ஐ எஸ் தொடர்பில் விஜேதாச ராஜபக்‌ஷ வெளியிட்ட கருத்துக்களை கண்டிக்கிறோம் : ஶ்ரீ லங்கா முஸ்லீம் கவுன்சில் ...


பாராளுமன்றில் இன்ற நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச ஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர் இணைந்ததாக தெரிவித்த தகவலை மறுத்துள்ள முஸ்லிம் கவுன்சில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஒரு வருடம் பழமையான விடயத்தை இக்கட்டான ஒரு கால கட்டத்தில் வெளியிட்டு தவறான தோற்றப்பாட்டை உருவாக்க முயற்சித்திருக்கின்றமை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள முஸ்லிம் கவுன்சில், ஏலவே இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போதியளவு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் அப்துர் ராசிக்கின் பேச்சுக்கள் தொடர்பில் ஏக காலத்தில் முஸ்லிம் சமூகம் கண்டனத்தை வெளியிட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நாட்டில் மீண்டும் தலைதூக்கி வரும் நிலையில் அரசு அதற்கெதிரான காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும்  வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஐ எஸ் தொடர்பில் விஜேதாச ராஜபக்‌ஷ வெளியிட்ட கருத்துக்களை கண்டிக்கிறோம் : ஶ்ரீ லங்கா முஸ்லீம் கவுன்சில் ... ஐ எஸ் தொடர்பில் விஜேதாச ராஜபக்‌ஷ வெளியிட்ட கருத்துக்களை கண்டிக்கிறோம் : ஶ்ரீ லங்கா முஸ்லீம் கவுன்சில் ... Reviewed by Madawala News on 11/19/2016 09:53:00 AM Rating: 5