அம்பாறை மாவட்ட விவசாயிகளின் காணி விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிட வேண்டும்..


(அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்)
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமத்தை உரியவர்களுக்கு வழங்கத் தேவiயான நடவடிக்கையினை ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று (28) கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்படி வேண்;டுகோளை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

புலிகளின் பயங்கரவாத பிரச்சினை இருந்த காலப்பகுதியில் கூட நெற் செய்கையினை மேற்கொண்ட அம்பாறை மாவட்ட விவசாயிகளின் விவசாய காணிகளில் தற்போது விவசாயம் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. வன இலாகா மற்றும் வனவிலங்கு இலாகா போன்ற திணைக்களங்கள் விவசாயக் காணிகளை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அம்மக்கள் தமது காணிகளில் விவசாயம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நான்கு தசாப்தத்திற்கு மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த வயல் நிலங்களான பொத்துவில்  வேகாமம் வட்டை, பாலையடி வட்டை, கிரான் கோமாரி வட்டை, ஒலுவில் அஷ்ரஃப் நகர், சம்மாந்துறை பொன்னென்வெளி வட்டை, அம்பலத்தாறு, நுரைச்சோலை, ஒமரங்காவட்டை, கீத்துபத்து வட்டை போன்ற வட்டைகள் மேற்குறித்த திணைக்களங்களினால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால பல்லாயிரக்கணக்கான அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம்; பாதிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக  காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் ஏற்பாட்டில்   அம்பாறை மாவட்டத்தில் மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி அம்மக்கள் வீதிக்கு இறங்கி கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று முந்தினம் (27) அட்டாளைச்சேனையில் நடத்தினர். அவ்விடத்திற்கு நேரில் சென்று அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தேன்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்பட்ட காணிகளைக் கூட விடுவித்து காணி உரிமையாளர்களுக்கு இந்த அரசு வழங்கியிருக்கின்றது. இருந்த போதிலும் யுத்த காலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட தமது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று மிகுந்த கவலையினை எம்மிடம் வெளியிட்டனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் எங்களின் பிரச்சினைக்கு அம்பாறை மாவட்ட செயலகம் எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் கவலையாக தெரிவித்தனர்.  

பல்லாண்டு காலமாக நெற்செய்கையினை மேற்கொண்டு வந்துள்ள காணிகளில் நெற்செய்கை மேற்கொள்வதை கடந்த ஒரிரு வருடங்களாக யுதத்திற்கு பின்பு தடுத்துள்ளார்கள். இதனால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாது போயுள்ளது. இது நாட்டின் பொருளாதார வலர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதோடு இது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை என்பதனால் இக்காணிகளில் நெற்செய்கையினை மேற்கொள்வதற்கான உரிமையினை காணிச் சொந்தக் காரர்களுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கையினை ஜனாதிபதி மறறும் பிரதமர் எடுக்க வேண்டுமென இச்சபையில் வேண்டுகோள் விடுப்பதாக பிரதி அமைச்ச்ர் தெரிவித்தார். 
அம்பாறை மாவட்ட விவசாயிகளின் காணி விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிட வேண்டும்.. அம்பாறை மாவட்ட விவசாயிகளின் காணி விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் தலையிட வேண்டும்.. Reviewed by Madawala News on 11/29/2016 11:28:00 PM Rating: 5