Kidny

Kidny

முஸ்லிம் பெண்­க­ளு­க்கு தொடர் அச்­சு­றுத்­தல்கள் !-விடிவெள்ளி-
அண்மைக் கால­மாக முஸ்லிம் தனியார் சட்ட சீர்­தி­ருத்தம் தொடர்­பான பிர­சா­ரத்தில் ஈடு­பட்டு வரு­கின்ற முஸ்லிம் பெண் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு எதி­ராக சமூ­கத்­துக்குள் இருக்கும் சிலரால் முன்­னெ­டுக்­கப்­படும் கீழ்த்­த­ர­மான நட­வ­டிக்­கைகள், பய­மு­றுத்­தல்கள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் என்­ப­வற்றை தனிப்­பட்ட நபர்கள் என்ற ரீதி­யிலும், நிறு­வன ரீதி­யா­கவும் தாம் வன்­மை­யாகக்  கண்­டிப்­ப­தாக முஸ்லிம் பிர­மு­கர்கள் பலர் கூட்­டாக விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வி­மான்கள், சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் என 105 பேர் கையொப்­ப­மிட்டு வெளி­யிட்­டுள்ள இவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

கடந்த சில நாட்­க­ளாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்ட சீர்­தி­ருத்தம் தொடர்­பாக பரிந்­து­ரைத்து வரும் இலங்கை பூரா­கவும் உள்ள பெண் செயற்­பாட்­டா­ளர்கள் தனிப்­பட்ட நபர்­க­ளாலும், குழுக்­க­ளாலும் பய­மு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர். 

பெண் செயற்­பாட்­டா­ளர்­களின் குடும்­பங்­க­ளுக்கு மிகவும் கீழ்த்­த­ர­மான, துன்­பு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளாக்கும் தொனியில் தொலை­பேசி அழைப்­புக்கள் எடுக்­கப்­பட்டு தம் மனை­வி­யரை, சகோ­த­ரி­களை, மற்றும் மகள்­மாரை இச்­சட்ட சீர்­தி­ருத்த வேலை­களில் தொடர்ந்தும் ஈடு­ப­டாமல் தவிர்ந்தி­ருக்­கு­மாறு முன்­னெச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டுள்­ளன. 

சமூக வலைத்­தள பிர­சா­ரங்­க­ளிலும் இந்த முஸ்லிம் பெண் செயற்­பாட்­டா­ளர்­களின் பெயர்கள் குறிப்­பி­டப்­பட்டு இழி­வான முறையில் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றனர். இத்­த­கைய தாக்­கு­தல்கள், இழி­வான செயற்­பா­டுகள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் என்­பன ஒழுங்­க­மைக்­கப்­பட்­டவை என்­ப­துடன் குறிப்­பாக சில பெண்கள் உரி­மைகள் சார் செயற்­பாட்­டா­ளர்­களை இலக்­காகக் கொண்­ட­வை­யா­கவும் உள்­ளன. 

முஸ்லிம் பெண் செயற்­பாட்­டா­ளர்கள் மீதான இந்த வகை­யான இலக்கு வைக்­கப்­பட்ட மற்றும் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட தாக்­கு­தல்­க­ள் எந்­த­வ­கை­யிலும் ஏற்றுக் கொள்­ளத்­தக்­கவை அல்ல என்­ப­துடன் உட­ன­டி­யாக தடுக்­கப்­படல் வேண்டும். 

முஸ்­லிம்­க­ளான நாங்கள் எப்­பொ­ழுதும் வன்­முறை, பய­மு­றுத்தல் மற்றும் அச்­சு­றுத்­தல்­களை பிர­யோ­கிப்­ப­தனை கண்­டித்­துள்ளோம். இத்­த­கைய அச்­சு­றுத்­தல்கள் எமது சமூ­கத்தின் மீது தேசி­ய­வாத பௌத்த குழுக்­களால் பிர­யோ­கிக்­கப்­பட்ட போது அதற்­கெ­தி­ராக நாம் ஒன்­றி­ணைந்தோம்.

இவ்­வா­றி­ருக்க எமது சொந்த சமூ­கத்தின் அங்­கத்­த­வர்­க­ளா­லேயே இத்­த­கைய அணு­கு­மு­றைகள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தனை நாம் ஒரு­போதும் ஏற்றுக் கொள்­ள­மாட்டோம்.

