாக்கப்படல் வேண்டும்.

3. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 24 வீதம் (தற்போது 27 வீதம்) முஸ்லிம் குடிசன விகிதாசாரப்படி காத்தான்குடி ஏறாவூர்இl ஓட்டமாவடி வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் பாரம்பரிய வசிப்பிடங்கள் தொழில்துறைக்கான நிலபுன்கள் இயற்கை வளங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்ட முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசபைகள் ஃ உதவியரசாங்க அதிபர் பிரிவுகள்(பிரதேச செயலகப் பிரிவுகள்) உருவாக்கப்படுதல் வேண்டும்.

4. திருகோணமலை மாவட்டத்திலுள்ள 29 முஸ்லிம் குடிசன விகிதாசாரப்படி கிண்ணியா மூதூர் தோப்பூர் தம்பலகாமம் குச்சவெளி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய வசிப்பிடங்கள் தொழில் துறைக்கான நிலபுலன்கள் இயற்கை வளங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்ட முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசபைகள் ஃ உதவியரசாங்க அதிபர் பிரிவுகள்(பிரதேச செயலகப் பிரிவுகள்) உருவாக்கப்படுதல் வேண்டும்.

5. மன்னார் மாவட்டத்திலுள்ள 27 வீதம் முஸ்லிம் குடிசன விகிதாசாரப்படி எருக்கலம்பிட்டி முசலி ஆகிய பகுதிகளில் பாரம்பரிய வசிப்பிடங்கள் தொழில் துறைக்கான நிலபுலன்கள் இயற்கை வளங்கள் ஆகியவை உள்ளடக்கப்பட்ட முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசபைகள் ஃ உதவியரசாங்க அதிபர் பிரிவுகள் (பிரதேச செயலகப் பிரிவுகள்) உருவாக்கப்படுதல் வேண்டும்.

6. சம்மாந்துறை காத்தான்குடி கிண்ணியா ஆகிய பகுதிகளில் அவ்வப்பிரதேசங்களிலுள்ள பிரதேச சபைகள் முஸ்லிம் பெரும்பான்மை குறையாதவாறு மாநகர சபைகள் உருவாக்கப்படுதல் வேண்டும்.

7. கல்முனையில் அப்பிரதேசங்களிலுள்ள பிரதேச சபையின் மூலம் பெரும்பான்மை குறையாதவாறு மாநகர சபை உருவாக்கப்படுதல் வேண்டும்.

8. மட்டக்களப்பு திருகோணமலை மன்னார் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேசசபைகள் ஃ உதவியரசாங்க அதிபர் பிரிவுகள்(பிரதேச செயலகப் பிரிவுகள்) உள்ளூராட்சி அமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைக்கப்பட்டு பிரத்தியேக முஸ்லிம் நிருவாக மாவட்டங்கள்இ பிரஸ்தாப மாவட்டங்கள் தோறும் அமைக்கப்படுதல் வேண்டும்.

9. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உருவாக்கப்பட்ட எல்லா முஸ்லிம் நிருவாக மாவட்டங்களும் பிரத்தியேக முஸ்லிம் தேர்தல் மாவட்டங்களாக கருதப்படுதல் வேண்டும்.

10. வடக்கு கிழக்கு மாநிலத்தில் உள்ள எல்லா முஸ்லிம் நிருவாக ஃ தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய ஏறக்குறைய 5இ148 ச.கி. மீற்றர் (1988 சதுர மைல்) சனத் தொகை 525000 உள்ள பிரதேசம். முஸ்லிம்களை ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு தனிச்சுதந்திரமான அமைப்பாக அமைய வேண்டும்.

1000 ச.கி. மீட்டர் இடப்பரப்பும் 40000 சனத்தொகையும் என்ற அடிப்படையில் முஸ்லிம் பெரும்பான்மை சபையில் 60மூ முஸ்லிம்கள் – 11 அங்கத்தவரையும்இ 30மூ தமிழர்கள் 5 அங்கத்தவர்களையும் 10மூ சிங்களவர்கள் 2 அங்கத்தவர்களையும் பிரதி நிதிப்படுத்துவர்.

குறிப்பு- மறைந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அவர்களால் கடந்த 1994ம் ஆண்டு அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் தீர்வுகளுக்காக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளில் சில வரலாற்று குறிப்புக்கள் இவற்றில் சில பிரதேச சபைகள் தற்போது நகர சபைகளாகவும் தரமுயர்த்தப்பட்டுள்ளன. சில புதிய பிரதேச சபைகள்இ புதிய பிரதேச செயலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு குறிப்பிடப்பட்ட இன விகிதாசாரம் கூடிய விகிதாசாரத்தினை அடைந்துள்ளன. 

தென் கிழக்கு பல்கலைகழகம் கல்வி ரீதியான முன்னோக்கிய நகர்வுகள் மாறுதல்கள் நடைபெற்றுள்ளன.
அதன் அடிப்படையிலே இந்த கட்டுரையின் விளக்கத்திலிருந்து முஸ்லிம் சமூகமும் புத்தி ஜீவிகளும் சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும்இகல்விமான்களும் வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று சமூகத்திற்காய் சிந்திக்க வேண்டிய கட்டாய நிலமையில் தற்பொழுது தேசிய முஸ்லிம் சமூகம் இருந்து கொண்டிருக்கின்றது என்பதே இக்கட்டுரையினை மீண்டும் வெளிப்படுத்துவதற்காண முக்கிய காரணமாய் இருக்கின்றது.

மீள் வாசிப்புக்காக தொகுப்பு வை.எல்.மன்சூர் எச்.எம்.எம்.றியாழ் ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
 
முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் அலகும்! அதற்கான நியாயங்கள்! முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் அலகும்! அதற்கான நியாயங்கள்! Reviewed by Madawala News on 11/13/2016 03:41:00 PM Rating: 5