Free Space

பௌத்த பிக்குகளால் பௌத்த மதத்திற்கு பாரிய ஆபத்து


பெளத்தத்திற்கு சில பெளத்த பிக்குகளால்  ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இத்தகைய துறவிகளிடமிருந்து பெளத்த மதத்தை காப்பாற்றுங்கள் என்று சிங்கள பெளத்த மத, அரசியல் தலைவர்களை தான் கோரியுள்ளதாக என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 

கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி இனவாதத்தை கக்கும், மதத்தை பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தும் ஒருசில பெளத்த துறவிகளுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்னிடம் பெருந்தொகையான தமிழ், முஸ்லிம் மக்கள் கோரியுள்ளனர்.அதை நான் கவனத்தில் எடுத்துள்ளேன்.மட்டக்களப்பில் ஒரு விஹாராதிபதி எழுப்பிய காட்டுக்கூச்சலை கண்டும், இரத்மலானையில் ஒரு விஹாராதிபதி, அங்கு வாழும் ஒரு தமிழ் குடும்பத்துக்கு எதிராக இனவாதம் பேசி வன்முறையை தூண்டிவிட்டதையும், அறிந்தும் நான் அதிர்ச்சியடைந்தேன்

இவை தொடர்பில் இன்று அமைச்சரவையிலும் குரல் எழுப்பவுள்ளேன். இந்த மோசமான நிலைமைகள் தொடர்பில் பதில்களை தர ஜனாதிபதியும், பிரதமரும் கடமைப்பட்டுள்ளார்கள் எனவும் மேலும் தெரிவித்தார்.


பௌத்த பிக்குகளால் பௌத்த மதத்திற்கு பாரிய ஆபத்து பௌத்த பிக்குகளால் பௌத்த மதத்திற்கு பாரிய ஆபத்து Reviewed by Madawala News on 11/15/2016 10:54:00 AM Rating: 5