Free Space

ஆவா குழு தொடர்பில் ராஜித கூறிய கருத்துக்கு கோத்தா பதில் ...


வடக்கில் இயங்கும் ஆவா குழு தொடர்பில் தன்னை தொடர்புபடுத்தி கூறுவது முழு ரானுவத்தையே அவமானப்படுத்தும் செயல் என முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித ..


வடக்கில் இயங்கும் "ஆவா" எனப்படும் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு தெரிந்தே உருவாக்கப்பட்ட கொள்ளைக் குழு எனவும் குறித்த குழுவினர் இன்று வரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் தேவைகளுக்கு அமையவே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் குறித்த குழுவை கட்டியெழுப்பிய பிரிகேடியரை தனக்குத் தெரியும் எனவும் அவர் கூறியுள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்துக்களுக்கு பதில் அளித்துள்ள அவர் அமைச்சரின் தன்னை அவமானப்படுத்துவாதாக நினைத்து முழு ரானுவத்தையும் அவமானப்படுத்துவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆவா குழு தொடர்பில் ராஜித கூறிய கருத்துக்கு கோத்தா பதில் ... ஆவா குழு தொடர்பில் ராஜித கூறிய கருத்துக்கு கோத்தா பதில் ... Reviewed by Madawala News on 11/03/2016 07:29:00 AM Rating: 5