Ad Space Available here

நாட்டில் இனவாதத்தை தூண்ட இவர்கள் இருவரும் போதும்...இந்த நாட்டில் இனவாதத்தை முன்னெடுத்து செல்ல சேனாக்களோ தேரர்களோ டன்களோ தேவையில்லை அமைச்சார்களான  தயா கமகே மற்றும் விஜேதாச ராஜபக்‌ஷவும்  போதுமானாவர்கள் என பானதுறை முன்னாள் பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இந்த நாட்டில் இனவாதத்தை முன்னெடுத்து செல்ல சேனாக்களோ தேரர்களோ தேவையில்லை அமைச்சார்களான  தயாகமகே மற்றும் விஜேதாச ராஜபக்‌ஷவும்  போதுமானாவர்கள். அப்போது இலங்கையர்கள் யாரும் ஐ எஸ் உடன் தொடர்பு வைத்திருக்கவில்லை என கோத்தாபய ராஜபக்‌ஷ கூறினார் ஆனால் இன்று இருபடி மேலே போய் நீதி அமைச்சர் இலங்கையில் முஸ்லீம்களுக்கு அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.தஹ்வா அமைப்புகளை தீவிரவாத குழுக்கள் அளவுக்கு விமர்சனம் செய்துள்ளார்.இனவாதம் பேசுபவர்களின்  வாய்க்கு இது அவல் கொடுத்து போல் உள்ளது.

மேலும் கடந்த வாரம் சிலை வைப்பு  விவகாரத்தில் தயா கமமே மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டார்.அவர் பிரதமரின் நெருங்கிய நண்பர்.இது வரை பிரதமர் அல்லது ஜனாதிபதியோ தயாவின் கருத்தை கண்டிக்கவில்லை.

மேலும் முன்னைய அரசாங்கத்தில்  முஸ்லீம்களின் வியாபாரத்தை மஹிந்த ஒடுக்கியதாக பலர் குற்றம் சுமத்தினார்கள்.நோலிமிட், பெஷன் பக் , ஹார்கோட்ஸ் , டைன்மோ ,ஹமீடியா  என இன்னும் பலதரப்பட்ட நிறுவனங்கள் மஹிந்த அரசிலேயே  தேசிய அளவில் வளர்ச்சி அடைத்தன.

முஸ்லீம் வர்த்தக நிலையங்களை ஒழித்துக்கட்டும்  நிகழ்ச்சி நிரலை மஹிந்த மீது பலியை போட்டு சம்பிக்க உள்ளிட்ட ஹெல உறுமய குழுவே மேற்கொண்டது.

மஹிந்த மற்றும் கோத்தா முஸ்லீம் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்றதாய் கதை பரப்பினார்கள். 

அது அப்போது எமது சமூகத்துக்கு விளங்கவில்லை இப்போதும் முஸ்லீம் வர்த்தக நிலையங்களுக்கு எதிரான சதிகள் தொடர்ந்து கொண்டுள்ளன.முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் தீ வைக்கப்படுகின்றன.இவற்றை எல்லாம் நல்லாட்சி  வேடிக்கை பார்த்துகொண்டுள்ளது.

அதற்கான காரணம் மிக தெளிவானது.அந்த நிகழ்ச்சி நிரலின் சூத்திரதாரி சம்பிக்க உள்ளிட்டவர்கள் நல்லாட்சியில் உள்ளனர்.

இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான நிகழ்சி நிரலை இந்தியாவின் ரோ மேற்கொள்கிறது. இலங்கையின் முக்கிய ரோ முகவராக சம்பிக்க ரணவக்கவே வேலை செய்கிறார். முன்னாள்  இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம்  இலங்கை வந்த போது சம்பிக்க ரனவக்கவே  இங்கு அவருக்கு கம்பணி கொடுத்து அவரை தூக்கிக்கொண்டு திரிந்தார். அப்போது சம்பிக்க ரணவக்க வெளிநாட்டு அமைச்சராகவோ உள்துறை அமைச்சராகவோ இருக்கவில்லை.ரோ உடனான உறவின் காரணமாகவே சம்பிக்க ரணவக்க இந்தியாவின் பாதுகாப்பு சபை உறுப்பினரும் ரோ வின் முக்கிய உறுப்பினருமான முன்னாள் இந்திய ஜனாதிபதி  அப்துல் கலாமை தூக்கிக்கொண்டு செல்ல வைத்தது.

அதற்கும் மேலாக பிரதமரும் ஐரோப்பிய அமெரிக்க இஸ்ரேலிய ஊது குழலாக உள்ளார்.இதுவும் இலங்கை முஸ்லீம்களுக்கு மிக  ஆபத்தான விடயம்.

முன்னர் இலங்கை மாணிக்க வர்த்தகர்களுக்கு 200 டொலர் வரி செலுத்து மாணிக்க கற்களை இறக்குமதி அந்த முடியும் என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தது.ஆனால் இப்போது முஸ்லீம்கள் கொண்டு வந்த நல்லாட்சி மாணிக்க கல்லின் பெறுமதியில் 15 % வீத வரி அறவிடுவதாக அறிவித்துள்ளது.இதனால் எமது மாணிக்க வர்த்தகர்கள் பாதிக்கப்படவுள்ளார்கள்.

இன்று எடிசலாட் நிறுவனம் ,நொலிமிட் , பெஷன் பக் போன்ற நிறுவனங்களுக்கு எதிராக தீவிர பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும் இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலில் இடம்பெறுகிறது இவற்றை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டில் இனவாதத்தை தூண்ட இவர்கள் இருவரும் போதும்... நாட்டில் இனவாதத்தை தூண்ட இவர்கள் இருவரும் போதும்... Reviewed by Madawala News on 11/20/2016 07:46:00 PM Rating: 5