Ad Space Available here

வவுனியா நாகர் இலுப்பை குளம் மக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று மஸ்தான் எம்.பி ஆராய்வு


வவுனியா  நாகர் இலுப்பைகுள  கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டறிய 15.11.2016 அன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே. காதர் மஸ்தான் அக்கிராமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார். 

மக்கள் முன் வைத்த கோரிக்கைகளில் பிரதான தேவைகளான வீடுத்திடம் , வீதி புனரமைப்பு இத்திட்டங்களை  2017 ஆண்டு பகுதி நிதி ஒதிக்கீட்டில் பகுதி பகுதியாக   நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மஸ்தான் எம்.பி  தெரிவித்தார் .

மேலும் இக்கிராமத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கம் , மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் , சனசமூக நிலையம் ,கோயில் அமைப்புக்கள் என்பான சிறப்பாக இயங்கி வருவதாகவும் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதை காணக்கூடியதாக உள்ளதாகவும், குறித்த கிராமத்தின் அபிவிருத்திக்கு தான் என்றும் பக்க பலமாக செயற்படுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடகப்பிரிவு 
வவுனியா நாகர் இலுப்பை குளம் மக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று மஸ்தான் எம்.பி ஆராய்வு வவுனியா நாகர் இலுப்பை குளம் மக்களின் பிரச்சனைகளை நேரில் சென்று மஸ்தான் எம்.பி ஆராய்வு Reviewed by Madawala News on 11/17/2016 01:35:00 PM Rating: 5