வெளி நாடுகளில் வாழும் எனது அன்புக்குரிய உறவுகளே...




வெளி நாடுகளில் வாழும் எனது அன்புக்குரிய உறவுகளே...
அஸ்ஸலாமு அலைக்கும்,

எமது தாய் நாட்டில் இன்றைய கால கட்டத்தில் நிகழ்ந்து வரும் எமது சமூகத்துக்கு எதிராக நடாத்தப்பட்டு வரும் சம்பவங்களின் செய்திகளை உடனுக்குடன் வாசித்தது விடுவதால் மட்டும் அங்கே அச்சத்துடன் தமது பொழுதுகளை கழிக்கின்ற எமது உறவுகள் மீதான எமது கடமை முடிந்து விடுவதில்லை. செய்திகளை வாசித்து அங்கே என்ன நடக்கிறது என்பதை அங்குள்ளோர்களை விட மிக வேகமாக அறிந்து கொள்கிறோம்.

ஆனால் அவர்கள்  மீதான எமக்கு இருக்கும் கடமை பற்றிச் சிந்திக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். நடைமுறையில் கருத்து, எழுத்து, பேச்சு என எல்லா சுகந்திரங்களையும், உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளில் வாழும் எமக்கு சற்று அதிகமான கடமையும், பொறுப்பும், இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

அடுத்த பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்ற பதற்றத்துடன் வாட்சப், Inbox, மற்றும் தொலைபேசி மூலமாக எம்மை தொடர்பு கொள்பவர்கள் எம்மிடம் இந்த தருணத்தில் எதிர்பார்ப்பது காசு, பணத்தை அல்ல மாறாக வெளி நாடுகளில் இருந்து உங்களால் என்ன செய்ய முடியும் என்பது பற்றி மட்டுமே.

அநீதிகளுக்கு எதிராக எமக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியிருக்கும் சக்திகளையும், சுகந்திரத்தையும், சந்தர்ப்பங்களையும் கட்சி, இயக்க வேறுபாடுகளை மறந்து புலத்தில் வாழும் எல்லோரும் ஒன்றிணைந்த ஒரே குரலாக முன்னெடுக்க முன்வருமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மிக விரைவில் இது சம்பந்தமாக ஒரு விஷேட கலந்துரையாடல் ஒன்று  ஜெனீவாவில் அல்லது ஒரு ஐரோப்பிய நகரொன்றில் நடாத்தப்படும் என்ற தகவலையும் இத்தால் அறியத்தருகிறேன்.

முயிஸ் வஹாப்தீன்
திட்ட பணிப்பாளர்,
மனித உரிமைக்கும், சமாதானத்துக்குமான சர்வதேச நிலையம்,
ஜெனீவா,
சுவிட்சர்லாந்து. 
வெளி நாடுகளில் வாழும் எனது அன்புக்குரிய உறவுகளே... வெளி நாடுகளில் வாழும் எனது அன்புக்குரிய உறவுகளே... Reviewed by Madawala News on 11/21/2016 12:29:00 AM Rating: 5