Kidny

Kidny

வேற்றுமையில் ஒற்றுமை..


பல இன, மத, மொழி கலாசார பண்பாடுகள் உடைய மக்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை இலங்கை கொண்டிருந்தாலும் இந்நாட்டில் வாழும் இனங்களுக்குள்ளும், இனங்களுக்கிடையிலும் முரண்பாடுகளும் வேற்றுமைகளும்  காணப்படுகின்றன.
 
இந்த முரண்பாடுகளும் வேற்றுமைகளும் இனங்களுக்கிடையில் மேலோங்கி; இன மேலாண்மை கோலோச்சமடைந்து ஓர் இனத்தை பிரிதொரு இனம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் நோக்க முற்பட்டது. இதன் விளைவு கரைபடிந்த வரலாற்றை இலங்கையைச் சுமக்கச் செய்தது.
 
இந்நாட்டில் வாழ்கின்ற மூவின மக்களும் சமத்துவத்துடன் நிம்மதியாக வாழ வேண்டும். மாறாக, ஓரினத்தின் உரிமைகளை கேள்விக் குறியாக்கி தாங்கள் மாத்திரம் உரிமைகளையும,; சலுகைகளையும் அனுபவிக்க வேண்டும், நிம்மதியாக வாழ வேண்டும் என ஓரினம் நினைத்தால், அதற்காகச் செயற்பட்டால் எந்தவொரு இனமும் நிம்தியாக வாழ முடியாது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகள் சான்றாகவுள்ளன.. இவற்றினை உலக நாடுகள் சிலவற்றின் வரலாறுகளிலும் காணக்கூடியதாகவுள்ளது.
 
ஓர் இனத்தின் உரிமைகளும், சுதந்திரங்களும், தனித்துவ  மத சட்டதிட்டங்களும், கலாசார, பண்பாட்டு, விழுமியங்களும் கேள்விக்குட்படுத்தப்படுகின்றபோது, அவற்றைப் பாதுகாக்க அவ்வினத்தின் அரசியல், ஆண்மீக, மற்றும் சிவில் சமூகங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட வேண்டியது அவ்வினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின்;;; கடப்பாடாகும். அந்தக் கடப்பாட்டைப் பொறுப்பேற்றும் காலம் சமகாலத்தில் உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. இதில் ஒன்றுதான் முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் தொடர்பான நகர்வு என முஸ்லிம் அரசியல் அரங்கில் சுட்டிக்காட்டப்படுவதைக் காணமுடிகிறது.
 
சமகால அரசியல் அரங்கும்; முஸ்லிம்களும்
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதிய அரசியல் யுகம் இந்நாட்டில் மலர்ந்தமை குறிப்பாக சிறுபான்மை மக்கள் மத்தியில் சந்தோஷப் பெருமூச்சியை விடச் செய்தது. பல்வேறு எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கச் செய்தது. சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்;வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது. கடும்போக்காளர்களின் நெருக்குதல்களிலிருந்து விடுதலை கிடைக்கும் அவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற பல எதிர்ப்பார்ப்புகளை சிறுபான்மை சமூகம் எதிர்பார்த்தது. இந்நிலையில், அங்காங்கே இடம்பெறுகின்ற சம்பவங்கள் அவ்வெதிர்பார்ப்புக்களில் சந்தேகங்களை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
 
இவற்றுக்கு மத்தியில், தற்போதைய அரசியல் நகர்வுகள், இந்நகர்வுகளினூடாக முன்னெடுக்கப்படும் புதிய அரசியல் யாப்பு மாற்றம் மற்றும் அதனோடு இணைந்த ஏனைய விடயங்களில் ஏற்படுத்தப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் சம கால அரசியல் அரங்கில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.;; இவை; சிறுபான்மை இனங்களைச் சிந்திக்கச் செய்யவும் அதற்காக ஒன்றுபட்டுச் செயற்படவும் வழியை உருவாக்கியுள்ளன.
 
அந்தவகையில, சிறுபான்மை சமூகமான   முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துப்படுத்துகின்ற அசியல் கட்சித் தலைமைகளும், பிரதிநிதிகளும், ஆண்மீக அமைப்புக்களின் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புக்களும் தங்களுக்குள் காணப்படுகின்ற  முரண்பாட்டு மனப்பாங்குகளுக்கு மத்தியில், எதிர்கால முஸ்லிம் சமூகம் தனித்துவ மத அடையாளங்களுடன் வாழ்வதற்காக, இச்சமூகத்துக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், இருக்கின்ற உரிமைகளையும் தனித்துவ  கலைகலாசார பண்பாடு விழுமியங்களுக்களையும் பாதுகாப்பதற்கும் வேண்டுமைகளுக்குள் ஒன்றுமைப்படுவது அவசியமாகவுள்ளது. இறைவன் படைத்த ஐயறிவு கொண்ட பறவைகள் முதல் ஊர்வன வரை ஒற்றுமையைப் புலப்படுத்துகின்றன. ஆனால,; சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய ஆறறிவு கொண்ட நாம் அந்த ஒற்றுமைக்காக ஏன் முயற்சிக்கக் கூடாது.
 
