மஹிந்த ராஜபக்‌ஷ தலமையில் உண்மையான நல்லாட்சி மலர வேண்டும் ...


(பழுலுல்லாஹ் பர்ஹான்)
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71வது பிறந்த தினத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி ஒருங்கிணைப்பாளர் முபாறக் வாழ்த்து.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 71வது பிறந்த நாள் வாழ்த்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி ஒருங்கிணைப்பாளர் வி.ரி.எம்.முபாறக் ஜேபி  தெரிவித்துள்ளார்.

இப் பிறந்த நாள் வாழ்த்து செய்தி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் .

எமது தாய்நாடான இலங்கைத் திருநாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 71வது வயதில் காலடி எடுத்து வைக்கும் 18-11-2016 இந்நாளில் எனது பிறந்த தின வாழ்த்தினை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், ஆசியாவின் சொர்க்க புரியாக வர்ணிக்கப்படும் எமது தாய்நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்று வந்த கொடிய யுத்த்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து,இலங்கை மக்கள் பயம், அச்சமின்றி நிம்மதியாக வாழ வழி செய்ததோடு யுத்தம் காரணமாக அழிவடைந்திருந்த எமது நாட்டை பாரிய அபிவிருத்திகள் மூலம் கட்டியெழுப்பி சர்வதேசத்தின் கட்டளைகளுக்கு அடிபணியாமல் செயல்பட்ட எமது முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதியாக மட்டுமல்லாது அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சி தலைவராக, அமைச்சராக பிரதம அமைச்சராக பதிவி வகித்து நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட பெரும் தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

18ஆம் திகதி தனது 71வது வயதில் காலடி எடுத்துவைக்கும் எமது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீண்ட ஆயுளோடும், நிறைந்த தேக ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து, எதிர்காலத்தில் அவரின் பங்குபற்றுதலோடு இலங்கை மக்களுக்கான உண்மையான நல்லாட்சி ஒன்று எமது நாட்டில் மலர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மஹிந்த ராஜபக்‌ஷ தலமையில் உண்மையான நல்லாட்சி மலர வேண்டும் ... மஹிந்த ராஜபக்‌ஷ தலமையில் உண்மையான நல்லாட்சி மலர வேண்டும் ... Reviewed by Madawala News on 11/17/2016 02:01:00 PM Rating: 5