Ad Space Available here

மிக வெற்றிகரமாக நடைபெற்ற இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளின் ஜெனீவா சந்திப்பு..


மேற்குலக மதச் சார்பற்ற ஜனநாயக (WESTERN SECULAR DEMOCRACY) சூழலில் வாழுகின்ற பல மில்லியன் முஸ்லிம்களின், மிகச் சிறிய தொகை இலங்கை முஸ்லிம்கள் இந்த ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமது தாய் நாட்டுடனான இணைப்பிலும், அங்கு நடைபெறுகின்றன விடடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதிலும் ஆர்வமிக்கவர்களாகத் திகழ்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தமது உறவுகளை விட்டு வாழ்ந்தாலும், தமது சொந்த நாட்டின் மீதும், சமூகத்தின் மீதும் மிகவும் இறுக்கமான உறவுகளை பேணி வாழ்ந்து வருகின்றனர்.

அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளின் போது மிகவும் கரிசனையுடன், அநீதிகளுக்கு எதிராக தாம் வாழும் நாடுகளின் அமைப்புக்களுடன் இணைந்தும், தனித்தும், தம்மால் இயலுமான விதங்களில் தமது பங்களிப்பை செய்து வருகின்றனர்.

இக்கால கட்டத்தில் வெளி நாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இயங்க வேண்டும் என்ற சிந்தனை பலராலும் உணரப்பட்டு, பேசப்பட்டு, வலுப்பெற்றுள்ளது. ஒரு இனத்துக்கு எதிராக செயல் படும் சக்திகளுக்கு எதிராக புலத்தில் வாழும் மக்களின் அரசியல், ராஜதந்திர, ஜனநாயக ரீதியாக கொடுக்கப்படும் அழுத்தங்களானது உள்ளூரில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விட பல மடங்கான தாக்கத்தை செலுத்துகின்றது.

எமது நாடே முதன்மையானது என்ற தேச உணர்வோடும், உரிமையோடும், ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து தற்போழுது வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள், நாட்டின் நலனுக்கோ, எம்மோடு என்றுமே அன்போடும், ஆதரவோடும் பழகும் பெரும்பான்மையான பெரும்பாண்மை இனச் சகோதர்களுடனான உறவுகளுக்கோ, கிஞ்சித்தேனும் பாதகம் வாராத விதத்தில் நன்கு திட்டமிடப்பட்டு ஒன்றிணைந்த ஒரே குரலாக வெளி நாடுகளில் வாழும் எல்லா இலங்கை முஸ்லிம்களை ஒன்றிணைத்த அமைப்பொன்றை உருவாக்குவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்திருந்தது.

அல்லாஹ்வின் கிருபையால் இந்த அமர்வு பெரும் வெற்றியையும், உத்வேகத்தையும், தந்தது, மிக குறுகிய கால அறிவித்தலில் பேரில் ஐரோப்பாவின் பல நாடுகளிருந்து வந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள் இந்த திட்டம் அதன் இலக்கை அடையும் வரை தாம் பூரண அர்ப்பணிப்புடன் செயல் படுவதாக ஏக மனதாக உறுதி அளித்தனர். தாம் சார்ந்திருக்கும் இயக்க, கட்சி வேறுபாடுகள் இந்த அமைப்புக்கு எந்த விதத்திலும் பாதிக்காத, செல்வாக்குச் செலுத்தாத ஒரு பொறிமுறையூடாக கொள்கையொன்றை வகுத்து பொது இலக்கை நோக்கிச் செயலாற்றும் தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

எல்லோரையும் ஒன்றிணைத்த, அரவணைத்த, பொது இலக்கை நோக்கி நீண்ட கால திட்டங்களுடன் முன்னேறிச் செல்லும் ஒரு சமூகமாக மாற்றம் பெற வேண்டும் என்ற உணர்வையும், உரையாடல்களையும், உருவாக்கி ஒற்றுமைப்பட வேண்டியது காலத்தின் தேவையாகி விட்டது.

உலகின் நாலா பாகங்களிலுமாக பரந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா, ஆபிரிக்கா, அமேரிக்கா, அவுஸ்திரேலிய, நாடுகளில் வாழும் உணர்வும், உட்சாகமுள்ள இலங்கை முஸ்லிம்களை இந்த உத்தேச ஒன்றிணைந்த அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.

ஆர்வமுள்ளவர்களும், மேலதிக தொடர்புகளுக்கும், இந்த Whatsapp இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்: 0033 65 177 80 78 அல்லது INBOX மூலம்.

- ஒன்றிணைந்து செயலாற்றுவோம் -

-முயிஸ் வஹாப்தீன்-
மிக வெற்றிகரமாக நடைபெற்ற இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளின் ஜெனீவா சந்திப்பு.. மிக வெற்றிகரமாக நடைபெற்ற இலங்கை முஸ்லிம் பிரதிநிதிகளின் ஜெனீவா சந்திப்பு.. Reviewed by Madawala News on 11/29/2016 09:58:00 AM Rating: 5