காகங்களினாலும் எறுப்புகளினாலும் செயற்பாட்டு ரீதியாக ஒற்றுமையை வெளிப்படுத்த முடியுமென்றால், பகுத்தறிவுகொண்ட மனிதவர்க்கமான நாம், அதிலும், ஓரே இறைவனையும், ஒரே நபியையும், ஒரே குர்ஆணையும,; ஓரே கிப்லாவையும் பின்பற்றுகின்ற எம்மால் ஏன் ஒற்றுமையை வெளிப்படுத்த முடியாது. ஒற்றுமைக்கான முயற்சிகளுக்கு ஏன் ஒத்துழைப்பு வழங்க இயலாது. அதற்காக ஏன் நமது வளங்களைச் பயன்படுத்த முடியாது.
 
புதிய அரசியலமைப்புகான வரைபுகளும்,  தேர்தல் முறை மாற்றத்திற்கான செயற்பாடுகளும், முஸ்லிம் தனியார் சட்டத் திருத்ததிற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்ற இக்கால கட்டத்திலும் நாம் நமக்குள் காணப்படும். கட்சி அரசியல், ஆண்மீகக் கொள்கைள், பிராந்திய ,பிரதேச வேறுபாடுகள், பதவி ஆசைகள் என்பவற்றுக்காக ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, எதிரும் புதிருமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
சமகால அரசியல்; நகர்வுகளின் வெளிப்படைத்தன்மை. மற்றும் இரகசியத் திட்டங்களையும், பொறிமுறைகளையும் விளங்கிக்கொள்ளது சுயநலன்களுக்காக முரண்பட்டுக் கொண்டு தத்தமது நிலைகளையும் தளங்களையும் தக்கவைத்துக் கொள்வதற்காகச் செயற்படுவதானது எதிர்கால சந்ததிகளுக்கச் செய்யும் மிகப் பெரும் வரலாற்றுத் துரோகமாக அமைவதுடன் இந்த அரசியல் செயற்பாடுகள் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக அமையுமாயின் அவற்றிலிருந்து மீள்வதற்கு எத்தனை தாசப்தங்கள் பிராயச்சித்தம் செய்ய வேண்டி ஏற்படும் என்பதை எண்ணிப்பார்க்க முடியாது.
 
ஏனெனில், கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களினூடதாக சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அல்லது புறக்கணிப்புக்களுக்கான தீர்வுகள் இன்னும் முறையாகக் கிடைக்கவில்லை.
 
அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்ட சாhத்வீகப் போராட்டங்கள் தோல்வி கண்ட நிலையில் அவை ஆயுதப் போராட்டங்களாக உருவெடுத்து அதன் இலக்கு திசைமாறி சென்றதனால் தோல்வி கண்டது. அவ்வாறான காலகட்டத்திற்குள் இலங்கை மீண்டும் செல்லக் கூடாது என்ற எல்லோரினதும் பிராத்தனைகளுக்கு மத்தியில் இழந்த உரிமைகளைப் பெற்றுகொள்வதற்காக தமிழ் மக்கள் சார்ப்பாக சார்த்வீகப் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், முஸ்லிம்கள் எதிர்நோக்குpன்ற பிரச்சினைகளுக்கும் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகளுக்கும் இராஜதந்திர ரீதியாகவும் அகிம்சை வழியிலும் நடவடிக்கைகளை முன்னெடுத்து தீர்வைப் பெற்றுக்கொள்ள இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமைப்பட்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அத்தோடு தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்கள் சார்பான பொதுப் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள சகோதர தமிழ் மக்களோடும் தலைமைளோடும் ஒன்;றுபட்டு செயற்படுவதும் காலத்தின் தேவையாகும்.
 
முஸ்லிம்களும் சமகால பிரச்சினைகளும்.
சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டின் எட்டுத்திசைகளிலுமுள்ள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தாலும் அப்பிரச்சினைகளின் தாக்கம் எத்தகையது என்பது தொடர்பில் ஆய்வுகளோ பூரண ஆவணப்படுத்தல்களோ முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை.
 
