மஹிந்தவுக்கு சகல ராஜதந்திர ஏற்பாடுகளையும் குறைவின்றி செய்துகொடுக்கவும் : பிரதமர்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23 ஆம் திகதி  சீன விஜயம் செய்யவுள்ள நிலையில் அவருக்கு சகல இராஜதந்திர ஏற்பாடுகளையும் குறைவின்றி செய்து கொடுக்குமாறு வெளிவிவகார அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி தொடக்கம் ஒரு வார காலத்துக்கு இவரது விஜயம் அமையவுள்ளது. சீனாவின் உத்தியோகபுர்வ அழைப்பை ஏற்று இவர் இந்த விஜயத்தில் ஈடுபடவுள்ளதனால்இ தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் பிரதமர் கேட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதியுடன் 25 பேர் அடங்கிய குழு சீனா பயனமாக உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு சகல ராஜதந்திர ஏற்பாடுகளையும் குறைவின்றி செய்துகொடுக்கவும் : பிரதமர் மஹிந்தவுக்கு சகல ராஜதந்திர ஏற்பாடுகளையும் குறைவின்றி செய்துகொடுக்கவும் : பிரதமர் Reviewed by Madawala News on 11/18/2016 10:18:00 AM Rating: 5