Kidny

Kidny

சிரிகொத்த கலந்துரையாடலில் கபீர் ஹஷீமுக்கு கடும் எதிர்ப்பு ..


ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அக்கட்சியின் பொது செயளாலர் அமைச்சர் கபீர் ஹஷீமுக்கு அக்கட்சி மாகாண சபை உறுப்பினர்களால் கடும் எதிர்ப்பும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் வருடம் தேர்தல் ஒன்று இடம்பெறும் சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் இலங்கை  பூராவும் உள்ள ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கொழும்புக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 150க்கும் அதிகமான ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டம் ஆரம்பமானது முதல் அக்கலந்துரையாடலை தலைமை தாங்கி நடத்திய அமைச்சர் கபீர் ஹஷீமுக்கு எதிராக கடும் அதிருப்தியும் விமர்சனமும் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கு கருத்து வெளியிட்டுள்ள சில மாகாண சபை உறுப்பினர்கள் தங்களால்  கபீர் ஹஷீமை அவசர தேவை ஒன்றுக்கு தொலைபேசியில் கூட பிடிக்க முடியாத நிலை உள்ளதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சனம் செய்துள்ள அதேவேளை கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட அனைவரையும் கட்சி கைவிட்டு விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

கூட்டங்களுக்கும் ஊர்வலத்துக்கும் ஆட்கள் தேவைப்படும் போதும் தேர்தல் ஒன்று நெருங்கும் போதும்  மாத்திரமே தாங்களை கட்சிக்கு தேவைப்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ள சில உறுப்பினர்கள் கட்சி பொது செயளாலர் பதவியை வகிக்க கபீர் ஹஷீம் எதுவித தகுதியற்றவர் என்று கடுமையாக விமர்சித்துள்ள அதேவேளை அவரை உடனடியாக பதவி விலகுமாறும் கூறியுள்ளனர்.

இந்தநிலை தொடரவே கூட்டம் கடைசியில் கைவிடப்பட்டுள்ளதாக சிரிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிரிகொத்த கலந்துரையாடலில் கபீர் ஹஷீமுக்கு கடும் எதிர்ப்பு .. சிரிகொத்த கலந்துரையாடலில் கபீர் ஹஷீமுக்கு கடும் எதிர்ப்பு .. Reviewed by Madawala News on 11/03/2016 04:08:00 PM Rating: 5