கடந்த மாதம் 10ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள்  தொடர்பான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஷேட அறிக்கையாளர் ரீட்டா இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் மக்கள் சார்பிலும் முஸ்லிம்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகளும் அறிக்கைகளும் அவரிடம்  கையளிக்கப்பட்டன.
 
ஆனால், தமிழ் மக்கள் தரப்பில் அவரைச் சந்தித்த அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்களை விடவும் முஸ்லிம்கள் சார்பில் அவரைச் சந்தித்த நபர்களும், கட்சிகளும், அமைப்புக்களும் அதிகம் என்று சொல்லாhம்.
முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், உலமா சபை, முஸ்லிம் அசியல் கட்சிகளின் தலைமகள் என பல்வேறு தரப்பினர் இந்நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கைகளையும் கருத்துக்களையும் அவரிடம் முன்வைத்தனர்.
 
இருப்பினும். இந்நாட்டில் ஏறக்குறைய 10 வீதமாக வாழ்ந்து வருகின்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களினதும் பிரச்சினைகளை ஒன்று சேர்ந்து இவர்களால் ஏன் அவரிடம் சமர்ப்பிக்க முடியவில்லை. ஏன் இந்த விடயத்தில் ஒன்றுமையை வெளிகாட்ட முடியவில்லை. இவ்விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு வழிகாட்டுகின்ற உலமாக சபை கூட ஏன் சிந்திக்க வில்லை. தங்கள் தங்கள் பெயர்களிலும் அமைப்புக்கள் கட்சிகள் என்பவற்றின் பெயரில் அறிக்ககைள் ஊடகங்களை அலங்கரிக்க வேண்டும், அவரைச் சந்தித்த புகைப்படங்களும்; காணொலிகளும் வெளிவர வேண்டும் அல்லது எங்களாலும் அவரைச் சந்திக்க முடியும் என்ற தோற்றப்பாடை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி மக்களின் செல்வாக்கைப் பெற வேண்டும். என்று செயற்பட்டார்களா என வினவத் தோன்றுகிறது.
 
கடந்த காலங்களில் விட்ட தவறுகளைதத் தொடர்ந்தும் மேற்கொள்ளாது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்கும் சுய இலாபங்களுக்கும் அப்பால் முஸ்லிம் அரசியல் கட்சிகளும், ஆண்மீகத் தலைமைகளும், சிவில் அமைப்புக்களும்  சமகால, எதிர்கால முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி சமகால  அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப வேற்றுமைக்குள் ஒன்றுமைப்பட்டு செயற்பட வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகவுள்ளது.
 
வேற்றுமையில் ஒற்றுமைக்கான அவசியம்
அல்லாஹ் வழங்கிய இஸ்லாம் மார்க்கமானது முஸ்லிம்களின் சகோதரத்துவம் என்ற ஒற்றுமையில் உருவான ஒப்பற்ற வாழ்க்கை நெறி. இருந்தும், இதன் ஒழுக்கப் பண்புகளையும் மாண்புகளையும் சிதைத்து சின்னாபின்னமாக்கி சுய இலாபங்களுக்காகத் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காகவும், கட்சி ரீதியாகவும், ஆண்மீகக் கொள்கைகைள் ரீதியாகவும், அமைப்புக்கள் ரீதியாகவும் தனித்தனியே பிரிந்து செயற்பட்டு ஒருவரை ஒருவர், அமைப்புக்களை அமைப்புக்கள், கட்சிகளை கட்சிகள் காட்டிக்கொடுக்கும் நிலை காணப்படுகிறது.
 
முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் விரோதிகளினால் முஸ்லிம்களைக் கேவலப்படுத்தவும் கொண்டழிக்கவும் இன்று முஸ்லிம்களே உலகளாவிய ரீதியில் பயன்படுதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈராக்கிலும், சிரியாவிலும், எமனிலும் இன்னும் ஏனைய முஸ்லிம் நாடுகளிலும் இந்நிலை காணப்படுகிறது. முஸ்லிம்களை அழித்தொழிப்பற்காக அவர்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்காக முஸ்லிம் விரோதிகள் பயன்படுத்திய மிகப்பெரும் ஆயுதம்தான் முஸ்லிம்களிடையே ஒற்றுமையை இல்லாமல் ஒழித்ததாகும்.
 
