விஜேதாச ராஜபக்‌ஷ உருவத்தில் இன்று இனவாதி சம்பிக்க வெளிப்பட்டுள்ளார்...


நீதி அமைச்சர் விஜேதாச உருவத்தில் இன்று பாராளுமன்றத்தில் சம்பிக்க ரணவக்க வெளிப்பட்டுள்ளதாக பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர்  இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

நீதி அமைச்சர் விஜேதாச உருவத்தில் இன்று பாராளுமன்றத்தில் சம்பிக்க ரணவக்க வெளிப்பட்டுள்ளார்.

நல்லாட்சிக்காக வாக்களித்த மக்களை திருப்திபடுத்துவதை புறந்தள்ளிவிட்டு இந்த அரசாங்கம் தற்போது பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்த வெளிக்கிழம்பியுள்ளது.

தற்போது அரசு தங்களது உண்மையான முகத்தை காட்டத் துவங்கி  இந்த நாட்டின் சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று அவர்களை புறந்தள்ளி நடக்கிறது. 

இந்த அரசாங்கம் வாக்களித்த முஸ்லீம்களை புறக்கணித்துவிட்டு   பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்தும் செயற்பாடுகளை மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளது.இவை அனைத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலிலேயே இடம்பெறுகிறது. நல்லாட்சிக்கு பின்னால் இருக்கும் சம்பிக்க போன்ற கடும்போக்காளர்களின்  நிகழ்ச்சி நிரலே இப்போது திரைக்கு வந்துள்ளது.

கடந்த காலங்களில் ஹலால் பிரச்சினை முதல் ஹிஜாப் வரை முஸ்லீம்கள் தொடர்பில் பலதரப்பட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த சம்பிக்க ரணவக்கவின் திட்டங்களே மெல்ல மெல்ல தற்போது திரைக்கு வந்துகொண்டுள்ளது.

இலங்கையில் இயக்க செயற்பாடுகள் முரண்பாடுகள் பல தசாப்தங்களாக இடம்பெறுகிறது ஆனால் இன்று அவை ஒரு பாரிய விடயமாக அதாவது இரு தீவிரவாதம் போன்று பாராளுமன்றத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதில் மிகப்பயங்கரமான விடயமாக முஸ்லீம் இனவாத குழுக்கள் இலங்கையில் இருப்பதாகவும் பேருவளை கல்முனை குருநாகல் கல்லெலியா போன்ற இடங்களில் வெளிநாட்டு போதகர்களால் முஸ்லீம் மாணவர்களுக்கு அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக கூறியுள்ளதானது  இலங்கை முஸ்லீம்களை தீவிரவாதிகள் அளவுக்கு சித்தரித்து பர்மாவில் நடப்பதை போல அரசாங்கமே முஸ்லீம்களை ஒடுக்கும் ஒரு திட்டமாகவே இதை நாம் பார்க்கவேண்டியுள்ளது.

இன்று விஜேதாச உருவத்தில் பேசியது சம்பிக்க ரணவக்க என்பதை எமது சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.இலங்கையில் முஸ்லீம்களின் முதல் எதிரியான சம்பிக்க ரனவக்க இன்று அரசாங்கத்தின் முக்கிய இடத்தில் மவுனமாக அமர்ந்து கொண்டு தனது காய் நகர்த்தல்களை செய்துகொண்டுள்ளார்.

அதனால் தான் அலுத்கம கலவரத்தின் சூத்திரதாரி ஞானசார தேரரை கைது செய்யாமல் சுதந்திரமாக நடமாட விட்டுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி பக்கம் முஸ்லீம்கள் மீண்டும் செல்ல முற்பட்டால் ஞானசாரரை வைத்து குழப்பங்களை ஏற்படுத்தும் திட்டமே இவர்களிடம் உள்ளது.
அதனால் தான் அவருக்கு எதிராக எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை.

முஸ்லீம்கள் கொண்டுவந்த இந்த நல்லாட்சி இனவாத செயற்பாடுகளை நிறுத்துவதற்க்கு நடவடிக்கை எடுப்பதை விடுத்து மஹிந்த ராஜபக்‌ஷ மீது தொடர்ச்சியாக பலிபோடுவதிலும் குறைகூறுவதில் எதுவித பலனும் ஏற்படப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார்.



விஜேதாச ராஜபக்‌ஷ உருவத்தில் இன்று இனவாதி சம்பிக்க வெளிப்பட்டுள்ளார்... விஜேதாச ராஜபக்‌ஷ உருவத்தில் இன்று இனவாதி சம்பிக்க வெளிப்பட்டுள்ளார்... Reviewed by Madawala News on 11/18/2016 09:14:00 PM Rating: 5