Accaddemy

அடிப்படை உண்மைகள் அற்ற வதந்திகளை பரப்பவோ நம்பவோ வேண்டாம் !


அடிப்படை உண்மைகள் அற்ற செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவதில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் வட்சப் மற்றும் சமூக வலைகளில் அடைப்படை உண்மைகள் அற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக ( குறிப்பாக கிருலப்பனை, மாளிகாவத்தை பகுதிகளில் பதற்ற நிலை என்ற தகவல்) தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் இது தொடர்பில் நாம் பாதுகாப்பு தரப்பு மற்றும் அரச உயர்மட்டங்களில் விசாரித்த போது நாட்டில் எப்பிரதேசத்திலும் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.

மேலும் நாம் சற்றுமுன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது யாரும் அச்சப்படும் வகையில் எது வித சமப்வங்களும் இடம்பெறவில்லை என குறிப்பிட்டதுடன் சிவில் பாதுகாப்பை உறுதி செய்ய விஷேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அடிப்படை உண்மைகள் அற்ற வதந்திகளை பரப்பவோ நம்பவோ வேண்டாம் ! அடிப்படை உண்மைகள் அற்ற வதந்திகளை பரப்பவோ நம்பவோ வேண்டாம் ! Reviewed by Madawala News on 11/16/2016 09:36:00 PM Rating: 5