அக்காலத்து இஸ்லாமிய இராஜ்ஜியங்கள் ஒன்றுமையினால் கட்டியெழுப்பப்பட்டன. ஆனால், இன்றைய முஸ்லிம் உலகு ஒற்றுமையின்மைனியால், காட்டிக்கொடுப்புக்களினால் சின்னபின்னமாகி சிதறிக்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான இளம் சந்ததியினர் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புhலியல் தொழிலாளர்களாக மாற்றப்பட்டக்கொண்டிருக்கிறார்கள், அகதிகளாகவும் அங்கவீனர்களாகவும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் காரணம் அந்நாட்டுத்தலைமைகள் முரண்பட்டு வேற்றுமைக்குள்ளாகி ஒற்றுமையை இழந்தமையாகும்.
 
சமூக ஒற்றுமை என்பது ஒரு கடமை, ஒரு வணக்கம், சமூகத்தில் வாழுக்pன்ற ஒவ்வொருவரும் தனி நபர்களுக்கிடையே பரஸ்பர அறிமுகம், புரிந்தணர்வு, ஒப்பந்தம், ஐக்கியம் இருக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும்
 
இந்த எதிர்பார்ப்;வை நிறைவேற்ற வேண்டிய முஸ்லிம்கள் பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது. பூரமாண வாழ்க்கைத் திட்டத்தை வழங்கியுள்ள இஸ்லாத்தை கௌரப்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரிச் சமூகமாக வாழ வேண்டிய முஸ்லிம் சமூகம், ஒற்றுமையென்ற கயிற்றைப் பலமாகப் பற்றிக்கொள்ளுங்கள் உங்களுக்குள் பிரிந்து விடாதீர்;கள் என நம்மை குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் வலியுறுத்தி வழிகாட்டியுள்ள நிலையில், இச்சமூகம் ஆண்மீக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இன்னும் என்னென்ன விடயங்களிலெல்லாம் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து செயற்படுவது அர்த்தமற்றது.
 
ஒற்றுமைக்கு வழிகாட்ட வேண்டிய சமூகம் நான் பிடித்த முயலுக்கு முன்று கால் என்ற நிலையில் இருந்து விடபட வேண்டும். இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்ப்வைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும். குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேற்றுமைக்குள் ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டியது காலத்தின் தேவைளாகவுள்ளது.
 
இத்தேவையை நிறைவேற்றி வைப்பதற்கானதொரு முயற்சி அண்மையில் முன்னெடுகக்கப்பட்டுள்ளது. தேசிய ஷூரா சபைக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற விஷேட சந்திப்பொன்றின்போது முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் ஒவ்வொரு மாதமும் பாராளுமன்றம் நடைபெறும் வாரங்களின் புதன் கிழமைகளில்; ஒன்று கூடி கலந்துரையாட வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீர்மானத்திற்கு ஏற்ப இச்செயற்பாடுகள் நடைபெற வேண்டும் என்பது முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
 
இருப்பினும,; பாராளுமன்றத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள், தேசிய படடடியல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள்  என 20 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், இச்சந்திப்பின்போது 7 பாராளுமன்ற உறுப்பினர்களே கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது. ஏனையவர்களுக்கு சமூக அக்கறையில்லையா அல்லது அவர்களது சொந்த அக்கறையில் கவனம் செலுத்தியதால் இச்சந்திப்பு அக்கறையற்றுப்போனதா. மக்கள் வாக்களித்து பாராளுமன்றம். அனுப்பியது மக்கள் தொடர்பான நலன்களின் பகுதிநேராத் தொழிலுக்காகவல்ல என்பதையும் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முன்னெடுப்போரோடு இணைந்து வேறுபாகளை மறந்து ஒன்றுபட்டு செயற்படவும் என்பதை உரியவர்கள் புரிந்து செயற்பட வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்பாகும்.
 
இந்நல்லாட்சியில் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு மாற்றம், புதிய தேர்தல் பொறிமுறை. முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் என்ற விடயங்களில் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்திற்கும் சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இராஜதந்திர ரீதியில்  தங்களுக்குள்ளளும், தமிழ் தலைமைகளோடும் இணைந்து செயற்படுவதற்கு முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளும், ஆண்மீகத் தலைமைகளும், சிவில் அமைப்புக்களும் தங்களுக்குள் காணப்படும்  வேற்றுமைகளை மறந்து ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டியது காத்தின் கட்டாயமும் தார்மீகப் பொறுப்பும் மக்கள் எதிர்பார்ப்பும் என்பதைச் சுடடிக்காட்டுவது காலத்தின் தேவையாகவுள்ளது.
 
வேற்றுமையில் ஒற்றுமை.. வேற்றுமையில் ஒற்றுமை.. Reviewed by Madawala News on 11/03/2016 01:41:00 PM Rating: 5