Accaddemy

நெலுந்தெனிய பௌத்தர்களும் முஸ்லீம்களும் மகிழ்ச்சி ...


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நெலுந்தெனிய பள்ளிவாயல் மீது  உள்ளூர் தயாரிப்பு வெடி குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான செய்தி மடவளை நியுஸில் வெளியாகி இருந்ததை தொடர்ந்து.

குறித்த தினம் அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பள்ளிவாயல் நிருவாக சபையினருடன் கலந்துரையாடியுள்ள போது,

பள்ளிவாயலின் அவசர தேவையான பாதுகாப்பு கமராக்கள் தொகுதியை பெற்றுதருமாறு பள்ளிவாயல் நிருவாக சபையின் கோரிக்கைக்கு அமைவாக அதனை பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து நெலுந்தெனிய ரஜமஹா விகாரையின் பிரதம தேரரை சந்தித்துள்ள அமைச்சர் பிரதேசத்தின் இன நல்லுறவு  தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அதன் போது புராதன முக்கியத்துவம் வாய்ந்த நெலுந்தெனிய ரஜமஹாவிகாரைக்கும் பாதுகாப்பு கமராக்களை பெற்றுதருமாறு தேரர் விடுத்த கோரிகையை  தொடர்ந்து அதனையும் தான் பெற்றுத்தருவதாக உறுத்தியளித்துள்ள அமைச்சர் இன்று தனது சொந்த நிதியில் இரு மத ஸ்தானங்களினதும் கோரிக்கையை இன்று நிறைவேற்றி தந்ததாக நெலுந்தெனிய பள்ளிவாயல் நிருவாக சபை செயளாலர் ஜனாப் பைசல் குறிப்பிட்டார்.

ஒரே சமயத்தில் பள்ளிவாயலுக்கும் விகாரைக்கும் பாதுகாப்பு கெமராக்களை பெற்றுக்கொடுத்துள்ளமை அங்குள்ள பௌத்தர்களையும்  மகிழ்ச்சியடைய செய்துள்ளதாக குறிப்பிட்ட  அவர் இன்றையை தினம் அமைச்சர் சார்பாக அவரின் கண்டி மாவட்ட இணைப்பாளர் லக்சல நிறுவத்ததின் பணிப்பாளர் ரியாஸ் இஸ்ஸடீன் மற்றும் மடவளை அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் பிரமுகர்களான NICD பணிப்பாளர்  எம் எஸ் எம் றிஸ்மி , உள்ளிட்டோர் நெலுந்தெனியவுக்கு விஜயம் செய்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


 


 


 



நெலுந்தெனிய பௌத்தர்களும் முஸ்லீம்களும் மகிழ்ச்சி ... நெலுந்தெனிய பௌத்தர்களும் முஸ்லீம்களும் மகிழ்ச்சி ... Reviewed by Madawala News on 11/10/2016 05:17:00 PM Rating: 5