முன்னாள் இந்நாள் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் முகவராக ரனில் !


கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற  தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் சகல விதமான ஊழல் மோசடிகளையும் மூடி மறைக்கும் பிரதான முகவராக ரனில் விக்ரமசிங்க செயற்படுவதாக  எல்மக்கள் விடுதலை முன்னணி தலைவர் குற்றம்சாட்டியுள்ளது.

இன்று காலியில் நடைபெற்ற மக்கள்  சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்

சட்டத்தை செயற்படுத்தும் நிறுவனங்களிலுள்ள அதிகாரிகளை தைரியமிழக்கச் செய்யும் பணியை அரசாங்கம் செய்துகொண்டுள்ளது.

பிரதமர் ரனில் விக்ரமசிங்க தனது பதவியையும் பலத்தையும் தக்கவைத்து கொள்வதற்காக ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.

அவர் தொடர்ந்து பதவியில் இருக்கவேண்டும் என்றால் சுதந்திர கட்சி இரண்டாக பிளவுபெற வேண்டும் அதற்கான கொந்தாராத்தை ராஜபக்‌ஷ குடும்பம் ஏற்றுள்ளது. அதற்கு கைமாறாக அவரது குடும்பத்தை பிரதமர் பாதுகாக்கிறார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் இந்நாள் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் முகவராக ரனில் ! முன்னாள் இந்நாள் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் முகவராக ரனில் ! Reviewed by Madawala News on 11/02/2016 09:14:00 PM Rating: 5