இஸ்லாம் என்­பது ஒரு சமா­தா­ன­மான, சகிப்­புத்­தன்­மை­யுள்ள, பன்மைத்­தன்­மையை அங்­கீ­க­ரிக்­கின்ற, வேறு­பா­டு­களை சமா­தா­ன­மான முறை­களில் தீர்த்துக் கொள்ளும் ஒரு மார்க்கம் என்­ப­தனை நாம் தொடர்ந்தும் உறு­திப்­ப­டுத்­துவோம். 

இச்­சட்­டத்தைப் பொறுத்­த­ளவில் இது நீக்­கப்­படல் வேண்டும் என்று பெண்கள் குழுக்கள் பரிந்­து­ரைக்­க­வில்லை. பெண்­க­ளதும், சிறு­மி­க­ளதும் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டக்­கூ­டிய வகையில்  இது சீர்­தி­ருத்­தப்­படல் வேண்டும் என்­ப­த­னையே இவை கோரு­கின்­றன.

எத்­த­கைய சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­படல் வேண்டும் என்­பது தொடர்­பாக சமூ­கத்துள் இருக்கும் வேறு­பட்ட கருத்­துக்­க­ளுக்கு நாம் மதிப்­ப­ளிக்­கின்றோம். எவ்­வா­றெ­னினும் சட்­டத்­தி­ருத்தம் ஏற்­பட வேண்டும் என்­பதில் பரந்­த­ள­வி­லான ஏற்­பு­டைமை காணப்­ப­டு­கின்­றமை கவ­னிக்­கத்­தக்­கது. எனவே நாம் சமூ­கத்­தி­லுள்ள அனைத்து மார்க்க மற்றும் சிவில் சமூக அமைப்­புக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து பரந்­து­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட அழைப்பு விடுக்­கின்றோம்.

இதன்­மூலம் எத்­த­கைய சீர்­தி­ருத்தத்தினை மேற்­கொள்­வது என்­பது தொடர்­பான இணக்­கப்­பாட்­டிற்கு வர­மு­டியும். 

இறு­தி­யாக, முஸ்லிம் பெண்­களின் உரி­மைக்­காக தம் உயிரை பணயம் வைத்து அய­ராது பாடு­ப­டு­கின்ற இந்த பெண்கள் செயற்­பாட்­டா­ளர்­களின் அரிய பணி­யினை நாம் அங்­கீ­க­ரிக்­கின்றோம். இவர்கள், எமது சமூ­கத்தின் சில பகு­தி­களின் தரத்தை உயர்த்த உத­வு­வ­தற்­காக தம் வாழ்க்­கை­யினை அர்ப்­ப­ணித்­துள்­ள­துடன் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் மற்றும் முஸ்­லிம்­களின் சமய, அர­சியல், சிவில், சமூக மற்றும் பொரு­ளா­தார உரி­மை­க­ளுக்­கா­கவும் பிரசாரம் செய்து வருவதுடன் அதற்காக ஆதரித்து வாதாடியும் வருகின்றனர். 

இஸ்­லாத்தின் பெய­ரா­லான எந்­த­வொரு வன்­மு­றை­யையும் அல்­லது இழி­வான நடத்­தை­க­ளையும்  அல்­லது அச்­சு­றுத்­த­லையும் நாம் ஆத­ரிக்­கவோ அல்­லது  அலட்­சி­யப்­ப­டுத்­தவோ போவ­தில்லை.

இத்­த­கைய செயல்­களில் ஈடு­ப­டு­ப­வர்­களை உட­ன­டி­யாக அவற்றை நிறுத்­தும்­ப­டியும், இந்த சட்ட சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களில் ஜன­நா­யக ரீதி­யா­கவும், கருத்­தொ­ரு­மித்தும் இணைந்து கொள்ளும் படியும் கேட்டுக் கொள்­கின்றோம் என அதில்  மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­து.

 


முஸ்லிம் பெண்­க­ளு­க்கு தொடர் அச்­சு­றுத்­தல்கள் ! முஸ்லிம் பெண்­க­ளு­க்கு தொடர் அச்­சு­றுத்­தல்கள் ! Reviewed by Madawala News on 11/17/2016 11:13:00 AM Rating: 5