Accaddemy

நல்லாட்சி அரசின் நல்ல நகர்வு ! பொதுபல சேனா நீதி அமைச்சர் சந்திப்பு நடந்தது இதுதான் ...

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானாசர தேரர் உள்ளிட்டகுழுவுகுன்ம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கும் இடையேயான முக்கிய கலந்துரையாடல்  நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இடம்பெற்ற நிலையில் குறித்த கலந்துரையாடல் சற்று முன்னர் நிறைவுக்கு வந்ததுள்ளது.

தேரர்கள் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுக்களை கேட்டரிந்துகொண்ட நீதி அமைச்சர் தரப்பு தற்போது தோன்றியுள்ள நிலமை தொடர்பில் சுமுகமான இணக்கம் ஒன்றை பெற்றுக்கொள்ள சர்வமத ( போரம் ) குழு ஒன்றை நியமிப்பதாக யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

உத்தேச சர்வமத போரம் ஊடாக தற்போது ஏற்பட்டுள்ள மத பிணக்குகளை கலந்தாலோசித்து  தீர்த்துவைக்கும் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதாகவும் நீதி அமைச்சர் தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக விரைவில் பௌத்த , ஹிந்து, முஸ்லீம்,கிரிஸ்தவ மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத குருக்கள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய போரம் ஒன்றை உறுவாக்குவதாக இருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்துள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவையில் கூட முஸ்லிம் அமைச்சர்கள் ரிஷாத் , ஹலீம் , கபீர் உள்ளிட்டவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கையாள்வதற்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான அவசியத்தை வழியுறுத்தியுள்ளனர்.


நல்லாட்சி அரசின் நல்ல நகர்வு ! பொதுபல சேனா நீதி அமைச்சர் சந்திப்பு நடந்தது இதுதான் ... நல்லாட்சி அரசின் நல்ல நகர்வு ! பொதுபல சேனா நீதி அமைச்சர் சந்திப்பு நடந்தது இதுதான் ... Reviewed by Madawala News on 11/22/2016 05:32:00 PM Rating: 5