இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு சவூதி அரேபியாவில் தலைமையகத்தை கொண்டுள்ளது கட்டாரில் அல்ல ..


-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் -
அமைச்சர்  ரஊஃப் ஹகீம் அவர்கள் கட்டரில் இடம்பெறுகின்ற இலங்கை கட்டார் வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்ளவே கட்டார் சென்றுள்ளார், அங்கு வாழ்கின்ற இலங்கையர், கட்சி உறுப்பினர்களையும் அவர் சந்திக்கின்றார்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை   இஸ்லாமிய மாநாட்டு அமைப்பிற்கு எடுத்துக் கூறி இலங்கை அரசிற்கு அழுத்தம் கொண்டுவர அவர் அங்கு சென்றுள்ளதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு சவூதி அரேபியாவில் தலைமையகத்தை கொண்டுள்ளது கட்டாரில் அல்ல என்பதனையும் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவர் நாட்டின் அமைச்சரவை, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் உள்ள கட்டார் தூதுவராலயம் என்பவற்றிற்கு தெரியாமல் அவ்வாறான சந்திப்புக்களை மேற்கொள்ள முடியாது.

இவ்வாறான அறிக்கைகள் சமூகத்திற்கு மாத்திரமன்றி அமைச்சர் ஹக்கீமுக்கும் சில அஸௌரியங்களை ஏற்படுத்தலாம். 

தயவு செய்து அரசியல் குழுக்களுக்கிடையிலான மட்டரகமான போட்டா போட்டிகளை சமூகத்தை ஏமாற்றும் அல்லது தகவலறியும் உரிமைகளை கேளி செய்யும் விதமாக பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்ளவும்.

இந்த நாட்டு முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றார்கள் சமூகத்தின் சிவில் சன்மார்க்க மற்றும் அரசியல் தலைமைகள் மிகவும் பொறுப்புணர்வுடன் நிலவரங்களை கையாண்டு வருகின்றார்கள்.

பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் உளவுத் துறையினர் ஊடகங்களை சமூக ஊடகங்களை கவனமாக அவதானித்து வருகின்றனர் மாத்திரமல்லாது முஸ்லிம் விரோத சக்திகளும் எமது பகிர்வுகளையும் பதிவுகளையும்  தமக்கு சாதகாமாக பயன்படுத்தி வருகின்றார்கள்.

இவாறான நிலையில் மிகவும் மலிவான அரசியல் பதிவுகளை இடுவதில் இருந்து போட்டிக் குழுக்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை ஏற்கனவே திட்டமிட்டபடி  அமைச்சர் ஹகீம் மேற்கொண்டுள்ள உத்தியோக பூர்வ விஜயத்தை கொச்சைப் படுத்தி சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளும் எமது அரசியல் கலாசாரத்தின் அசிங்கங்களை அம்பலப் படுத்திக் கொண்டிருக்கின்றமை  கவலைக்குரிய விடயமாகும்.

அமைச்சரின் ஹக்கீமின் உத்தியோக பூர்வ விஜயம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு சவூதி அரேபியாவில் தலைமையகத்தை கொண்டுள்ளது கட்டாரில் அல்ல .. இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு சவூதி அரேபியாவில் தலைமையகத்தை கொண்டுள்ளது கட்டாரில் அல்ல .. Reviewed by Madawala News on 11/22/2016 12:18:00 AM Rating: 5