பெஷன் பக் விசாரனைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ...


பெஷன் பக் தீ சம்பவம் தொடர்பான விசாரனைகள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழஙகப்பட்டுள்ளதாக அரச தரப்பு உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் இரு நாசகார செயலாக இருக்கலாம் என பரவலாக சந்தேகங்கள் வெளியாகியுள்ள நிலையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விசாரனைகளுக்காக அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்கள உதவியும் பெறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் அலுத்கம முஸ்லீம் வர்தகருக்கு சொந்தமான மல்லிகாஸ் தீப்பிடித்த போது மாதிரிகளை பெற்று சென்ற அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களம் இதுவரை அந்த அறிக்கையை வழங்கவில்லை எனபதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..
பெஷன் பக் விசாரனைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ... பெஷன் பக் விசாரனைகள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ... Reviewed by Madawala News on 11/20/2016 04:22:00 PM Rating: 5